பழி ஒரு பக்கம்! பாவம் ஒரு பக்கம் ! ரஜினிகாந்த் மீது சத்யராஜுக்கு வெறுப்பு ஏன்?
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் மீது நடிகர் சத்யராஜுக்கு என்ன கோபம்? சிவாஜி படத்தில் நடிக்க மறுத்தது ஏன்? என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவரது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கூலி படத்தில் சத்யராஜ், ரஜினியுடன் நடிக்க இருப்பதாக செய்திகள் வருகின்றன... சத்யராஜ் நடிக்க சான்ஸ் தேடி அலைஞ்ச காலங்களில் எஸ்.பி முத்துராமனை சந்தித்தார்.

அது எஸ்.பி. முத்துராமன் 'ஒருகோவில் இரு தீபங்கள்' படத்துக்கான டெஸ்ட். அதில் கலந்து கொண்ட சத்யராஜ் சிவாஜியின் 'வானம் பொழிகிறது' கட்டபொம்மனாக நடித்துக் காட்டினார். முத்துராமனோ இதில் சிவாஜி தான் தெரிகிறார் உங்க தனித்துவமாக ஏதாவது செய்து காட்டுங்க என்ற போது நைஸாக நழுவி விடுகிறார்.
அப்படி நழுவிய சத்யராஜை தன் எல்லா படங்களிலும் ரோல் கொடுத்த நடிகர் ஒருத்தர் இருந்தார். அது தான் ரஜினிகாந்த். மூன்று முகம் படத்தில் அம்பர்நாத் என்கிற செந்தாமரையிடம் அடியாளாக 'தாடி ராஜ்' கதாபாத்திரத்தில் நடித்தார் சத்யராஜ். அதில் ஜான் ரஜினியை முகத்தோடு வழித்து தன் தலையில் நெட்டி முறித்துக்கொண்டு ரஜினியை பாராட்டும் சத்யராஜ் ரஜினியின் கன்னத்தில் முத்தம் கூட கொடுப்பார்.
மூன்று முகம் படம் ஹிந்தியில் 'ஜான் ஜானி ஜனார்த்தன்' என வந்தபோது அதில் தாடிராஜ் கேரக்டரே கிடையாது. பின் வந்த தம்பிக்கு எந்த ஊரு படத்தில் சுலக்ஷணாவின் கணவனாகவும், பாயும் புலி படத்திலும் நல்ல பெயரெடுத்தார் சத்யராஜ். நான் மகான் அல்ல படத்தில் ரஜினியோடு ஜெகன் என்கிற வில்லன் பாத்திரத்தில் அன்று நழுவிய எஸ்.பி.முத்துராமனின் படத்திலேயே நடித்தார்.
நான் சிகப்பு மனிதன் படத்தின் மெயின் வில்லன் 'மோகன்ராஜ்' சத்யராஜ் தான். பின்னாளில் சத்யராஜ் மாதிரியே நடித்துக்கொண்டு ஒரு வில்லன் வந்தார். அவர் பெயர் மோகன்ராஜ். கேரளத்தில் கீரிக்காடன் ஜோஸ் என்று மோகன்ராஜ் புகழப்பட்டார். ரஜினியின் மிஸ்டர் பாரத்தில் சத்யராஜ் இரண்டாவது நாயகன் போல வந்ததால் வில்லனாக அப்போது புதிதாக வந்திருந்த ரகுவரன் இறங்கினார்.
பின் பல படங்களுக்கு ரகுவரனே ரஜினியின் வில்லனாக இருந்தார். ரஜினியின் நூறாவது படமான 'ஸ்ரீ ராகவேந்திரர்' படத்தில் சத்யராஜ் நவாபாக நடித்தார். அவருக்கு ஒரு அசத்தலான பாடல் ஒன்றை தந்திருந்தார் ரஜினி. மக்பூல் கானாக சத்யராஜ்-சில்க்(என்று நினைக்கிறேன்) நடித்த 'உனக்கும் எனக்கும்'பாடல் செமயான பாடல். ஆனால் கடைசி நேரத்தில் ஸ்ரீ ராகவேந்திரர் போன்ற ஆன்மீகப் படத்தில் இந்த கவர்ச்சிப் பாடல் வேண்டாம் என தூக்கியது கே.பாலச்சந்தர்.
ஆனால் ரஜினி தான் தூக்கியதாக சத்யராஜிடம் ஓதியவர்கள் உண்டு. காலம் சத்யராஜை நாயகனாக்கியது. ஆனாலும் ஏனோ அவருக்கு ரஜினியை பிடிப்பதேயில்லை. சத்யா மூவீஸ் படமான 'பணக்காரன்' 200 நாட்கள் ஓடி வெற்றி பெற்றதுமே அதே கம்பெனி அந்த வெற்றிக் களிப்பில் சத்யராஜை ஹீரோவாக வைத்து 'புது மனிதன்' பட பூஜையை தொடங்கியதுண்டு.
அந்த விழாவில் குத்துவிளக்கு ஏற்ற ஆர்.எம்.வீரப்பன் அழைத்தது ரஜினியைத்தான். இதே போன்று ஏவிஎம்-எஸ்.பி.முத்துராமன் டீம் ரஜினியின் 'ராஜா சின்ன ரோஜா' வெற்றிக்குப் பின் தொடங்கியது சத்யராஜின் 'உலகம் பிறந்தது எனக்காக' படத்தை.
புதுமனிதனோ, உலகம் பிறந்தது எனக்காக படமோ அவர்களுக்கு ரஜினி பட வெற்றிகளை தரவில்லை என்பதே உண்மை.
இந்த நிஜம் சத்யராஜை எரிச்சலுக்குள்ளாக்கியது. பின்னாளில் இதே ஏவிஎம் சத்யராஜிடம் சிவாஜி பட வில்லனுக்காக அணுகிய போது நடிக்க மறுத்தார் சத்யராஜ். கதாநாயகன் வில்லனாக நடித்தால் மற்ற படங்கள் பாதிக்கும் என நினைத்தாரோ என்னவோ.... ஆனால் பொது இடங்களில் ரஜினியை மறைமுகமாக தாக்கத் தொடங்னார் சத்யராஜ்.
ரஜினியின் செயல்களை படு கேவலமாக விமர்சித்து தன் கடுப்பைத் தீர்த்துக் கொண்டார். இதையெல்லாம் கேட்டுக்கொண்டு அமைதியாகவே இருந்தார் ரஜினி. அவர் இன்றும் நாயகனாகவே இருக்க. ஒரு விதத்தில் அந்த அமைதியே காரணம்.
சிவாஜி படத்தில் அன்று நடிக்க மறுத்த சத்யராஜ் பாகுபலி படத்தில் தன் தலைமேல் பிரபாஸ் கால் வைக்கும்படி அடிமையாக நடித்துக் கொடுத்ததெல்லாம் காலம் அவருக்குள் தந்த மாற்றம். தன்நிலை உணர்ந்த தருணம்.. இவ்வாறு செல்வன் அன்பு என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications