வறுமையை முகத்தை விட உடல் மொழியிலேயே பிரதிபலிப்பார்! விசு இறந்த போது கமலா காமேஷ் அழுதது ஏன்?
சென்னை: கமலா காமேஷ் இறந்துவிட்டதாக வதந்தி பரவிய நிலையில் அவர் திரைத்துறைக்கு வந்தது எப்படி என்பது குறித்தும் அவரது நடிப்பு குறித்தும் பார்க்கலாம்.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது: திருமதி.கமலா காமேஷ் மறைந்து விட்டதாக வதந்தி ... கமலா காமேஷ்... கமலாவைத் தெரியும். காமேஷை தெரியுமா?..

கமலா காமேஷ் குடிசை படத்தில் தான் முதன்முதலாக நடித்தார். அதில் வறுமை, ஏழ்மையில் வயிறு காய்ந்த பெண்ணாக அசத்தி இருப்பார். பின் குடும்பம் ஒரு கதம்பம் படத்தில். அதில் விளங்காத கணவனையும், ஊதாரி பிள்ளையையும் வைத்துக் கொண்டு அவர் படும் பாடு அவர் முகத்தை விட உடலில் பிரதிபலித்து விடும்.
அதனால் தானோ என்னவோ விதவைத்தாய் கதாபாத்திரத்தில் அலைகள் ஓய்வதில்லை, கடலோரக் கவிதைகள் படத்தில் பாரதிராஜா நடிக்க வைத்தார். மூன்றுமுகம் படத்தில் அடிதடி ரஜினியாக மூன்றாவது முகம் ஜான் இருப்பார். ஒரு பிள்ளை ஊதாரி என்றால் அந்த அம்மா வயிறார சாப்பிட முடியுமா?.
இதை தன் உடல்மொழியில் நிரூபிக்கும் ஒரே நடிகை கமலா காமேஷ் தான். அதனால் ஜான் ரஜினியை வளர்க்கும் பாத்திரத்தில் கமலா காமேஷை தேர்ந்தெடுத்தார்கள் போல. கமலா காமேஷின் கணவர் காமேஷ் ஒரு இசையமைப்பாளர். நாடகங்களுக்கு இசையமைத்தவர். சினிமாவில் இசையமைப்பாளராக முயற்சித்த அவருக்கு வாய்ப்போ மலேசியத் தமிழ் சினிமாவில் கிடைத்தது.
'துன்பங்கள் உறங்குவதில்லை' என்கிற அப்படத்திற்காக மலேசியா சென்று ஆறு பாடல்களை மெட்டமைத்து கொடுத்தவர்.
காமேஷ் தான் முதன்முதலில் ஆர்க்கெஸ்ட்ரா என்கிற மெல்லிசைக் கச்சேரியை துவங்கியவர். விசு, மௌலி நாடகங்களுக்கு இவர் தான் இசை. சம்சாரம் அது மின்சாரம் படத்தின் ஒரிஜினலான 'உறவுக்கு கை கொடுப்போம்' நாடகத்துக்கு காமேஷ்தான் இசை. சினிமாவில் வாய்ப்புத் தேடினாலும் காமேஷ் இசையமைத்து வெளிவந்த படம் 'குடிசை'.
குடிசை படம் பற்றி பேச வந்த காமேஷின் நண்பர்களான குடிசை ஜெயபாரதி, ராபர்ட்-ராஜசேகர் கமலா காமேஷைப் பார்த்ததும் அதில் நாயகிப் பாத்திரமான சின்னம்மா பாத்திரத்தில் நடிக்க வைக்க கேட்க காமேஷ் சம்மதிக்க அப்படித்தான் கமலா காமேஷ் சினிமா என்ட்ரி.
விசுவின் தைரியத்தால் குடும்பம் ஒரு கதம்பம் நாடகத்தில் நடிக்க அது ஹிட். நாயகி சுஹாசினி பின்னாளில் அதுவே படமாகும்
போது கமலா ரோலில் நடித்தார். அப்படி குடும்பம் ஒரு கதம்பம் முதல் படம். 2வது அலைகள் ஓய்வதில்லை, மூன்று முகம், சிம்லா ஸ்பெஷல் என தொடர் ஹிட்டுகள். காமேஷ் ஒரு நாள் தவறிய போது கமலாவுக்கு காமேஷ் காட்டிய சினிமா நடிப்பு தான் கை கொடுத்தது. மற்ற அம்மா நடிகைகள் நோய்வாய்ப்பட்டு படுத்திருப்பது போல் கஷ்டப்பட்டு நடிக்க வேண்டும்.
கமலா காமேஷ் சும்மா படுத்திருந்தாலே போதும். குரல் கூட அதிர்ந்து பேசாத சுபாவம். தமிழ்நாட்டின் 80 சதவீத மனைவிகளின் நிலையை சுபாவத்தாலும், குரலாலும் பிரதிபலித்த ஒரே நடிகை. கமலாவைப் போன்ற மனைவிகளை நாம் அன்றாட வாழ்வில் நிறைய இந்த தமிழ் மண்ணில் பார்த்திருக்கலாம்.
விசு இறந்த போது கமலா அழுது வெளியிட்ட வீடியோ எல்லோரும் பார்த்திருக்கலாம். விசு அந்த அளவுக்கு உதவி இருக்கிறார். சினிமா உலகில் ரசிகனுக்கு பாவம் தோன்றும் நடிகை கமலாவாகவே இருப்பார். மகள் உமாவோ நேர் எதிர். சன்டிவி, ராஜ்டிவி வந்த புதிதில் உமாவின் மிமிக்ரி அவ்வளவு புகழ்வாய்ந்த ஒன்று. உமாவும் நல்ல நடிகை என பின்னாளில் புரிய வைத்து விட்டார்.
மயிலாடுதுறையைச் சேர்ந்த வானாதிராஜபுரம் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் கமலா என்பது எனக்கு ஸ்பெஷல் செய்தி தான்... யாராவது அவருக்கு பாராட்டு விழா நடத்தலாம்... இவ்வாறு செல்வன் அன்பு தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications