ஏனுங்க.. டிரஸ்ஸை மாத்தி போடலாமே.. இது மெத்தனமா? இல்லை கவனமின்மையா?!
சென்னை: இமான் அண்ணாச்சி சன் டிவியின் பிரிக்க முடியாத நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தார். சுவாரஸ்யமாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்களின் மனதை கவர்ந்து நல்ல இடம் பிடித்து இருந்தார்.
இந்த சமயத்தில் சன் டிவி அண்ணாச்சி நடத்திய நிகழ்சசிகளை ஒவ்வொன்றாக குறைக்க ஆரம்பித்து இப்போது அவர் ஒரு நிகழ்ச்சி கூட சன் டிவியில் நடத்தவில்லை என்கிற அளவுக்கு நிலைமை போனது.
திடீரென்று ஒரு நாள் இமான் அண்ணாச்சி கலர்ஸ் தமிழ் டிவியில் குழந்தைகளை வைத்து நிகழ்ச்சி நடத்த.அது ஒளிபரப்பும் ஆகி வருகிறது. இப்போது சன் டிவி விழித்துக்கொண்டு நகைச்சுவை நடிகை கோவை சரளாவை வைத்து குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சியை நடத்த ப்ரோமோ வெளியிட்டு வருகிறது.

நல்ல நடிகை
கோவை சரளா நல்ல காமெடி நடிகைதான். கொண்டாடும் அளவுக்கு படங்களில் நடித்து புகழ்பெற்று வருபவர் கோவை சரளா. என்றாலும் காஞ்சனா 2, காஞ்சனா 3 படங்களில் நல்ல காமெடி ரோல் கிடைத்ததில் உருண்டு புரண்டு நடித்து குழந்தைகளின் உள்ளங்களை கவர்ந்து காஞ்சனா 4 வந்தாலும் கோவை சரளாவைத் தவிர்க்க முடியாத அளவுக்கு நகைச்சுவை நடிப்பில் கோலோச்சி உள்ளார்.

களத்தில் சன் டிவி
இதை நம்பி கோவை சரளாவை வைத்து குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சியை நடத்த சன் டிவி திட்டமிட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியை இமான் அண்ணாச்சி அளவுக்கு இவர் நடத்துவாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இப்போது இது விஷயம் இல்லை.

என்னங்க ப்ரோமோ
நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியிடுறீங்க... இதுவரை இரண்டு வகை ப்ரோமோ வெளியாகி உள்ளது. இரண்டு ப்ரோமோவிலும் கோவை சரளா ஒரே உடையில் வருகிறார்.. உடைகளை மாற்றி வர சொல்லக் கூட முடியாத நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எந்த அளவு டெடிகேஷனில் சன் டிவியில் வேலை பார்க்கிறார் பாருங்கள்.

அருந்ததி சீரியல்
அருந்ததி சீரியல் ப்ரோமோவில் கூட, கோவை சரளா இரண்டு மூன்று ப்ரோமோக்களில் ஒரே ஒரு காஸ்ட்யூமில்தான வந்தார். சன் டிவியின் பெயருக்கும் புகழுக்கும் இந்த விட்டேத்தியான போக்கை எல்லாம் கொஞ்சம் திருத்திக் கொள்ளலாமே.
இந்த போக்கு சன் டிவியின் மெத்தனத்தையும், பொறுப்பின்மையையும் பறைசாற்றுவதாகவே இருக்கிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications