அம்மாவை காப்பாத்த போன பவுர்ணமி இப்போ சிக்கலில்.. அப்பா காப்பத்துவாரா?
சென்னை: சன் டிவியின் பவுர்ணமி சீரியலில் பவுர்ணமி அம்மாவை காப்பத்த போயி தனக்கே தெரியாம சிக்கலில் மாட்டிக்கறா.
பவுர்ணமி ராசி இல்லாதவ, இவ பொறந்த நேரம்தான் அருமை மனைவி வசந்தி இறந்து போயிட்டான்னு அப்பா சக்கரவர்த்திக்கு அவளை சுத்தமா பிடிக்காது.
ரெண்டாவது அம்மா வாசுகிக்கு பவுர்ணமியை ரொம்ப பிடிக்கும். பவுர்ணமிக்கு பாதுகாப்பா பாட்டி, அம்மா, தங்கை இருக்காங்க.

பாதுகாப்பு
அம்மாவை மிரட்டின ரவுடிக்கிட்டே இருந்து அவங்களை பாதுகாக்க ,அவங்க இடத்துக்கே போயி பவுர்ணமி மிரட்டிட்டு வர்றா. இந்த சமயத்துல பவுர்ணமிக்கு எதிரா இந்த ரவுடி குரூப் வேலை பார்க்கறாங்க.

பவுர்ணமி காதல்
ராம்கி பவுர்ணமியை காதலிக்கறான். ஆனா, ராம்கியை பவுர்ணமி தங்கை பவானி காதலிக்கறா. ராம்கியின் சிஷ்ய பையன் லவ் லெட்டரை மாத்தி குடுத்துட்டதால் வந்த பிரச்சனை இது.

அப்பா அம்மா
ராம்கியின் அப்பா அம்மா அவனிடம் சொல்லாமலே பவுர்ணமியின் அப்பா சக்ரவர்த்திகிட்ட போயி பொண்ணு கேட்டுட்டு வந்துடறாங்க. சக்கரவர்த்திக்கு தன் பொண்ணுன்னு சொன்னா அது பவானி மட்டும்தான்.

சம்மதம்
சக்கரவர்த்திக்கு பவானி காதலிக்கறது தெரியும். உடனே சம்மதம் தெரிவிச்சுடறார். பவானிகிட்டயும் பையன் நல்ல பையனா இருக்கான். அவனும் என்கிட்ட என்னவோ பேசணும்னு சொல்லிப் பார்க்க வந்தான்னு சொல்றார்.

தெரியாது
அவருக்கு தெரியாது ராம்கி உங்க பொண்ணு பவுர்ணமியைத்தான் நான் காதலிக்கறேன்னு சொல்ல வந்தது.இப்படி போயிகிட்டு இருக்க நேரத்துலதான் பவுர்ணமிக்கு ஆபத்து வருது.

பவுர்ணமி
சக்ரவர்த்தி காரில் ஏறப்போக ஒருத்தன் வந்து சார் உங்ககிட்ட பேசணும்னு சொல்றான். நேரமில்லைன்னு சொல்ல.. இல்லை சார் இது உங்க பொண்ணை பத்தின விஷயம்னு சொன்னதும் நிக்கறார்.

பொண்ணுக்கு
உங்க பொண்ணும், நானும் படிக்கும்போது இருந்தே காதலிக்கறோம் சார். உங்களுக்கு தெரியாம கல்யாணம் பண்ணிக்கலாம்னு அவ சொன்னா.. நான்தான் மாமாகிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டுன்னு சொல்லும் போதே விடறார் ஒரு அறை. என் பொண்ணுக்கு ஏற்கனவே பையனை பார்த்து முடிச்சுட்டேன்..நீ என்னடா புதுக்கதை விடறேன்னு கேட்கறார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications