Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உயில், பாகப்பிரிவினை, சொத்து? சிவாஜி வீடு ஜப்தி.. ராம்குமார், பிரபு மனசு எவ்ளோ கஷ்டப்படும்: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் திலகம் சிவாஜி வீட்டுக்கென ஒரு சிறப்பான பாரம்பரியம் உள்ளது.. அன்னை இல்லம் வீட்டுக்கென தனி மரியாதை என்றுமே தமிழக மக்களிடம் உண்டு.. ஆனால், இன்று மீடியாவில் அன்னை இல்லம் வீட்டை காட்டிவிட்டு, ஜப்தி செய்திகளையும் பார்க்கும்போது, மனசே நொறுங்கிவிட்டது என்று மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா தெரிவித்துள்ளார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைந்தாலும், அவரது மகன்களான ராம்குமார், பிரபு, மற்றும் இவர்களின் வாரிசுகளான துஷ்யந்த், விக்ரம் பிரபு(ஆகியோரும் சினிமாவில் பயணித்து வருகின்றனர். இதில் ராம்குமார் தயாரிப்பாளராக உள்ளதை போலவே, அவரது மகன் துஷ்யந்தும் தயாரிப்பாளராக உள்ளார்.

Television Sivaji Ganesan properties

ஜகஜால கில்லாடி என்ற படத்தை துஷ்யந்த் தயாரிக்க, தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் ரூ.3.74 கோடி கடன் பெற்றுள்ளார். ஆனால் கடனை திருப்பி செலுத்தாததால் அந்த நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

சிவாஜி வீடு ஜப்தி செய்ய உத்தரவு

இதில் மத்தியஸ்தராக நீதிபதி ரவீந்திரன் நியமிக்கப்பட்டார். அசல் மற்றும் வட்டி உடன் சேர்ந்து ரூ.9.39 கோடியை திருப்பி செலுத்த துஷ்யந்த்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. மேலும் இதுதொடர்பாக பதிலளிக்கவும் துஷ்யந்திற்கு காலஅவகாசம் வழங்கியிருந்தது. ஆனால் துஷ்யந்த் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதையடுத்து சிவாஜி வீட்டை ஜப்தி செய்ய சென்னை, நீதிமன்றம் அதிரடி உத்தரவு நேற்றைய தினம் பிறப்பித்திருந்தது.

ஏற்கனவே, சிவாஜி கணேசன் குடும்பத்தில் சொத்து பிரச்சனை வெடித்திருந்தது.. அதாவது, 270 கோடி ரூபாய் சொத்துக்களை முறையாக நிர்வகிக்கவில்லை என்றும், வீடுகளின் வாடகை பங்கை தங்களுக்கு வழங்காமல் ஏமாற்றியதாகவும் கூறி, சகோதரிகள் சாந்தி மற்றும் ராஜ்வி ஆகிய இருவரும், பிரபு, ராம்குமார் மீது ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

போலி உயில் - சொத்துக்கள்

நடிகர் சிவாஜி கணேசன் எழுதியதாக கூறப்படும் உயில் ஜோடிக்கப்பட்டது, உயில் சட்டபடி மெய்ப்பித்து சான்று பெறாததால் அது செல்லத்தக்கதல்ல என்றும், சாந்தி தியேட்டரில் இருந்த தந்தை சிவாஜியின் 50 சதவீதம் பங்குகளும், தாய் கமலாவின் 50 சதவீதம் பங்குகளும் முறைகேடாக ராம்குமார் மற்றும் பிரபுவின் மகன்களின் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது என்றெல்லாம் புகார்கள் முன்வைக்கப்பட்டன.

எனினும், இந்த விவகாரத்தில் சிவாஜி கணேசனின் 4 பிள்ளைகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடந்து, இறுதியில் சுமூக முடிவு எடுக்கப்பட்டதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி , சிவாஜி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்திருந்தன. இப்படிப்பட்ட சூழலில், சிவாஜி வீடு ஜப்தி என்ற செய்தி, மீடியாக்களில் வெளியாகி, சிவாஜி ரசிகர்களுக்கு பெரும் சோகத்தையும், கவலையையும் உண்டுபண்ணி வருகிறது.

