ஏன் உங்கள் மகள்கள் வேலைக்கு போக வேண்டும்?
சென்னை: விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் மகள்கள் கட்டாயம் வேலைக்கு போக வேண்டும் என்று நினைக்கும் அம்மாக்கள் மற்றும் அவர்களது மகள்கள் கலந்துக்கொள்ளும் விவாதம் ஒளிபரப்பாக உள்ளது.
விஜய் டிவியில் இல்லத்தரசியின் கதை என்று பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாக ஆரம்பித்து, ஒரு சில நாளில் லாக்டவுன் வந்துவிட...சீரியல் ஒளிபரப்பு நின்று போனது.
ஆனாலும், விஜய் டிவியின் ஒவ்வொரு சீரியல், நிகழ்ச்சியிலும் பாக்கியலட்சுமி சீரியலின் கதையை ஒட்டி இல்லத்தரசிகளுக்கு முக்கியத்துவம் தருவது என்று எல்லாவற்றிலும் பாக்கியலட்சுமி சீரியலுக்கான ப்ரோமோ தெரிகிறது.

இல்லத்தரசிகள் மகள்கள்
இல்லத்தரசிகளாக இருக்கும் அம்மாக்கள் தங்களது மகள்கள் கட்டாயம் வேலைக்கு போக வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்கான காரணத்தையும் இல்லத்தரசி ஸ்தானத்தில் இருந்தே சொல்கிறார்கள். உங்கள் மகள்கள் கட்டாயம் வேலைக்குப் போக வேண்டும் என்று ஏன் நினைக்கிறீர்கள் என்று நிகழ்ச்சியை நடத்தும் கோபிநாத் கேட்டதற்கு...

வேலைக்கு போயிட்டு வந்து
வீட்டில் வேலைக்கு போயிட்டு வந்து கணவர் கொடுக்கும் டார்ச்சர் இருக்கே... வீட்டில்தானே இருக்கே.. பனியன் ஏன் துவைக்கலே...சும்மாத்தானே இருந்தே இந்த லுங்கியை ஏன் துவைக்கலேன்னு எப்போ பார்த்தாலும் நாம் சும்மா இருந்த மாதிரியே கேட்பாங்க சார்னு ஒரு அம்மா பதில் சொன்னார்.

2 பேரும் வேலைக்கு
இந்த காலத்துல 2 பேரும் வேலைக்கு போனால்தான் சார் சமாளிக்க முடியும். பிள்ளைங்களை நல்லா படிக்க வைக்க முடியும் என்று ஒரு அம்மா சொன்னார்.நான் வேலைக்கு போனா என் குழந்தைங்களை யார் பார்த்துக்குவாங்கம்மா என்று ஒரு பெண் அம்மாவிடம் கேள்வி கேட்டார்.

இந்த நிலைமைக்கு
உன்னை மாதிரி குழந்தையை யார் பார்த்துப்பா.. யார் சமைப்பான்னு பார்த்து நான் வீட்டில் உட்கார்ந்து இருந்தால் நீ இந்த நிலைமைக்கு வந்து இருக்க முடியாதுன்னு அம்மா பதில் சொன்னார். இப்படி முக்கியமான விஷயங்களை விவாதிப்பதாக வரும் வார ஞாயிற்று கிழமையின் நீயா நானா நிகழ்ச்சி இருக்கிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications