Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருநெல்வேலி பெண்ணை மருமகளாக்க காரணமே இதுதான்.. முதல் முறை வெளிப்படையாக பேசிய நெப்போலியன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் நெப்போலியன் தன்னுடைய மூத்த மகன் தனுஷூக்கு தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலி அக்ஷயாவை நிச்சயம் செய்திருக்கும் நிலையில் தான் வெளிநாட்டில் வாழ்ந்து வந்தாலும் தமிழ்நாட்டு பெண்ணை திருமணம் செய்ய காரணம் இதுதான் என்று நெப்போலியன் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த சில வாரங்களாகவே நடிகர் நெப்போலியன் குடும்ப விஷயம் பற்றிய செய்தி தான் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. நடிகராக மட்டுமல்லாமல் அரசியல் பிரமுகராகவும் தமிழகத்தில் ஜொலித்த நெப்போலியன் இப்போது குடும்பத்தோடு அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்கிறார். சினிமாவில் 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஆரம்பத்தில் இவர் வில்லனாக அறிமுகமாகி பிறகு கதாநாயகனாக மக்கள் மனதில் இடம் பிடித்திருந்தார்.

Television Napoleon

அதற்கு பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நிலையில் தான் கே.என் நேருவின் அக்கா மகனான நெப்போலியன் அரசியலில் குதித்தார். எம்எல்ஏவாக தொடங்கிய தன்னுடைய அரசியல் பயணத்தால் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார். ஆனால் தன்னுடைய மூத்த மகன் தனுஷுக்காக அரசியல் மற்றும் சினிமா எல்லாவற்றையும் விட்டு விலகி இப்போது அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்கிறார். நெப்போலியன் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்திருந்த நிலையில் இந்த தம்பதிக்கு தனுஷ் மற்றும் குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

அதில் மூத்த மகன் தனுஷ் நான்கு வயதில் இருக்கும் போதே தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் அவருக்கு பல்வேறு சிகிச்சைகள் அளித்தும் அதில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லாததால் அமெரிக்காவில் குடும்பத்தோடு செட்டில் ஆகி அங்கு பிசினஸ் செய்து வருகிறார். ஆனால் தனுஷ் தசை சிதைவால் பாதிக்கப்பட்ட மற்ற குழந்தைகள் போல இல்லாமல் அதிலிருந்து போராடி படித்து தன்னுடைய அப்பாவின் பிசினஸுக்கு சப்போர்ட்டாகவும் இருந்து வருகிறார்.

Television Napoleon

இந்த நிலையில் 25வது வயதாகும் தனுஷுக்கு திருமணம் செய்வதற்காக நெப்போலியன் முயற்சி எடுத்து இருக்கிறார். அந்த நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியை சார்ந்த அக்ஷயா என்ற பெண்ணோடு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வீடியோ காலில் தனுஷ்க்கும் அக்ஷயாவிற்கும் எங்கேஜ்மென்ட் நடைபெற்றது. அப்போது தனுஷ் விமானத்தில் பயணிக்க முடியாது என்பதால் அவர் அமெரிக்காவில் இருக்க, திருநெல்வேலிக்கு நெப்போலியனும் அவருடைய மனைவி மற்றும் உறவினர்களும் வந்து எங்கேஜ்மென்டை வீடியோ காலில் செய்திருந்தனர்.

இது இணையத்தில் பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. நெப்போலியன் தன்னுடைய மகனுக்காக எடுத்த முடிவு சரி என்று ஒரு சிலர் பேசிக் கொண்டிருக்கின்றனர். இன்னும் ஒரு சிலர் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட தனுஷால் திருமண வாழ்க்கையில் ஈடுபட முடியாது அதனால் ஒரு பெண்ணின் வாழ்க்கையை நெப்போலியன் அழிக்கிறார், அந்தப் பெண் பணத்திற்காகத்தான் நெப்போலியன் மகனை திருமணம் செய்து வருகிறார், என்றெல்லாம் விமர்சித்து வருகிறார்கள்.

ஆனாலும் தனுஷ் மற்றும் அக்ஷயா இருவரும் ஆரம்பத்தில் வீடியோ கால் மூலமாக பேசி அவர்கள் இருவருக்கும் ஒரு புரிதல் ஏற்பட்ட பிறகு தான் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக நெப்போலியன் நெருங்கிய வட்டாரத்தினர் கூறி வருகின்றனர். ஆனாலும் நெப்போலியன் தன்னுடைய மகன் நிச்சயதார்த்த பங்க்ஷனில் தான் எதற்காக தமிழ்நாட்டுப் பெண்ணை மருமகளாக ஆக்கபோகிறேன் என்று பேசி இருக்கிறார். அந்த வீடியோ தான் இப்போது எனக்கு வைரலாகி வருகிறது.

அதில் நெப்போலியன் நான் கடல் கடந்து வாழ்ந்தாலும் என்றும் தமிழை மறக்காதவன். தமிழ் கலாச்சாரத்தை நான் மறக்காதவன். என் மகன்களையும் தமிழ் கலாச்சாரத்தோடு தான் வளர்த்து வருகிறேன். நான் எந்த தேசத்தில் இருந்தாலும் என்னுடைய குடும்பத்தில் என் மருமகள் தமிழ்நாட்டு பெண்ணாக தான் இருக்க வேண்டும் என்று தான் நான் நினைத்தேன். எனக்கு பணம் காசு முக்கியம் கிடையாது. என்னுடைய மருமகள் என்னுடைய அடுத்த வாரிசு அதனால் தான் நான் தமிழ்நாட்டு பொண்ணை என்னுடைய மருமகளாக மாற்றி இருக்கிறேன் என்று அதில் பேசி இருக்கிறார். ஏற்கனவே நெப்போலியன் அமெரிக்காவில் வாழ்ந்து வந்தாலும் தமிழ் பங்க்ஷன் எல்லாவற்றையும் குடும்பத்தோடு கிராண்டாக கொண்டாடி விடுகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+