Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொங்கல் அன்று வரலட்சுமி ஏன் இப்படி செய்தாங்க? நிக்கோலாய் பாவம்! சக்திவேல் கவுண்டரான சரத்குமார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைப் பொங்கல் அதுவுமாக தனது மகள் வரலட்சுமியின் கணவர் நிக்கோலாய் சச்தேவை விட்டுவிட்டு சரத்குமார் தனது குடும்பத்தினருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட சம்பவம் பெரும் "அதிர்ச்சியை" ஏற்படுத்தியுள்ளது.

சரத்குமாரின் மகள் வரலட்சுமி, அண்மையில்தான் தான் காதலித்த நிக்கோலாய் சச்தேவ் என்பவரை தாய்லாந்தில் திருமணம் செய்து கொண்டார். மும்பையில் பெரிய ஆர்ட் கேலரியை வைத்து நடத்தி வருகிறார் நிக்கோலாய்! இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு மகள் இருக்கிறார்.

television varalakshmi sarathkumar

முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்த நிக்கோலாய், வரலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தலை தீபாவளியையொட்டி வரலட்சுமி, நிக்கோலாய், தனது தாய் சாயாதேவியுடன் கொட்டிவாக்கத்தில் உள்ள சரத்குமாரின் வீட்டிற்கு சென்று அங்கு தீபாவளியை கொண்டாடினார்.

இதுகுறித்த புகைப்படங்கள் வரலட்சுமியின் இன்ஸ்டாவில் வெளியானது. இந்த நிலையில் இன்றைய தினம் வரலட்சுமிக்கும் நிக்கோலாய்க்கும் தலைப் பொங்கல் நிகழ்வாகும். இந்த நிகழ்வையொட்டி வரலட்சுமியின் தங்கை, வரலட்சுமி- நிக்கோலாய் உள்ளிட்டோர் சரத்குமாரின் வீட்டிற்கு வந்தனர்.

அங்கு புதுமாப்பிள்ளை பெண்ணுக்கு விருந்து பரிமாறப்பட்டது.இதைத் தொடர்ந்து உறவினர்களுடன் ஒரே கலாட்டாவாக இருந்தது. இந்த நிலையில் கடைசியாக குடும்பத்தில் உள்ளவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அப்போது கிட்டதட்ட 12 பேர் வரை புகைப்படத்திற்காக போஸ் கொடுக்க தயாரானார்கள். ஒரு சோஃபாவில் சரத்குமாரின் இளைய மகள், சரத்குமார், ராதிகா, சாயா தேவி உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர். பின்புறம் வரலட்சுமி உள்ளிட்டோர் நின்றிருந்தனர்.

television varalakshmi sarathkumar

அந்த நேரத்தில் நிக்கோலாய் மட்டும் இல்லை. அப்போது அந்த போட்டோ எடுத்தவர், "சார் அவர் வரவில்லை" என சொல்ல, அதற்கு ராதிகா சூர்யவம்சம் படத்தை போல் "ஏங்க சின்ராஜ்" என சொல்ல, அதற்கு சரத்குமார், "என்றன் குடும்பத்தில் இருப்பவர்கள் எல்லாம் வந்துவிட்டனர்" என தெரிவிக்கிறார்.

அப்போது ஓரமாக நின்று கொண்டு அப்பாவி போல் நிக்கோலாய் நின்று அழுகிறார். வரலட்சுமி ஒன்றுமே தெரியாதது போல் பாவமாக பார்க்கிறார். இது எல்லாரும் பிளான் செய்து காமெடிக்கு செய்தார்கள் என நீங்கள் நினைத்தால் அது தவறு.

வரலட்சுமி வெளியிட்ட இன்ஸ்டா போஸ்ட்டை பார்த்த ராதிகாவே அதிர்ச்சி அடைந்துவிட்டார். அதாவது போட்டோகிராபர் ஏதோ கேட்க, ராதிகா எதையோ செய்ய, சரத்குமார் கையை நீட்டி எதையோ சொல்லியிருக்கிறார். இதை வைத்து சுட்டித்தனம் செய்ய நினைத்த வரலட்சுமி, தனது கணவரிடம் ஓரமாக அனுப்பிவிட்டு வீடியோ எடுத்துள்ளார்.

television varalakshmi sarathkumar

பிறகு சூர்யவம்சம் படத்தில் வரும் அந்த டயலாக்கை கோர்த்துவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது. ராதிகாவே சிரிப்பை அடக்க முடியாமல் கமென்ட்டில் சிரிக்கிறார். இந்த வீடியோவை நீங்களும் பாருங்களேன். வரலட்சுமிக்கு டபுள் டமாக்கா போல் தலை பொங்கல் அன்று தனது மதகஜராஜா திரைப்படம் 13 ஆண்டுகள் கழித்து வெளியாகியுள்ளது.

அது போல் வரலட்சுமியின் தாய் சாயா நடித்த வணங்கான் படமும் வெளியாகியுள்ளது. தற்போது வருவுக்கு தமிழில் அந்த அளவுக்கு வாய்ப்புகள் இல்லாமல் போனாலும் அவர் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+