இந்த மாற்றத்திற்கு காரணம் இதுதான்.. வருத்தமாகவும் வெறுப்பாக இருக்கிறது.. மனம் திறந்த ராஜா ராணி ரியா
ராஜா ராணி சீரியலில் தன்னிடம் சொல்லாமல் தான் மாற்றம் செய்து இருக்கிறார்கள் என்று ரியா தற்போது கூறி இருக்கிறார்.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் சந்தியாவாக நடித்து வந்த ரியா மாற்றப்பட்டதற்கு காரணத்தை பற்றி முதல் முறையாக அவர் கூறியிருக்கிறார்.
தன்னிடம் சொல்லாமல் தான் வேறு நடிகையை மாற்றி விட்டார்கள் என்று ரியா கூறியிருக்கிறார்.
சம்பந்தப்பட்டவர்களிடம் தான் பேசியதற்கு கம்யூனிகேஷன் பிரச்சனைன்னு சொல்றாங்க என்று வருத்தத்தோடு ரியா விளக்கம் கொடுத்திருக்கிறார்.

தொடரும் இவருக்கு பதில் இவர்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீசன் 2 சீரியல் ஒரு சில வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் இவருக்கு பதில் இவர் என்று பல கேரக்டர்கள் மாறிவிட்டனர். குறிப்பாக கதாநாயகி அதற்கு பிறகு வில்லி கேரக்டரில் நடித்த வி ஜே அர்ச்சனாவும் இருந்தார் அதைத்தொடர்ந்து இரண்டாவது முறையாக சந்தியா கேரக்டரில் நடித்து வந்த ரியா சில தினங்களுக்கு முன்பு வீடியோ வெளியிட்டு தானும் இந்த சீரியலில் இருந்து விலகி இருப்பதாக தகவல் தெரிவித்து இருந்தார்

வெளியான தகவல்கள்
ரியா விளக்கம் தெரிவித்து வீடியோ வெளியிட்டு அடுத்த நாளே புதிய சந்தியாவாக ஆஷா கவுடா நடித்த எபிசோடுகள் ஒளிபரப்பாக தொடங்கியது. இது ரசிகர்களின் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது. தொடர்ந்து எதனால் இந்த மாற்றம் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பல்வேறு வதந்திகளும் கிளம்பி கொண்டிருக்கிறது. அதில் பலர் ரியா வெளியூர் சென்று இருந்த நேரத்தில் சூட்டிங் கூப்பிட்டாங்க அவரால் வர முடியவில்லை. ஆனாலும் கைவசம் ஒளிபரப்ப வேண்டிய எபிசோடுகள் இல்லாததால் உடனடியாக சூட்டிங் வரச் சொல்லி யூனிட் வற்புறுத்த, என்னால் அப்படி உடனடியாக வர முடியாதுன்னு அவங்க சொன்னதாகவும் அப்படின்னா நாங்க வேற ஹீரோயினை கம்மிட் செய்வது தவிர வேற வழியில்லை என்று ஆஷா கமிட் ஆனதாகவும் சிலர் கூறி வந்தனர்.

சூட்டிங் ஷெட்யூல்
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ரியா ஹீரோயின் மாற்றம் தொடர்பாக என்கிட்ட யாரும் எதுவுமே சொல்லவில்லை. எனக்கு தெரியாம தான் இந்த மாற்றம் நடந்திருக்கிறது. அதாவது ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதியில் இருந்து 30 ஆம் தேதி வரைக்கும் தான் சீரியலுக்கான சூட்டிங் ஷெட்யூல். ஒன்று முதல் 14ஆம் தேதி வரை எனக்கு சூட்டிங் ஷெட்யூல் கிடையாது. சூட்டிங் இல்லாத நேரத்தில் நான் எனக்கான பர்சனல் வேலைகள் மற்றும் வெளியூர் போற திட்டமும் வைத்திருப்பேன்.

ஒண்ணுமே புரியல
என்னுடைய திட்டத்தைப் பற்றி ஒரு மாதத்திற்கு முன்பாகவே யூனிட்டுக்கு தெரிவித்து இருந்தேன். அப்போ எல்லாம் சரின்னு தான் சொன்னாங்க. ஆனா என்ன நடந்ததுன்னு தெரியல. எனக்கு தெரியாமலே டக்குனு ஆளை மாத்திட்டாங்க. ஏன் என்ன நடந்துச்சுன்னு என நான் சம்பந்தப்பட்டவங்க கிட்ட கேட்டதுக்கு "கம்யூனிகேஷன் பிரச்சனைன்னு" சொல்றாங்க. இந்த விஷயத்தில் எனக்கு ஒண்ணுமே புரியல. ரொம்ப வருத்தமாகவும், வெறுப்பாகவும் இருக்கிறது. அதனால் இந்த விஷயம் தொடர்பாக மேற்கொண்டு எதுவும் பேச வேண்டாம் என்று நான் முடிவு செய்து விட்டேன் என்று வருத்தத்தோடு கூறி இருக்கிறார்.
-
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி சதி! உண்மைகளை உளறிய மனோஜ், ஜெயிலுக்கு போகும் விஜயா! மீனா செய்த செயல் -
சஞ்சய் 4 வருஷமாக படும்பாடு.. விஜய் நிஜ ஹீரோ இல்ல, தந்தையாக தோற்று விட்டார்! பிரபலம் ஆதங்கம் -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
விஜய் பற்றி என்னால் தப்பா பேச முடியாது.. ஏனென்றால்? ஓபனாக பேசிய சுந்தர் சி.. பாராட்டும் தவெக ரசிகர்கள் -
அந்த சம்பவத்தால் விஜய் அப்பாவிடம் அழுதாரு.. கோபத்தில் SAC செய்த சம்பவம்! நான் கூடவே இருந்தேன்! பிரபலம் ஓபன் -
சங்கீதா சொன்னது தான் உண்மையா? விஜயின் சொத்து பட்டியலை சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள்! அடுத்த பஞ்சாயத்து -
Happy Raj OTT: ஓடிடிக்கு வரும் ஜிவி பிரகாஷின் ஹேப்பி ராஜ்... எந்த தளத்தில், எப்போ பார்க்கலாம்? லீக்கான தகவல் -
அறந்தாங்கி நிஷா ஓபனாக சொன்ன ஒரு வார்த்தை.. அறிவே இல்லையா இப்படியா பேசுறது? மேடையிலேயே திட்டிய நடிகர் -
நடிகர் பிரகாஷ் ராஜின் அம்மா திடீர் இறப்பு.. இவ்வளவு பெரிய சோகங்களை கடந்து வந்தவரா அவர்! நெகிழ வைத்த கதை










Click it and Unblock the Notifications