பாக்கியலட்சுமியிலிருந்து ஏன் விலகினேன்.. இரண்டே காரணம்தான்.. ஜெனிபர் பரபரப்பு விளக்கம்
சென்னை : பாக்கியலட்சுமி சீரியலிலிருந்து ஏன் தான் விலகினேன் என்பதற்கு வீடியோ போட்டு விளக்கம் கொடுத்துள்ளார் நடிகை ஜெனிபர்.
பாக்கியலட்சுமியில் ராதிகாவாக நடித்து வந்தவர் ஜெனிஃபர். தற்போது அந்த சீரியலில் இருந்து விலகியுள்ளார்.
தான் விலகியதற்கான காரணத்தை அவர் கணவருடன் வீடியோ போட்டு அழகாக தெரிவித்துள்ளார். நீங்க ஃபீல் பண்ணாதீங்க என்றும் ரசிகர்களிடம் உருக்கமாக அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாக்கியலட்சுமி பிரபலம்
பல திரைப்படங்களில் துணை கதாநாயகியாக நடித்து தற்போது சீரியலிலும் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் ஜெனிஃபர், சன் டிவியில் ஒளிபரப்பான லட்சுமி ஸ்டோர், கலர்ஸ் டிவியில் அம்மன், விஜய் டிவியில் பாக்கியலட்சுமி என பல சீரியல்களில் நடித்து இருக்கிறார் .இவருக்கு சீரியலை தாண்டியும் சமூக வலைத்தளத்திலும் ரசிகர்கள் இருக்கின்றனர்.

பாக்கியலட்சுமி சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கதை சூடு பிடித்திருக்கும் நேரத்தில் இந்த சீரியலில் ராதிகா கேரக்டரில் நடித்து வந்த ஜெனிஃபர் திடீரென விலகி விட்டார் .இதனைக் கேள்விப் பட்டதும் அவருடைய ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டனர். சீரியலில் இவருடைய கேரக்டரை பிடித்துப்போன ரசிகர்கள் இவருக்கு தொடர்ந்து ஆதரவினை கொடுத்து வருகின்றனர்.

ஒரு ஆணின் பித்தலாட்டம்
இரு பெண்களுக்கு இடையில் ஒரு ஆண் செய்யும் பித்தலாட்டங்களை எப்போது இருவருக்கும் தெரியும் என்பதை ஆவலாக காத்திருக்கும் ரசிகர்களுக்கு தற்போது இவர் இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார் என்பதைக் கேட்டதும் அதிர்ச்சியாக இருந்தது . ஆனால் என்ன மாதிரி காரணத்திற்காக இவர் வெளியேறி விட்டார் என்பதை தெரியாமல் இருந்து வந்தனர் .தற்போது அதற்கு அவர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

2 காரணம்
இதுகுறித்து அவரது கணவர் கூறுகையில், ஜெனிபர் இந்த சீரியலை விட்டு வெளியேற இரண்டு காரணம் இருக்கிறதாம். அதில் ஒன்று பெர்சனல். அதனை வேறொரு வீடியோவில் சீக்கிரத்தில் உங்களுக்கு சொல்லுவோம் என்று கூறியிருக்கிறார். மற்றொன்று இந்த சீரியலில் இவர் இதுவரைக்கும் நடித்துவந்த பாசிட்டிவ் கேரக்டர் மாறப் போகிறது. கதை வேறு மாதிரியாக மாறப்போகிறது. ஆனால் நல்ல பெயர் வாங்கி விட்டு இப்படி செய்வதற்கு உடன்பாடு இல்லை. இதனால்தான் விலகி விட்டோம் என்று கூறியுள்ளார்.

பாசிட்டிவ் ரோல்
பாக்கியலட்சுமியின் தோழியாக பாசிட்டிவ் ரோலில் நடித்து வந்த இவருக்கு இதுவரைக்கும் ரசிகர்களிடம் நல்ல பெயர் இருந்து கொண்டிருக்கிறது. இவரைப் பற்றி அதிகமான நெகட்டிவ் கமெண்டுகள் எதுவும் வந்ததில்லை .ஆனால் இனி கதை வேறு மாதிரியாக போகப்போகிறது .அதில் தன்னுடைய கேரக்டரை ரசிகர்கள் வேறு மாதிரி பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். அது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்காது . அதனால்தான் இந்த சீரியலில் இருந்து விலகினேன் என்று கூறியிருக்கிறார்.

ரசிகர்கள் ஏமாற்றம்
ஜெனிபரின் இந்த விளக்கம் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. ஆனாலும், உங்களுக்கு எங்களுடைய ஆதரவு இருக்கிறது என கூறிவருகின்றனர். இவருடைய இந்த பதிலைக் கேட்டதும் சில ரசிகர்கள் நீங்கள் போனதும் அந்த சீரியலை நாங்கள் பார்ப்பதை விட்டு விட்டோம் அதனால் சீக்கிரமாக வேற சீரியலில் பார்க்க ஆர்வமாக இருக்கிறோம் என்று கூறியிருக்கின்றனர் .

அதுவும் நல்லதுதான்
உங்கள் கேரக்டருக்கு செட் ஆகலனா அந்த சீரியலை விட்டு வெளியே வந்தது ரொம்பவும் நல்லது என்று பலரும் இவருக்கு என்கரேஜ் கொடுத்து வருகின்றனர் . அதுமட்டுமல்லாமல் ரசிகர்களுக்கு மதிப்பு கொடுத்து ரசிகர்களின் கேள்விக்கு வீடியோ வெளியிட்டதும் ரசிகர்கள் செம ஹாப்பி தான். சிலர் தன்னுடைய பர்சனல் காரணம் ஒன்று இருக்கிறது என்று இவர் கூறியிருப்பதை கேட்டதும் அப்படி என்ன பர்சனலாக இருக்கும் ,அப்போ நீங்க கன்சிவா இருக்கீங்களா அந்த நல்ல செய்தியை சீக்கிரமாக சொல்லுங்க என்றும் இவருடைய ரசிகர்கள் உரிமையாக கேட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications