மீனை கல்லால் அடிச்சு பிடிச்சு சுட்டு சாப்பிட்டு.. கொள்ளை அழகு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொலைக்காட்சி சானல்களில் நிகழ்ச்சிகள், சீரியல்கள் என்று பார்த்தாலும் யூடியூப் சேனல்கள் தரும் வீடியோக்கள் ஒவ்வொன்றும் தனித்துவம் மிக்கதாக இருக்கிறது.

ஆயிரம், லட்சம், மில்லியன் என்று பார்வையாளர் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர். இதில் பெரும்பாலும் சாப்பாடு தொடர்பான யூடியூப் சானல்கள் முதலிடம் வகிக்கின்றன.

மலை வாழ் இனப்பெண் போல இருக்கும் இந்த இளம் பெண்.காட்டில் சுற்றித் திரிந்து வேட்டையாடி சமைத்து உண்ணும் அழகைப் பாருங்கள்.

ரசிக்கும்படியான யூடியூப் சானல்

ரசிக்கும்படியான யூடியூப் சானல்

இந்த இளம் பெண் பல வீடியோக்களை பிரிமினிட்டிவ் லைஃப் ஸ்டைல் எனப்படும் தனது யூடியூப் சானலில் வெளியிட்டு வருகிறார். காட்டில் எந்தவித பயமும் அறியாது இவர் வேட்டையாடும் அழகே தனியாக இருக்கிறது.கூடையை வைத்துக் கொண்டு, கத்தியை வைத்துக்கொண்டு எதையாவது தேடி அலைவது இன்று இவருக்கு எது கிடைக்கப் போகிறதோ என்று சுவாரஸ்யமாக இருக்கிறது.

அடித்து பிடிக்கிறார்

அடித்து பிடிக்கிறார்

காட்டில் நதி புரண்டோடும் ஒரு அழகான இடத்தில் மீனைத் தேடி நிற்கிறார். கற்களை சேகரித்து தென்படும் மீன் மேல் குறி பார்த்து அடிக்கிறார். அந்த மீன் சரியாக தலையில் அடிபட்டு ஆற்று நீரோடு ஓட, அதை நீந்தி சென்று பிடித்து வருகிறார். பின்னர் ஆற்று நீரில் சுத்தம் செய்து விறகு சேகரித்து எரித்து அதில் சுட்டு சாப்பிடுகிறார் பாருங்கள். செம!

பிடித்தார் பன்றியை

பிடித்தார் பன்றியை

இன்றைக்கு கிடைப்பது என்னவோ என்று கத்தி கூடையுடன் காத்திருந்து, எதுவும் கிடைக்காமல் எழுந்து நடந்து செல்கிறார். அங்கு இங்கு என்று செடி கொடிகளில் உணவைத்த தேடுகிறார்.பாவம் காட்டு பன்றி நீரோடை ஓரத்தில் தண்ணீர் குடித்துக் கொண்டு இருக்க,அது இந்த பெண்ணின் கண்ணில் மாட்டி விடுகிறது.

மெதுவாக சத்தமின்றி

மெதுவாக சத்தமின்றி

மெதுவாக சத்தமின்றி நடந்து அந்த காட்டு பன்றியை பிடித்து கனக்கும் அதை தனது தோளில் போட்டுக் கொண்டு குஷியுடன் நடந்து வருகிறார். அதை கட்டிப் போட்டுவிட்டு விறகு தேடி பற்ற வைத்து, பின்னர் அதை சுட்டு சாப்பிடுகிறார். இப்படி இவரின் யூடியூப் சானல் பிரபலமடைந்து இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+