Sundari Neeyum Sundaran Naanum Serial: இந்த மூடுக்கு முருங்கைக் காய் சாம்பாரா?
சென்னை: விஜய் டிவியின் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலில் புது மாப்பிள்ளை வேலுவுக்கு புதுப்பெண் தமிழ் முருங்கைக் காய் சாம்பார் வைத்து இட்லிக்கு தொட்டுக்கொள்ள ஊற்றுகிறாள்.
இந்த மூடுக்கு முருங்கைக் காய் சாம்பாரா என்று சலித்துக் கொள்கிறான் வேலு. அதாவது, வேலுவும் தமிழும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.
பாட்டி லதாவின் விருப்பப்படிதான் திருமணமும் நடந்தது. திருமணம் நடந்து முடிந்த பின்னர் விஜய் டிவியின் அனைத்து சீரியல் ஃபார்முலாவிலும் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலும் வந்து விட்டது.

சீரியல் ஃபார்முலா
விஜய் டிவியின் சீரியல் ஃபார்முலா என்பது திருமணம் நடக்கும்.. ஆனால், தம்பதியருக்குள் முதலிரவு மட்டும் நடந்து இருக்காது. அப்படித்தான் அரண்மனை கிளி, நாம் இருவர் நமக்கு இருவர், ஈரமான ரோஜாவே, ஆயுத எழுத்து, சிவா மனசுல சக்தி போன்ற சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வரிசையில் திருமணம் முடிந்த கையோடு சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலும் சேர்ந்து விட்டது.

குடும்பத்தை பழிவாங்க
தமிழ் தனது குடும்பத்தை பழிவாங்க வந்தவள் என்று வேலு தவறாக புரிந்து கொண்டு, அவளை முதலிரவு அன்றே விலக்கி வைக்கிறான். அவள் இல்லை இல்லை என்று எவ்வளவோ எடுத்துக் கூறியும், வேலு அவளை நம்பாமல் விலக்கி வைக்கிறான்.

புருஷன் பொண்டாட்டியாக
வெளிப் பார்வைக்கு புருஷன் பொண்டாட்டியாக நடிக்கலாம் என்று வேலு கூற, பாட்டி மனதை நோகடிக்க கூடாது என்று இருவரும் நன்றாக வாழ்வது போல நடிக்கிறார்கள்,. அப்போதுதான் வேலுவுக்கு டைனிங் டேபிளில் இட்லி பரிமாறுகிறாள் தமிழ்.

இட்லியை அடுக்க
தமிழ் வேலுவின் தட்டில் வரிசையாக இட்லியை அடுக்க, போதும் நான் என்ன பூதமா இத்தனை இட்லியை அடுக்கறே.. ஏய்னு கத்தறான். அவள் கண்ணடித்து.. சாப்பிடுங்க. கல்யாண வேளையில் களைப்பாக இருப்பீங்க... என்று சொல்லி முருங்கை காய் சாம்பாரை ஊற்றுகிறாள். இந்த மூடில் முருங்கைக்காய் சாம்பாரா என்று முனக.. பாட்டி லதா சற்றே வெட்கப் படுகிறார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications