1000 சவரன் தங்கம், உயில் சொத்துகள்.. அன்னை இல்லம் வீட்டு சாப்பாடு.. சிவாஜி அப்பாவுக்கு உதவபோவது யார்
சென்னை: ஸ்டுடியோவில் மதியம் 1 மணிக்கெல்லாம், அன்னை இல்லம் வீட்டிலிருந்து பெரிய பெரிய கேரியர்களில் சாப்பாடு வரும். அந்த கேரியர்களில் இறால், மீன், மட்டன், நல்லி எலும்பு, நெஞ்செலும்பு குழம்பு, சிக்கன், வஞ்சிரம் மீன் வறுவல், நாட்டுக்கோழி என அத்தனையும் இருக்கும். சிவாஜி வீட்டு சாப்பாட்டை சாப்பிடாத நடிகர்களே கிடையாது என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சிவாஜி கணேசனின் மகள்கள் நீதிமன்றக்தில் வழக்கு தொடர்ந்தனர்.. அதில், "ராம்குமார், பிரபு இருவரும் பெரும்பாலான சொத்துகளை எங்களுக்கு தெரியாமல் விற்பனை செய்து எங்களை மோசடி செய்து விட்டனர். அந்த விற்பனை பத்திரங்கள் செல்லாது என அறிவிக்க வேண்டும். சொத்துகளை பாகப்பிரிவினை செய்து வழங்க வேண்டும். 1,000 பவுன் தங்க நகைகள் மற்றும் 500 கிலோ வெள்ளி பொருட்களை ராம்குமாரும், பிரபுவும் அபகரித்துக்கொண்டனர். எங்களது தந்தை சிவாஜி கணேசன் எழுதியதாக சொல்லும் உயில் போலியானது" என்று கூறியிருந்தனர்.

இந்நிலையில்தான், மீண்டும் சிவாஜி கணேசன் குடும்பத்தில் கடன் சிக்கல் எழுந்துள்ளது. அன்னை இல்லம் வீடு ஜப்தியிலிருந்தும் தப்பித்துள்ளது.. இந்நிலையில், Media Cavin என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு சொன்னதாவது:
"சென்னை மவுன்ட்ரோடில் இருக்கும் சாந்தி தியேட்டர் சிவகங்கை ராஜாவுக்கு சொந்தமானது.. அதை சிவாஜி கணேசன் வாங்கி நடத்தினார், அதுபோல தஞ்சாவூரிலும் தியேட்டர் உள்ளது..
இந்த சாந்தி தியேட்டரில், சிவாஜி ஆரம்ப காலத்தில் நடித்த படங்கள் முதல், அவர் வாங்கின விருதுவரை அனைத்தையும் வைத்திருப்பார்கள்.. படம் பார்க்க செல்பவர்கள் இவைகளையெல்லாம் ரசித்து பார்ப்பார்கள்.
சிவாஜி கார்டன்
அதேபோல, எம்ஜிஆர் வீட்டு எதிரே சிவாஜி கார்டன் இருந்தது.. வயல்வெளி, கிராமங்கள் என காணப்படும், இந்த கார்டனில் பல டைரக்டர்கள் ஷூட்டிங எடுப்பார்கள்.. இப்படி பல சொத்துக்களை, நாங்கள்தான் வாரிசு என்று சொல்லி ராம்குமாரும், பிரபுவும் விற்றுள்ளார்கள்.. சாந்தி தியேட்டர், சிவாஜி கார்டன், டிஎல்எஃப் பக்கத்தில் உள்ள பல இடங்களை விற்றுவிட்டார்கள்.
இந்த விஷயம் மற்ற 2 மகள்களுக்கும் தெரியவந்தபோது, தங்களுக்கும் சொத்துக்களில் பங்கு உள்ளது.. தங்களுக்கு தெரியாமல் இனிமேல் சொத்துக்களை விற்கக்கூடாது என்று கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார்கள்.. அதனால், இப்போது ஏதாவது ஒரு சொத்தை விற்று கடனை அடைக்கலாம் என்றாலும், அதையும் செய்ய முடியாது.
