மணிரத்னம், ஷங்கர், முருகதாஸ்.. இந்த தமிழ் சினிமா முன்னணி இயக்குநர்களுக்கு என்னதான் ஆச்சு?
சென்னை: தமிழ் சினிமாவின் நான்கு முக்கிய இயக்குநர்கள், ஊர் உலகம் எல்லாம் பெயர் பெற்ற ஷங்கர், மணிரத்னம், ஏ.ஆர்.முருகதாஸ், வெற்றிமாறன், சமீப காலமாக வெளியிட்ட படங்கள் பெரும் தோல்வி மற்றும் கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளன. ஒருகாலத்தில் வெற்றியின் அடையாளமாக இருந்த இவர்கள், இப்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பையும், திரையரங்குகளின் வெற்றியையும் பறிகொடுத்துள்ளனர்.

ஷங்கர்: புதுமை குறைந்த 'இந்தியன் 2' மற்றும் 'Game Changer'
பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான 'இந்தியன் 2' (2024) ரசிகர்களுக்கும் விமர்சகர்களுக்கும் ஏமாற்றம் அளித்தது. நான் சோஷியல் மீடியாவிலிருந்து வந்துள்ளேன் என்று போலீசாரிடம் சித்தார்த் கதாப்பாத்திரம் மிரட்டும் ஆரம்ப காட்சியிலேயே படத்தின் தரம் பல் இளித்துவிட்டது. திரைக்கதை பலவீனமாகவும், புதுமை இல்லாமலும் இருந்ததாக விமர்சிக்கப்பட்டது. கமல்ஹாசனுக்கு வைக்கப்பட்ட சண்டை காட்சிகள், கடுப்பை வர வைத்தன. அதேபோல், தெலுங்கில் இயக்கிய 'Game Changer' (2025) படமும் ரொம்பவே பழைய ஷங்கர் படங்களின் மாதிரிதான் என விமர்சனம் எழுந்தது. கதையில் புதுமை இல்லாமை, உணர்ச்சி பிழை, மற்றும் திரைக்கதை பார்ட்னர் சுஜாதா இல்லாதது போன்றவை தோல்விக்குக் காரணமாக கூறப்படுகின்றன.

மணிரத்னம்
மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' வசூலில் வெற்றி பெற்றாலும், அதையே ராஜமவுலி எடுத்திருந்தால் நாவலில் படித்த பிரமாண்டத்தை கண்முன்னே பார்க்க வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் மணிரத்னம் உள்ளூர் நாடக கலைஞர்களை வைத்து ராமாயணம் சீரியல் எடுத்த சன் டிவி போல சிம்பிளாக்கிவிட்டார் என்ற விமர்சனங்கள் வந்தன. புதிய படம் 'Thug Life' மணிரத்னம் 1990களிலேயே தேங்கிவிட்டார். அப்டேட் ஆகவில்லை என்பதை அம்பலப்படுத்திவிட்டது. அவரது நிஜமான ஹிட் என்றால் அலைபாயுதேதான். அது வந்து 25 வருடங்கள் ஆகிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.ஆர்.முருகதாஸ்: புதுமை இல்லாத திரைக்கதைகள்
'கஜினி', 'துப்பாக்கி' போன்ற வெற்றிப் படங்களை கொடுத்த முருகதாஸ், சமீபத்திய படங்களில் தோல்வியை சந்தித்துள்ளார். விஜய் நடித்த சர்க்கார் படத்திலேயே ஏ.ஆர்.முருகதாசின் திரைக்கதை படுத்துவிட்டது. இழு இழு என இழுத்து கிளைமேக்ஸ் போனது அந்த படம். ஹிந்திக்கு போய் சிக்கந்தர் என்று ஒரு படத்தை எடுத்துள்ளார். சல்மான் கானை வைத்து எடுத்துமே, நானி நடித்த ஹிட் 3-யைத்தான் நெட்பிளிக்சில் அதிகம் பேர் பார்த்துள்ளார்களே தவிர சிக்கந்தரை அல்ல. ரமணா, கத்தி போன்ற படங்களில் அவர் பயன்படுத்திய பரபரப்பான திரைக்கதையை எங்கோ தொலைத்துவிட்டு, கஜினி போலவே மறந்து திரிகிறார் முருகதாஸ்.

வெற்றிமாறன்
வெற்றிமாறன் இயக்கிய 'விடுதலை' முதல் பாகம் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. ஆனால் இரண்டாம் பாகம் வசூலிலும் விமர்சனத்திலும் தோல்வியடைந்தது. பிரச்சார தொனியில் படத்தை நகர்த்தியதுதான் 2வது பாகம் சுருண்டு படுக்க காரணம். படத்தை படமாக எடுக்காமல் இஷ்டத்திற்கு எடுத்து பொறுமையை சோதிக்காதீர்கள் ப்ரோ என மக்கள் சொல்ல ஆரம்பித்துவிட்ட காலகட்டம் இது. கதையை பல பாகங்களாக பிரித்தது, ரசிகர்களின் பொறுமையை சோதித்தார் என்று சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டது.
ஏன் இவர்கள் தோல்வி அடைகின்றனர்?
இப்போது ரசிகர்கள் புதுமை, சுருக்கமான திரைக்கதை, உணர்ச்சி பூர்வமான கதைகளை நாடுகின்றனர். பழைய ஃபார்முலா, மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள், புதுமை இல்லாத திரைக்கதைகள் ஏற்கப்படவில்லை. புதிய இயக்குநர்கள், பான்-இந்தியா படங்கள், OTT போன்றவை ரசிகர்களுக்கு பல்வேறு வகை கதைகளை அறிமுகப்படுத்துகின்றன. இதனால் பழைய பாணியில் இயக்கும் இயக்குநர்களுக்கு சவால் அதிகரித்துள்ளது.
புதுமை குறைவு
மணிரத்னம், ஷங்கர், முருகதாஸ் போன்ற இயக்குநர்கள் கடந்த கால வெற்றிகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறார்கள் என்ற விமர்சனங்கள் எழுகின்றன. படம் தாமதம், பெரும் பட்ஜெட் அழுத்தம், வெளியீட்டில் ஏற்பட்ட தடைகள் போன்றவை வெற்றியை பாதித்துள்ளன.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் தற்போது கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். ரசிகர்களின் விருப்பம், தொழில்நுட்ப வளர்ச்சி, புதிய இயக்குநர்களின் வருகை ஆகியவை இவர்களை புதுமை தேட வைக்கும் கட்டாய நிலை உருவாகியுள்ளது. கதையைவிடுங்கள் திரைக்கதையையும், லொகேஷனையும் பாருங்கள் என்பதுதான் புது இயக்குநர்களின் மிரட்டல் பார்முலா. மீண்டும் வெற்றி பெற, சீனியர்கள் தங்கள் பாணியில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்பது தெளிவாகிறது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications