Roja Serial: ரோஜா எதுக்கு இப்போ வசந்த மாளிகை வாணிஸ்ரீ மாதிரி ரியாக்ஷன்?
சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியலில் அர்ஜுன் ரோஜாவின் ஹேண்ட் பேக்கை கேட்க, அதில் அதிர்ச்சியாகி அர்ஜுனை பார்க்கிறாள் ரோஜா. அப்போதுதான் அர்ஜுன் சொல்றான், ஹேண்ட் பேக்கை கொடுன்னுதானே கேட்டேன்.. அதுக்கு எதுக்கு வசந்தமாளிகை வாணிஸ்ரீ மாதிரி ரியாக்ஷன் குடுக்கறேன்னு கேட்கிறான் அர்ஜுன்.
சன் டிவியின் ரோஜா சீரியல், திங்கள் முதல் வியாழன் வரை தினமும் 7 மணிக்கு மறு ஒளிபரப்பாகி வருது. ரோஜா, அர்ஜுன் இளமையான ஜோடி இந்த சீரியலில் செமையாக வொர்கவுட் ஆகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இந்த ஜோடிக்காவே ரோஜா சீரியலை மறு ஒளிபரப்பில் மக்கள் பார்த்து வருகின்றனர். சீரியல் ரிச்சா, கலர்ஃபுல்லா சினிமா பணியில் படம் பிடிக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருது.இதுவும் இந்த சீரியலை மக்கள் விரும்பிப் பார்க்க ஒரு காரணம் என்று சொல்லலாம்.

நடிகை நதியா
ஏற்கனவே ரோஜா சீரியலில் நடிகை வடிவுக்கரசி, நடிகர் ராஜேஷ் என்று ஸ்டார் காஸ்ட் நட்சத்திரங்கள் உள்ளனர். இதோடு, கடந்த வருடம் நடிகை நதியாவும் சீரியலில் நதியாவாகவே வந்து போனார். அப்போதில் இருந்து ரோஜா சீரியல் ரேட்டிங்கில் இன்னும் ஒரு படி மேலே போயி, நாயகி சீரியலுக்கு டஃப் கொடுத்து வந்தது.

கான்டிராக்ட் மனைவி
கிரிமினல் லாயரான அர்ஜுன், தன்னிடம் கிளையன்டாக வந்த ரோஜாவை, ஒரு வருடத்துக்கு கான்டிராக்ட் போட்டு திருமணம் செய்துக்கொண்டு வீட்டுக்கு அழைச்சுட்டு வருகிறான். அனாதை ஆஸ்ரமத்தில் இருந்து வந்தவள் ரோஜா என்று அர்ஜுனின் பாட்டி அன்னபூரணி, அவங்க பொண்ணு யசோதா என்று யாருக்கும் பிடிக்கலை.

வளையல் திருடி
ரோஜாவின் மீது திருட்டு பழி போட்டு, அவளை வீட்டை விட்டு துரத்திடணும் என்று நினைத்த யசோதா, அம்மா அன்னபூரணியின் வளையல் இரண்டை எடுத்து ரோஜாவின் ஹேண்ட்பேக்கில் வைத்துவிடுகிறார். இது பழைய ஸ்டைல்தான்... சீரியல் கொஞ்சம் சினிமா ஸ்டைலாச்சே...பொறுத்துக்க வேண்டியதுதான்.

ரோஜாதான் திருடி
ரோஜாதான் திருடி என்று சொல்ல, அவளது பேக்கில் வளையலை வைத்துவிட்ட யசோதா, ரோஜா ஹேண்ட் பேக்கை காண்பிக்க வேண்டும் என்று அடம்பிடிக்கிறாள், ரோஜாவா அழுதுகொண்டே நிற்கிறாள். நான் எடுக்கலை நான் எடுக்கலை என்னை நம்புங்க என்று சொல்லிக்கொண்டே இருக்கிறாள். அப்போது பார்த்துக்கொண்டு சும்மா இருப்பானா ஹீரோ புருஷன்? ரோஜா ஹேண்ட் பேக்கை கொடு என்று கேட்டு, அவள் திருடி இல்லை என்று நிரூபிக்க கேட்கும்போதுதான் ரோஜா அவனை எரித்துவிடுவது போல பார்க்கிறாள். ரோஜா பேக்கைதானே கேட்டேன்..எதுக்கு நீ வசந்தமாளிகை வாணிஸ்ரீ மாதிரி ரியாக்ஷன் குடுக்கறே என்று சொல்கிறான்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications