40 வயதாகியும் இன்னும் ஏங்க திருமணம் செய்துக்கலை.. தென்றல் நடிகை ஸ்ருதி ராஜ் சொன்ன பதிலை கேட்டீங்களா?
சென்னை: 40 வயதாகியும் உங்களுக்கு ஏன் இன்னமும் திருமணம் நடைபெறவில்லை என்ற கேள்விக்கு அவர் ஓபனாக ஒரு பதில் அளித்துள்ளார்.
தென்றல் சீரியலில் துளசி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ஸ்ருதி ராஜ். கேரளாவை சேர்ந்தவர். தமிழை கொஞ்சி கொஞ்சி பேசுவார். இவர் ஆபிஸ், அழகு சீரியல்களிலும் நடித்திருந்தார்.
தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு தாலாட்டு எனும் சீரியலில் நடித்து வருகிறார். இவர் கன்னடா, மலையாளம், தெலுங்கு, தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் 1996ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான மாண்புமிகு மாணவன் படத்தில் விஜய்யுடன் கல்லூரி மாணவியாக நடித்திருப்பார் ஸ்ருதி. 2009ஆம் ஆண்டு தென்றல் சீரியல் மூலம் பிரபலமடைந்தார். அதன் பிறகுதான் ஆபிஸ், அழகு சீரியல்களில் நடித்திருந்தார். 1998 ஆம் ஆண்டு இனி எல்லாம் சுகமே என்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார்.
இதைத் தொடந்து காதல்டாட் காம், மந்திரன், ஜெர்ரி, இயக்கம் ஆகிய படங்களிலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் ஸ்ருதி ராஜ். ஸ்டார் விஜய்யில் அன்னக்கொடியும் 5 பெண்களும் சீரியலிலும் அபூர்வ ராகங்களில் சீரியலிலும் நடித்திருந்தார். பிறகு 2018ஆம் ஆண்டு முதல 2020 ஆம் ஆணடு வரை அழகு சீரியலில் சுதா எனும் கேரக்டரில் நடித்திருந்தார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் தாலாட்டு சீரியலில் நடித்திருந்தார். கண்ணான கண்ணே, அருவி, பிரியமான தோழி, இலக்கியா ஆகிய சீரியல்களிலும் நடித்துள்ளார். சூப்பர் சமையல், மாத்தி யோசி, வணக்கம் தமிழா உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டுள்ளார்.
ஸ்ருதி ராஜ் 40 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இன்னமும் நடித்துக் கொண்டிருக்கிறார். இதுகுறித்து அவரிடம் கேட்ட போது அவர் கூறுகையில் திருமணம் இதுவரை செய்யாமல் இருப்பதற்கு காரணம் கேட்டால் எந்த ஒரு விஷயத்தையும் திட்டமிட்டு செய்வது கிடையாது. அப்படி திட்டமிட்டு செய்தாலும் அது சரியாக நடந்தது கிடையாது.

எனவே என் திருமணம் குறித்து நான் எதையும் யோசிக்கவில்லை. என்னை பற்றியும் எனது திருமணம் குறித்தும் எனது பெற்றோர்கள் பார்த்துக் கொள்வார்கள் என கூறியுள்ளார். அதாவது நீங்கள் ஏன் இதை கேட்கிறீர்கள். என் எதிர்காலத்தை என் பெற்றோர் பார்த்துக் கொள்வர் என கூலாக கூறுகிறாராம் ஸ்ருதி ராஜ்.












Click it and Unblock the Notifications