கைமேல் கைவைத்து... கண்ணோடு கண்பார்த்து... எவ்ளோ மகிழ்ச்சி... எல்லாம் போச்சா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியலில் சந்தோஷ், ஜனனி டிவோர்ஸ் பண்ணாம ஒண்ணு சேர்ந்து வாழ மாட்டாங்களான்னு பார்க்கறவங்களுக்கே ஏக்கம் வந்திருக்குன்னா பாருங்களேன்.

சந்தோஷ் சக்தின்னு ஒரு பொண்ணை காதலிச்சு இருப்பான் போல. சந்தோஷ், சக்தியின் காதல் ஜனனிக்கு தெரியும். இதுக்கு நடுவுலதான் இவங்க ரெண்டு பேருக்கும் சந்தர்ப்ப வசத்தால் கல்யாணம் முடிஞ்சுருது.

Will Santosh live with Janani?

வீட்டுக்குத் தெரியாம டிவோர்ஸுக்கு அப்ளை பண்ணிட்டு, வக்கீல் பணம், பணம் என்று நச்சரிக்க, ஜனனி நகைகளை வித்து பணம் கொடுத்தும், வக்கீல் இன்னும் பணம் கேட்டு நச்சரிக்கிறார்.

அது மட்டுமில்லாமல், சந்தோஷ் பேசியதை ரெகார்ட் செய்து வைத்து, அதை உன் மாமனாரிடம் காட்டிடுவேன்னு மிரட்டவும் ஆரம்பிச்சுட்டார். சந்தோஷ் வக்கீலை பார்த்துட்டு மிக கவலையுடன் பெட்ரூம் வருகிறான்.

அங்கு ஏற்கனவே ஜனனி கட்டில் மேல் பெட்டில் ஒரு கையை ஊன்றியபடி மவுனமாக உட்கார்ந்து இருக்காங்க. திடீரென்று எழுந்து வந்த சந்தோஷ், ஜனனியின் கை மேல் தன் கையை வைத்து மெதுவாக அழுத்துகிறான்.

Will Santosh live with Janani?

இன்ப அதிர்ச்சியுடன் சந்தோஷைத் பார்க்கிறாள் ஜனனி. நாம டிவோர்ஸ் பண்ணாம சேர்ந்து வாழலாமாங்க... எதுக்கு இந்த டிவோர்ஸ் கேஸ்லாம்னு கேட்கறான். தாமரை போல மலர்ந்த முகத்துடன், நிஜமாவாங்கன்னு கேட்கறா ஜனனி.

ஆமாம்... நிஜமாத்தான் சொல்றேன்னு இவன் சொல்ல, அப்போ சக்தின்னு கேட்கறா ஜனனி... அவ பிரச்னையை நான் பார்த்துக்கறேன். பள்ளிக்கூடம் கட்டி குடுத்துருவேன்னு சொல்ல, ஜனனி முகத்தில் பூரிப்பு.

Will Santosh live with Janani?

அடுத்த நொடி திரும்பிப் பார்க்கிறாள், சந்தோஷ் சலனமினிறி கண்மூடி கட்டிலில் சாய்ந்தபடி உட்கார்ந்துருக்கான். சே.. இது கனவா? பாவம் ஜனனியின் முகத்தில் மீண்டும் அதே வெறுமை..

ஆமா, டிவோர்ஸுக்கு அப்ளை பண்றீங்க சந்தோஷ்.. உங்க நலனுக்கோ, ஜனனி நலனுக்கோ.. அது மேட்டரில்லை. .அதுக்கு கூட பணம் ஜனனியின் நகைகளை மனசாட்சி இலலாம வித்து குடுத்து இருக்கீங்க.

உங்க குடும்பத்துல ஒருத்தியா வாழ்ந்துகிட்டு இருக்க ஒரு பொண்ணோட மனசை கூடவா ஒரு பையனால புரிஞ்சுக்க முடியாது... இப்படியும் சில ஆண்கள்... அது சரி இல்லேன்னா திருமணம் சீரியல் கிடைச்சு இருக்குமா?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+