அன்னை இல்லம்

இந்நிலையில், Realone யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, "சிவாஜி வீடு என்று சொல்லப்படுவது போக் ரோடு என்றழைக்கப்படும் சிவாஜி கணேசன் சாலையிலுள்ள சிவாஜி வீடு என்றுதான் தெரிகிறது. இதை ஊடகங்களும் சரியாக தெளிவுபடுத்தவில்லை..

ஏனென்றால், சென்னையில் சிவாஜி வீடு என்றாலே அது அன்னை இல்லம் வீடுதான்.. அன்றைய காலத்தில் சென்னையில் 3 பிரபலங்களின் வீடுகள் மிகவும் புகழ் பெற்றிருந்தன. ஒன்று எம்ஜிஆரின் ராமாவரம் தோட்டம், இரண்டாவது கோபாலபுரம் வீடு, மூன்றாவது சிவாஜியின் அன்னை இல்லம் ஆகும்..

ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்

சிவாஜிக்கு நிறைய சொத்து உள்ளது.. இப்போது இந்த வீட்டின் பேரில் கடன் வாங்கியது துஷ்யந்த். அப்படியானால் சிவாஜியின் பேரிலேயே இன்னமும் இந்த வீடு இருக்கிறதா? அல்லது ராம்குமார் அல்லது துஷ்யந்த் பெயரில் இருக்கிறதா? அல்லது துஷ்யந்தும் இந்த வீட்டின் ஒரு பங்குதாரரா அல்லது நேரடியாக உரிமையாளரா? தெரியவில்லை.

ஆனால் ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும் என்பார்கள்.. அன்றைய காலத்தில் பல நடிகர், நடிகைகளின் வீடுகள் கடனில் மூழ்கி, ஏலத்தில் வந்தபோது, அவர்களுக்கு சிவாஜி உதவி செய்தாரா என தெரியவில்லை.. ஆனால், அந்த ஏலத்தில் வந்த வீடுகளை விலைக்கு வாங்கியிருக்கிறார் என்பதை கேள்விப்பட்டிருக்கிறேன்.. யாருமே விலைக்கு வாங்காத பட்சத்தில், அந்த சொத்தை சிவாஜியிடம் விற்கும் அளவுக்கு செல்வந்தராக திகழ்ந்திருக்கிறார்.

பாகப்பிரிவினை - சொத்துக்கள்

தன்னுடைய உழைப்பை மட்டுமே மூலதனமாக கொண்டு, பாடுபட்டு சிவாஜி கணேசன் உருவாக்கிய வீடே இன்று ஜப்தி ஆகும் சூழலுக்கு வந்துள்ளது.. இதுபோன்ற சூழல் பலருக்கும் ஏற்படும்.. அன்று கண்ணதாசனுக்கும் இப்படித்தான் நிலைமை ஏற்பட்டது.
இன்று சிவாஜி குடும்பத்தில் என்ன நடக்கிறது என்பது ஆழமாக தெரியவில்லை. ஆனால், சொத்து விவகாரம் கோர்ட்டுக்கு போனது அனைவருக்கும் தெரியும்.. சிவாஜி உயிருடன் இருக்கும்போதே பாகப்பிரிவினை சரியாக செய்து வைத்திருந்தால், இந்த பிரச்சனை வந்திருக்காது. பல பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளிடம் இணக்கமாக உட்கார்ந்து சரிசமமாக சொத்தை பிரித்து தந்திருந்தால், பாதி சிவில் வழக்குகள் நீதிமன்றங்களில் காலியாகிவிடும்.

மனசே நொறுங்கிவிட்டது

சிவாஜி வீட்டுக்கென பாரம்பரியம் உள்ளது.. அன்னை இல்லம் வீட்டுக்கென தனி மரியாதை என்றுமே உண்டு.. ஆனால், இன்று மீடியாவில் அன்னை இல்லம் வீட்டை காட்டிவிட்டு, ஜப்தி செய்திகளை பார்க்கும்போது, மனசே நொறுங்கிவிட்டது..

தூர நின்று வேடிக்கை பார்க்கும் நமக்கே இப்படி இருக்கிறதென்றால், ராம்குமார், பிரபுவால், இதனையெல்லாம் எப்படி ஜீரணிக்க முடிகிறது என்றே தெரியல.. எனினும் இந்த வலியை உணர்ந்து, இருக்கும் சொத்துக்களை காப்பாற்றி கொள்ளணும்" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+