கமல்ஹாசன் செயலால் கதறி அழுத மனோபாலா..காரணம் இதுதானா? ரகசியத்தை உடைத்த நடிகை
சென்னை: நடிகர் மனோபாலா பற்றி நடிகை சுஹாசினி சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.
நடிகர் மனோபாலாவுக்கும் கமல்ஹாசனுக்கும் இருந்த பிரச்சனையின் காரணமாக இருவரும் சில காலம் பேசாமல் இருந்திருக்கின்றனர்.

ஆரம்பத்தில் மனோபாலாவிற்கு அடைக்கலம் கொடுத்தது கமல்ஹாசன் தான். ஆனால் பிறகு கமல்ஹாசன் செய்த செயலால் பலமுறை மனோபாலா அழுததாக சுஹாசினி கூறி இருக்கிறார்.
மனோபாலா தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த கலைஞர். சமீபத்தில் அவர் மரணம் அடைந்தது இப்ப வரைக்கும் அவருடைய ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் அவர் வருத்தப்பட்ட ஒரு நிகழ்வு பற்றி சுஹாசினி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அந்த வீடியோ பலரால் பகிரப்பட்டு வருகிறது.

ஒரு இயக்குனராக அறிமுகமான மனோபாலா பிறகு தயாரிப்பாளராக மாறி அதைத்தொடர்ந்து நடிகராகவும் பலருக்கும் பரிச்சயமாக மாறி இருந்தார். இந்த நிலையில் இயக்குனராக மனோபாலா இருந்த காலகட்டத்தில் கமல்ஹாசன் வீட்டில் தான் தங்கி இருந்தார். அவருடைய வீட்டில் பல மாதங்கள் இருந்ததாகவும் கமல்ஹாசனுடைய மனைவிதான் தனக்கு சாப்பாடு கொடுத்ததாகவும் பேட்டி ஒன்றில் மனோபாலா கூறி இருந்தார்.
ஆனால் ஒரு காலகட்டத்தில் மனோ பாலாவும் கமலும் இருவரும் பேசிக் கொள்வது இல்லையாம். இதில் கமல் தான் மனோபாலாவை அப்படியே ஒதுக்கி விட்டாராம். மனோபாலா இருக்கிறார் என்றால் அந்த இடத்திற்கே கமல் வர மாட்டாராம். மனோ பாலா இருக்கும் பக்கத்தை கூட திரும்பிப் பார்க்காமல் முகத்தை திருப்பிக் கொண்டு கமல் பலமுறை சென்று இருக்கிறாராம்.

அந்த நிலையில் சுஹாசினி இடம் சென்று மனோபாலா கமலை என்னிடம் பேச சொல்லுங்கள் என்று அழுது இருக்கிறாராம். உங்கள் சித்தப்பா உலகத்தில் எல்லோரிடமும் பேசுகிறார். என்கிட்ட பேச மாட்டேன் என்கிறார் என்று கூறியிருக்கிறாராம். அதோடு சுஹாசினி பேசுகையில் மனோபாலா எப்போதும் மனதில் பட்டதை பேசி விடுவார். அப்படித்தான் ஏதாவது கமல் படம் பற்றி அப்போது பேசியிருப்பார். அதனால் சண்டையாகி இருக்கலாம் என கூறி இருக்கிறார்.
ஆனால் மனோபாலாவின் கடைசி காலகட்டத்தில் கமல்ஹாசன் மீண்டும் அவரோடு பேசி பழகி வந்ததாகவும் சுஹாசினி கூறி இருக்கிறார். அதனால் தான் மனோபாலாவின் மரண செய்தி கேட்டதும் தன்னுடைய வருத்தத்தை சமூக வலைத்தளர் பக்கங்களில் உருக்கமாக கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications