"தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்" யுனிக் வாய்ஸ்! பாடகி சித்ரா சினிமாவில் இருக்க! "உல்லாச பறவை"எங்கே?
சென்னை: உல்லாச பறவை என்ற படத்தில் இடம்பெற்ற தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் என்ற பாடலை பாடியது யார் தெரியுமா? அவர் சினிமாவில் இருந்து விலகியது ஏன்? தேன் போன்ற குரலை தொடர்ந்து கேட்க முடியாமல் செய்த அந்த விதி என்ன?
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: எப்போதுமே கடவுள் நம்மை இடவலப் பாதைக்கு முன்னே கொண்டு போய் நிறுத்துவார். இப்போ நாம தான் தீர்மானிக்க வேண்டும். வலது பக்கம் போவதா?. இடது பக்கம் போவதா?. நாம் எதை எடுக்கிறோம் என்பதைப் பார்க்க கடவுளுக்கு அலாதி பிரியம். கடவுளின் விளையாட்டு.

இரு பெண்கள். இருவருமே கேரளக்கரையை சேர்ந்தவர்கள். முதலாமவரை எடுத்தால் அவர் சிறுவயது முதல் ரேடியோவில் பாட்டு கேட்டு அப்படியே பாடுபவர். கேட்டு பாட்டு பாடுவதைக் கண்ட அவரது தந்தை அடுத்துள்ள கோவில் திருவிழா போட்டிகளில் பாட வைக்கிறார். அந்தக் குழந்தை அதிலெல்லாம் பாடி பரிசுகளும், புகழ்களும் பெற தந்தைக்கு சந்தோஷம்.
இப்படி ஒரு முறை கானகந்தர்வன் யேசுதாஸ் மேடைக் கச்சேரிக்கு பாட வந்த போது வர வேண்டிய பெண் வரவில்லை. அவர் அங்கே யாராவது பாடகி இருக்கிறாரா என கேட்க ஊர்க்காரர்கள் இவர் பாடுவார் எனச் சொல்ல இவரைக் கொண்டு போய் பாட வைத்து விட்டார்கள். அப்படி யேசுதாஸ் அவர்களோடு ஏற்பட்ட நட்பில் நிறைய கச்சேரிகளில் பாடுகிறார்.
மலையாள இசையமைப்பாளர் அர்ச்சுனன் மாஸ்டர் மலையாள சினிமாவில் பாட வைக்க சினிமா இசைக்குள் நுழைகிறார். யேசுதாஸ் இளையராஜாவிடம் அறிமுகப்படுத்த ராஜா அவருக்கு மயக்கும் பாடல்களை கொடுக்க உச்சாணிக்கு செல்கிறார். ராஜா "ஒவ்வொரு முறையும் கேரளத்திலிருந்து இங்கு வந்து போவதை விட இங்கேயே வீடு பார்த்து வந்து விடுங்கள்" என அறிவுறுத்துகிறார்.
அந்த சமயத்தில் அவருக்கு இசை ஆசிரியராக அரசு வேலை வருகிறது. இப்போது இடவலப்பாதை முன் நிற்கும் அந்தப் பெண் என்ன முடிவெடுப்பார் என கடவுள் பார்க்கிறார். அவர் தான் பாடகி ஜென்ஸி. இரண்டாவது பெண்ணின் தாயும், தந்தையும் ஆசிரியர்கள். அதனால் தானும் ஆசிரியராக வேண்டும் என எண்ணத்திலிருந்தார் இவர்.
அவர்கள் ஊர் கோவில் திருவிழாவுக்கு பாடகர் எம்.ஜி.ஸ்ரீகுமாரின் சகோதரர் எம்.ஜி.ராதாகிருஷ்ணன் கச்சேரி செய்ய வருகிறார். கச்சேரி தொடங்கும் முன் அவரையும், அவர் குழுவையும் ஒரு வீட்டில் தங்க வைக்கிறார்கள். அது இந்த இரண்டாவது பெண்ணின் வீடு. அவர்கள் தங்கி இருக்கும் போது அந்த வீட்டின் இளைய மகளான இந்தப்பெண் தன் தம்பியை சமாதானப்படுத்த ஒரு சினிமாப் பாடலை பாடுகிறார்.
எம்.ஜி.ராதாகிருஷ்ணனோடு வந்த ராதாகிருஷ்ணனின் சகோதரி ஓமணக்குட்டி இதைக் கேட்டு இந்தப் பெண்ணுக்கு நானே சங்கீதம் கற்றுத் தருகிறேன் என அவருக்குப்பாட்டு சொல்லித் தருகிறார். இசை மூலம் ஆசிரியர் ஆகத் தீர்மானித்த இந்தப் பெண்ணுக்கு மேடைக் கச்சேரிகள் வாய்ப்பு வர யேசுதாஸ் குழுவில் பாடுகிறார். அப்படி சினிமாவுக்குள் நுழைந்த அவரும் இளையராஜாவிடம் வழக்கம் போல் வந்து சேர இளையராஜா அவரை பாட வைக்கிறார்.
அடுத்து பாடல்கள் பாட வைக்க ராஜா ஏற்பாடுகள் செய்ய இவரோ "பரீட்சை எழுத கேரளத்துக்கு போக வேண்டும்" எனச் சொல்ல ராஜா "அதை விட சிறந்த எதிர்காலம் இங்கே இருக்கிறது" என அறிவுறுத்துகிறார். இவரும் அதே இடவலப் பாதையில் நிற்கிறார். பரீட்சை எழுதி நல்ல வேலைக்கு போகலாம் அல்லது சினிமா பாடல்களை தொடரலாம். இப்படி எதை தேர்ந்தெடுப்பார் என கடவுள் நோக்கி இருந்த பாடகி கே.எஸ்.சித்ரா தான்.
ஜென்ஸி, சித்ரா இருவருமே உன்னதமான பாடகிகள். கடவுள் இரு ஆப்ஷன்களை இவர்களுக்கு வழங்குகிறார். ஜென்ஸி அரசு வேலையா, சினிமாப் பாடகியா என்கிற ஆப்ஷனில் அரசு வேலையை தேர்ந்தெடுத்து செல்கிறார். சித்ரா பரீட்சையா, பாட்டா என்கிற இரு ஆப்ஷன்களில் பாட்டை தேர்ந்தெடுத்து பாடத் தொடங்குகிறார். இதில் யார் தேர்ந்தெடுத்தது சிறந்தது என்றெல்லாம் நான் சொல்லப் போவதில்லை. இந்தக் கடவுளை நினைக்கிறேன். கொடுக்கும் போது இந்தக் கடவுள் ஏன் இப்படி ஒரு Game விளையாட வேண்டும்?.
ஜென்ஸி, சித்ரா போல தான் கடவுள் நமக்குத்தரும் ஆப்ஷன்களில் சிறந்ததை நாம் தேர்ந்தெடுத்திருக்கிறோமா?... ஜென்ஸியின் ஆப்ஷனில் ஜென்ஸியை ரசிகனாக இழந்திருக்கிறோம். சித்ராவின் ஆப்ஷனில் ரசிகனாக பெற்றிருக்கிறோம். வாழ்க்கையே இப்படி கடவுள் நமக்குத் தரும் Mind Game தானே... இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
என் வானிலே, தெய்வீக ராகம், இதயம் போகுதே, என்னுயிர் நீ தானே, தம்தனம் நம்தனம், வாடி என் கப்பக்கிழங்கே உள்ளிட்ட மெலடி பாடல்களை ஜென்சி பாடியுள்ளார்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications