பரியேறும் பெருமாள், கர்ணன், வாழையை விடுங்க! "இந்த" மாற்றத்தை செய்வாரா மாரி செல்வராஜ்
மாரி செல்வராஜ் - இன்றைய தமிழ் சினிமாவின் தனித்துவமான குரல். திரைக்கதையிலிருந்து ஒளிப்பதிவு வரை, ஒவ்வொரு படைப்பிலும் அவர் கொண்டு வரும் சமூகப் பார்வை, உணர்வுப் பெருக்கம், கலைநயம் ஆகியவை தமிழ் திரையுலகில் ஒரு புதுமையான சுவையை உருவாக்கி விட்டன. வெறும் சில ஆண்டுகளிலேயே அவர் தனது தனிச்சிறப்பான பாணியால் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து விட்டார் என்பது மறுக்க முடியாத உண்மை.

பரியேறும் பெருமாள்
அவரது முதலாவது படமே சமூகத்தில் உள்ள சாதி வேறுபாடுகளை நேரடியாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் எடுத்துக் கூறி பாராட்டைப் பெற்றது. இந்தப் படம், ஒரு புதிய இயக்குனர் வந்திருக்கிறார் என்ற ஒரு உணர்வை மட்டும் அல்ல, சினிமா மூலம் நமக்கான உரிமையையும், கனவையும், மாற்றங்களையும் செய்ய முடியும். சமூக நலன்களைத் தூக்கி பேச முடியும் என்று நிரூபித்தது. மாரியின் கதைகளில் தோன்றும் கதாபாத்திரங்கள், நாம் வழக்கமாக பார்த்த நாயகனோ, நாயகியோ அல்ல. அவர்கள் நம்மிடையே வாழும் சாதாரணமான மனிதர்கள். அந்த சாதாரணத்தில் இருக்கிறது மாரியின் கதை சொல்லும் பலம்.
கர்ணன்
படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவின் அடுத்த கட்டத்துக்குச் சென்றார். இந்தப் படம், ஒரு சமூகத்தின் குரலாக உருமாறியது. ஒவ்வொரு காட்சியிலும் உள்ள தாக்கம், இசையுடன் கூடிய உணர்ச்சி, ஒளிப்பதிவின் அழகு - இவை அனைத்தும் மாறி செல்வராஜ் வெறும் இயக்குனராக இல்லாமல் ஒரு கலைஞராகவும் அமைந்தது.
மாரியின் படங்களில் அதிகம் பேசப்படுவது அழுத்தமான காட்சிகள். அவை காட்சியளவில் மட்டுமல்ல; மனதிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு வசனமும் எதையாவது உணரச் செய்கிறது. இதுதான் அவரை மற்ற இயக்குனர்களிலிருந்து வேறுபடுத்துகிறது. அவர் உருவாக்கும் முதன்மை பாத்திரங்கள், ஒவ்வொன்றும் எதிர்ப்பையும், போராட்டத்தையும் பிரதிபலிக்கின்றன.
மாரி செல்வராஜ் தொடர்ந்து வெறும் ஒரு தனிப்பட்ட சமூகப் பிரச்சனையில் சிக்கி விட்டால், அவரது பாணி ஒரே கோட்டையில் சுழல்வதுபோல தோன்றும் அபாயம் உள்ளது. ஆனால், அவர் தனது
விறுவிறுப்பான திரைக்கதை
படைப்பு ஆற்றலை விரிவுபடுத்தி, பல்வேறு கதாபாத்திரங்களை வைத்து,commercial elements இணைத்து படைப்பெடுத்தால், தமிழ் சினிமாவுக்கு புதிய பரிமாணங்களை கொண்டு வர முடியும். அவரது கதை சொல்லல் திறன், விறுவிறுப்பான திரைக்கதை அமைப்புடன் ஒன்றிணைந்தால், வெகுசன மக்களுக்கான இயக்குநராகவே அவரை பார்க்க தொடங்குவார்கள்.
தமிழ் சினிமாவிற்கு தேவைப்படுவது, மனதை தட்டும் கதைகளும், சமூக மாற்றங்களை தூண்டும் கதாப்பாத்திரங்களும். மாரி செல்வராஜ் இந்த இரண்டையும் சரியாக சமநிலைப்படுத்த முடியும் திறன் கொண்டவர். அவர் தனது பார்வையை சிறிது விரிவுபடுத்தி, புதிய தொழில்நுட்பங்கள், விதிவிலக்கான கதைக்களங்கள், பெரிய நட்சத்திரங்களின் உடன் பணியாற்றும் வகையில் முயற்சி எடுத்தால், தமிழ் சினிமாவின் வளர்ச்சியில் ஒரு முக்கியக் கல்லாக மாறுவார் என்பது உறுதி.
வாழை என்ற படத்தில் ஒரு சிறுவனை மையமாக வைத்து மாபெரும் வெற்றியை படைத்தார். இத்தகைய திறன் கொண்ட இயக்குனர் தமிழ் திரை உலகிற்கு கிடைத்தது பெருமை பட வேண்டிய விஷயம் மாரியின் கலையும், கருத்தும் சேர்ந்த இந்த இயக்கம் தொடர்ந்தால், தமிழ்த் திரையுலகின் எதிர்காலம் உறுதியான ஒளியுடன் தொடரும். இது நடக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- குரு கிருஷ்ணன்
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications