ஒல்லிக்குச்சியாக இருந்த நடிகை நளினி.. திடீரென குண்டாக மாறியது ஏன்? திருவேற்காட்டில் நடந்த அதிசயம்!
சென்னை: தனது உடல் முன்பு ஏன் குண்டாக இருந்தது என்பதை நடிகை நளினி தெரிவித்துள்ளார். பிறகு தடாலடியாக ஒல்லியாக ஆனதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் படங்களை போல் ராமராஜனின் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அவரும் நடிகை நளினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ராமராஜன் 1980களில் முன்னணி நடிகராக வலம் வந்தார்.

பின்னர் திரைத்துறையில் சற்று பின்னடைவை சந்தித்தார். இதையடுத்து சாமானியன் என்ற படத்தின் மூலம் அவர் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். ராமராஜனின் திரையுலகை புரட்டி போட்ட படம் கரகாட்டகாரன். நாட்டு புற கலையை மையமாக கொண்டு எடுத்த படம் இது.
ராமராஜன் நடித்த அனைத்து படங்களுமே வெற்றியை குவித்தன. ரஜினி கமலுக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் இவருக்கும் இருக்கிறது. இவ்வாறு உச்சத்தில் இருந்த போது நளினியும் ராமராஜனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அருண், அருணா ஆகிய ஒரு மகனும் மகளும் உள்ளனர்.
பல ஆண்டுகள் ஜோடியாக நடித்த நிலையில் ராமராஜனும் நளினியும் பிரிந்துவிட்டனர். இந்த நிலையில் நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு ராமராஜன் படத்தில் நடிக்க வந்துள்ளார். அவருடை மனைவி நளினி கூறியிருப்பதாவது: நான் எத்தனை பிறவி எடுத்தாலும் அவர்தான் என் கணவர்.
நானும் அவரும் நன்றாக பேசுகிறோம். இப்போது நமக்கு எதற்கும் நேரமில்லை. நாங்கள் பிரிந்தது நல்லதுதான். குழந்தைகள் தந்தையுடன் இருப்பது நல்லதல்ல என ஜாதகத்தில் உள்ள பிரச்சினையால் விவாகரத்து செய்தோம். திருமணத்திற்கு பிறகு குழந்தை பேறு தந்தைக்கு நல்லதல்ல என ஜோதிடர்கள் கூறிவிட்டனர்.
குழந்தை வளர வளர தந்தையின் வாழ்க்கை பிரிகிறது. இதற்காக ராமராஜன் எத்தனையோ ஜோதிடர்களை பார்த்து அவர்களும் அப்படியே கூறியதால் ஒரு கட்டத்தில் நிலைகுலைந்து போனார். மேலும் குழந்தைகளை யாருக்காவது தத்து கொடுத்துவிடலாம் என நான் கூறினேன். ஆனால் அதற்கு அவர் ஒப்புக் கொள்ளவே இல்லை. இதுதான் நானும் அவரும் பிரிந்ததற்கு காரணம் என நளினி தெரிவித்துள்ளார்.
இவர்களுக்கு 1987 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. 13 ஆண்டுகள் திருமண வாழ்க்கையை வாழ்ந்த இவர்கள் பிரிந்துவிட்டனர். நளினிக்கு ஜோதிடத்தில் அதீத நம்பிக்கை. அது போல் கடவுள் நம்பிக்கையும் உள்ளது. அவர் திருவேற்காடு கருமாரியம்மனின் தீவிர பக்தை. வீட்டில் பெரிய அளவில் கருமாரியம்மனின் படத்தை வைத்திருந்தாராம்.
ராமராஜனின் குடும்பத்தினர் கருப்பசாமியை வழிபடுவார்களாம். அதனால் அம்மன் வீட்டிற்கு ஆகாது என கருதி நளினியின் மாமியார் அந்த அம்மன் படத்தை தூக்கி வெளியே போட்டுவிட்டாராம். இதன் பிறகுதான் ஒல்லியாக இருந்த நளினியின் உடல் பெருத்ததாம். பிறகு "என் அம்மாவை (கருமாரி) ஒரே ஒரு முறை பார்க்க வேண்டும்" என கணவரிடம் கெஞ்சினாராம்.
பிறகு திருவேற்காடுக்கு ஒரு முறை போய்விட்டு வந்தாராம். உடனே அவருடைய உடல் மெலிந்துவிட்டதாம். பின்னர் அந்த படத்தை வைத்துதான் வழிபட்டு வந்ததாக நளினி பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார். அது போல் நளினி ஏற்கெனவே உடுத்திய புடவைகளை மீண்டும் உடுத்தவே மாட்டாராம். புடவைகளை வைக்கவே ஒரு பிளாட் எடுத்து அங்கு வைத்திருக்கிறாராம்.












Click it and Unblock the Notifications