அன்னை இல்லம் வீடு
ரஜினிகாந்த் ஒரு ஜென்ட்டில்மேன்.. தன்னால் முடிந்த பல உதவிகளை செய்திருக்கிறார். அன்னை இல்லம் வீடு ஏற்கனவே கடனில் இருந்தபோது, ரஜினியை சந்தித்து உதவி கேட்டார்கள், உடனே ரஜினியும் மனசுடன் சிவாஜி புரடக்ஷனுக்காக சந்திரமுகி படத்தில் நடித்து தந்தார்.. இந்த படத்தின் மூலம் கிடைத்த வருமானத்தில் அனைத்து சிக்கல்களை அடைத்தனர்..
சிவாஜிக்கென்று இல்லை, தன்னை அறிமுகப்படுத்திய பாலச்சந்தர், டூயட் என்ற படம் எடுத்து, நஷ்டமடைந்து இடிந்துபோய் உட்கார்ந்திருந்தபோது, ரஜினியிடம் நேரடியாகவே சென்று உதவி கேட்டார்.. ரஜினி, நீதான் ஏதாவது, செய்யணும், என்று கேட்கவும், உடனே ரஜினி, அந்த நிமிடமே உதவி செய்வதாக சொல்லி, படம் நடித்து தந்தார். மறுபடியும் இதேபோல, குசேலன் என்ற படத்தில் நடித்து, பாலச்சந்தருக்கு உதவினார். அதேபோல, தான் வாங்கின சம்பளத்துக்கு நியாயம் இருக்க வேண்டும் என்று நினைக்கக்கூடியவர் ரஜினி.
வருமானம் இல்லை - செலவுகள் அதிகம்
ஆனால், வருமானம் என்பதே சிவாஜி குடும்பத்துக்கு வராமல், செலவுகள் மட்டும் பெரிதாகி கொண்டே வந்ததுதான், பிரச்சனைக்கு காரணம்.. அத்துடன், மீன்குழம்பும் மண்வாசனையும் உள்பட படங்களை எடுத்ததும் சிக்கலாகி விட்டது
சிவாஜி வீட்டில் எப்போதுமே அடுப்பு எரிந்து கொண்டிருக்கும்.. அத்தனை சமையலும், கமலா அம்மாளின் மேற்பார்வையில் நடக்கும்..
சிவாஜி கணேசன் ஐயா, ருசியாக சாப்பிடக்கூடியவர், நான்வெஜ் பிரியர்.. அதனால், செட்டிநாட்டில் உள்ள பல சமையல்காரர்கள், அவருடைய வீட்டில் வேலை பார்த்தார்கள்..
இறால், மீன், மட்டன், நல்லி எலும்பு, நெஞ்செலும்பு குழம்பு, சிக்கன்,
ஸ்டுடியோவில் மதியம் 1 மணிக்கெல்லாம், அன்னை இல்லம் வீட்டிலிருந்து பெரிய பெரிய கேரியர்களில் சாப்பாடு வரும். அந்த கேரியர்களில் இறால், மீன், மட்டன், நல்லி எலும்பு, நெஞ்செலும்பு குழம்பு, சிக்கன், வஞ்சிரம் மீன் வறுவல், நாட்டுக்கோழி, என அத்தனையும் இருக்கும்.
சிவாஜி வீட்டு சமையல் என்றாலே, நாக்கை தொங்க போட்டுட்டு சாப்பிடுவாங்க.. இது பிரபு காலத்திலும் தொடர்ந்தது. அந்த வீட்டு சாப்பாடு சாப்பிடாத நடிகர்களே கிடையாது. அப்படியெல்லாம் ருசித்து சாப்பிட்ட அத்தனை மூத்த நடிகர்களும் இன்று உயிருடன்தான் இருக்கிறார்கள். என் அப்பா வீட்டு சாப்பாடு, என் அம்மா சமைத்த சாப்பாடு என்று சொல்லி சாப்பிட்டவர்களில் யார் உதவ போகிறார்கள் என்று தெரியவில்லை.
சிவாஜியை 'என் அப்பா என் அப்பா' என்று எல்லாரும் கொண்டாடினார்கள். அந்த அப்பா வீட்டில் ஒரு பிரச்சனை வந்துள்ளது.. இந்த நன்றி கெட்ட சினிமா உலகம், அந்த அப்பாவின் மகன்களுக்கும் பேரன்களுக்கும் என்னதான் செய்றாங்கன்னு பார்ப்போம்" என்று தெரிவித்துள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications