வரும் தேர்தலில் கமல்ஹாசனை எதிர்த்து பிரதீப் போட்டியா? வெளியான வீடியோ.. குவியும் கமெண்ட்கள்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பிரதீப்க்கு கமல்ஹாசன் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு பிரதீப் ஒரு பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதோடு பிரதீப்பின் வீடியோவை பகிர்ந்து கமல்ஹாசனை டேக் செய்து ரசிகர்கள் சிலர் நீங்கள் பெண்களுக்கு பிரதீப்பால் பாதுகாப்பு இல்லை என்று சொன்னீர்களே இப்போது பெண்கள் படிக்கும் பள்ளியில் பிரதீப்புக்கு பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்திருக்கிறது பாருங்கள் என்று சில நெட்டிசன்கள் இணையத்தில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வு என்றால் அது பிரதீப்புடைய வெளியேற்றம் தான். பிரதீப் ஆரம்பத்திலிருந்து இந்த சீசனில் டைட்டில் வின்னராக வருவார் என்று ரசிகர்கள் நினைத்திருந்த நிலையில் அவரோடு நண்பர்களாக இருந்த சில போட்டியாளர்கள் பிரதீப்பால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொன்ன குற்றச்சாட்டு காரணமாக பிரதீப் தன்னுடைய தரப்பு நியாயங்களை சொல்ல விடாமல் அவருக்கு கமல்ஹாசன் டிவி சேனலோடு பேச்சுவார்த்தை நடத்தி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றி வைத்திருந்தார்.
இது பெரிய அளவில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருந்தது. அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரதீப் தன்னுடைய மனக்குமுறல்களை அடிக்கடி இணையத்தில் கொட்டிக் கொண்டிருந்தார். அவருக்கு ரசிகர்கள் தொடர்ச்சியாக ஆதரவு தெரிவித்து கொண்டு இருந்தனர். அதுபோல பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுத்த பல போட்டியாளர்கள் நிகழ்ச்சி முடிவடைந்ததும் பிரதீப்பிடம் மன்னிப்பு கேட்டு தாங்கள் செய்தது தவறு என்றும் பிரதீப் தான் இந்த சீசனை டைட்டில் வின்னராக வருவார் என்றும் நாங்கள் நினைத்தோம் என்றும் சிலர் கூறிக் கொண்டிருந்தனர்.
அதுபோல உள்ளிருந்து வெளியே வந்த போட்டியாளர்கள் பலர் பிரதீப் தான் ஸ்ட்ராங்கான போட்டியாளர் என்றும் கூறிக் கொண்டிருந்தனர். இப்படியான நிலையில் தான் இந்த நிகழ்ச்சி முடிவடைந்தது அதற்குப் பிறகு இந்த பேச்சு இனி அப்படியே போய்விடும் என்று நினைத்திருந்த நிலையில் நேற்றிலிருந்து ஒரு வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
அதாவது பிரதீப் சிறப்பு விருந்தினராக ஒரு பள்ளியின் ஆண்டு விழாவில் கலந்து கொண்டிருக்கிறார். அந்த வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்த ரசிகர்கள் அதற்கு கமல்ஹாசனை டேக் செய்து பதிவுகளை போட்டு வருகின்றனர். அதில் Arrant என்ற twitter ஐடியில் இருந்து ஒரு பதிவு வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் கமல்ஹாசனை டேக் செய்து நீங்கள் (கமல்ஹாசன்) தவறாக ரெட் கார்டு கொடுத்திட்டீங்க.
இப்போது பிரதீப் பள்ளிக்கு தலைமை விருந்தினராக ஆகி இருக்கிறார். நிச்சயமாக அவருடைய பயோடேட்டாவில் நிறைய நிகழ்வுகள் இருக்கிறது அதில் ஒன்றுதான் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியும் என்றும் கூறியிருக்கின்றனர். அதற்கு அதிகமான கமெண்ட்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதில் இந்த பதிவிற்கு கிரிஜா என்ற ஒரு ஐடியில் இருந்து ஒரு பதிவு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் தலைமை விருந்தினராக தானே பிரதீப் கலந்து கொண்டிருக்கிறார் ஆனால் முதல்வர் நிலைக்கு அலப்பறைகள் பண்ணுறீங்களே என்று கேள்வி கேட்க அதற்கு arrant என்ற ஐடியில் இருந்து பதில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் கமல்ஹாசனை எதிர்த்து பிரதீப் போட்டியிட்டால் கண்டிப்பாக அவர்தான் வெற்றி பெறுவார் என்று கூறி இருக்கிறார்.
பிக் பாஸ் பிரச்சனை இப்போது அரசியல் பிரச்சினையாக மாறிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே நடிகர் விஜய் புதியதாக அரசியல் கட்சியை தொடங்கியிருக்கிறார். அவருக்கு போட்டியதாக இன்று நடிகர் விஷாலும் தானும் புதிய கட்சியை தொடங்கியிருப்பதாக கூறி இருக்கிறார். இந்த நிலையில் பிரதீப்பையும் விட்டு வைக்காமல் ரசிகர்கள் இப்படி போட்டி போடுவது தான் வேடிக்கையாக இருக்கிறது என்பது பலருடைய மனக்குமுறலும் அந்த சேட்டிங்கில் இருக்கிறது.
-
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
குலதெய்வ கோவிலில் கணவருடன் மகிழ்ச்சியை பகிர்ந்த மணிமேகலை.. அடடா சூப்பர்! குவியும் வாழ்த்துக்கள் -
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி












Click it and Unblock the Notifications