தாமரை பக்கம் நகரும் தவெக.. அரசியல்வாதி போர்வையில் சினிமாக்காரர்.. திமுகவால் சமாளிக்க முடியல: பிரபலம்
சென்னை: இனி அடுத்தக்கட்டமாக விஜய், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாஜகவை நோக்கி நகருவார்.. ஏற்கனவே விஜய்யை தன்பக்கம் இழுப்பதற்கான வேலையை பாஜகவும் துவங்கிவிட்டது. அதேபோல விஜய் மீதான சட்ட நடவடிக்கையை திமுக தொடர்ந்து மேற்கொள்ளும் என்று மூத்த பத்திரிகையாளர் மணி ஆருடம் கூறியிருக்கிறார். மேலும் தன்னுடைய பேட்டியில் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார் மணி.
Retroluxe என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் மணி, "கரூர் சம்பவம் நடந்ததற்கு நான் பொறுப்பேற்கிறேன் என்று இதுவரை விஜய் ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை.. குறைந்தபட்சம் "நானும் பொறுப்பேற்கிறேன்" என்றுகூட சொல்லவில்லை..

விஜயகாந்த் - வேட்டியை மடிச்சு கட்டி
ஒரு நிஜமான அரசியல் தலைவராக இருந்தால், நான் பொறுப்பேற்கிறேன் என்று சொல்லியிருப்பார்கள்.. இதுவே விஜயகாந்த்தாக இருந்தால் அந்த வார்த்தை அப்போதே வந்திருக்கும்.. அத்துடன், தானே வேட்டியை மடித்து கட்டி களத்தில் இறங்கி, கரூர் மருத்துவமனைக்குள்ளும் சென்று பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கு உதவியிருப்பார்.. அந்த நேர்மை விஜயகாந்த்துக்கு எப்போதுமே இருந்தது..
முதலமைச்சர் ஸ்டாலின், 3 நாட்களுக்கு வெளியிட்டிருந்த வீடியோவை, விஜய் தான் முதலில் வெளியிட்டிருக்க வேண்டும்.. சம்பவத்தன்று விஜய் மட்டும் மன்னிப்பு கேட்டிருந்தால், அவரது மரியாதை எங்கேயோ உயர்ந்திருக்கும்.. ஆனால், பொறுப்பை ஏற்கவே மறுக்கிறார் விஜய்.. நடிகராக இருப்பதாலும், ஈகோ இருப்பதாலும் பொறுப்பை ஏற்க விஜய் தயங்குகிறார்..
ஈகோ நிறைந்த விஜய்
நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தி வரும்நிலையில், நிச்சயம் விஜய்யையும் விசாரணைக்கு அழைக்கப்படக்கூடும்.. அதேபோல, கரூர் போலீஸ் விசாரணைக்கு சம்மன் அனுப்பியும் விஜய்யை அழைக்கவே செய்யும்.. விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேட்டதற்குகூட பதில் சொல்ல முடியாத அளவுக்கு ஈகோ கொண்ட விஜய், மேற்கண்ட விசாரணைகளுக்கு ஆஜராகி பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.
அதுமட்டுமல்ல, ஒரு மிகப்பெரிய அரசியல் கட்சியுடன் தவெக மோதுகிறது.. ஆனானப்பட்ட ஜெயலலிதாவையே சட்டரீதியாக எதிர்த்து ஜெயிலுக்கு அனுப்பியது திமுக.. 2014 செப்டம்பர் 27 தமிழ்நாடு அரசு வரலாற்றில் மிக முக்கியமான நாள்.. ஜெயலலிதா சிறைக்கு அனுப்பப்பட்டார்.. பதவியில் இருக்கக்கூடிய முதலமைச்சரை, முதல்முறையாக சிறைக்கு அனுப்பப்பட்ட சுதந்திர இந்திய வரலாறு அன்றைக்கு நிகழ்த்தப்பட்டது..
ஜெயலலிதா - திமுக
இதற்கு பிறகு சரியாக 11 வருடம் கழித்து, ஒரு மிகப்பெரிய அரசியல் கட்சி தலைவரின் கூட்டத்தில் கூட்ட நெரிசல் 41 பேர் இறந்துள்ளனர்.. இந்த செப்டம்பர் 27-ம் தமிழக வரலாற்றில் மிக முக்கியமான நாள்.. ஜெயலலிதா மீதான கேஸை 18 வருடம் நடத்தி, ஜெயிலுக்கு அனுப்பி கட்சி திமுக..
எந்த அளவுக்கு ராட்சச எந்திரம் திமுகவிடம் உள்ளது என்ற குறைந்தபட்ச புரிதலும் தவெகவுக்கு இல்லை.. அதாவது எதிரியை பற்றின அளவுகோல் அவர்களிடமில்லை.. அவர்கள் யாரென்று அவர்களுக்கே தெரியவில்லை.. அந்த கூட்டமும் என்னவென்று புரியல.. விஜய் லைட்டை ஆஃப் செய்தால் சைலண்ட் ஆகிறார்கள், ஆன் செய்தால் ஓவென சத்தம் எழுப்புகிறார்கள்.. இதெல்லாம் தற்குறித்தனமாக உள்ளது.. இதுவரை எந்த அரசியல்வாதியும் செய்யாத காரியம் இது..
இனி அனுமதியே கிடையாது
இப்போது தமிழக அரசுக்கு சிக்கல் என்னவென்றால், அரசியல்வாதி என்ற போர்வையில் வரும் சினிமாக்காரரை கையாள முடியவில்லை.. காரணம், யாருக்கும், எதற்கும்
கட்டுப்படாமல் இருக்கக்கூடிய கூட்டமாக அது உள்ளது..
ஆனால், இனிமேல் விஜய்க்கு எந்த இடத்திலும் பேரணி நடத்த, பிரச்சாரம் செய்ய அனுமதியே தர மாட்டார்கள்.. வேண்டுமானால் விக்கிரவாண்டி, மதுரையில் நடந்ததுபோல் 200 ஏக்கர் நிலத்தை வாடகைக்கு எடுத்து, கூட்டம் நடத்திக் கொள்ள வேண்டியதுதான்.. விஜய்யால் மற்ற அரசியல் கட்சிகளுக்கும் கட்டுப்பாடுகள் இனி அதிகமாகும்..
இனி அடுத்தக்கட்டமாக விஜய், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாஜகவை நோக்கி நகருவார்.. ஏற்கனவே விஜய்யை தன்பக்கம் இழுப்பதற்கான வேலையை பாஜகவும் துவங்கிவிட்டது. அதேபோல திமுக சட்ட நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்ளும்..
சினிமாவில் நடிக்க போங்க
விஜய்யின் அரசியல் வாழ்க்கை இத்துடன் முடிவது தமிழ்நாட்டுக்கு நல்லது. விஜய் நடிகராகவே தொடரட்டும்.. ஒரு படத்துக்கு 275 கோடி சம்பளம் வாங்குவதாக சொல்கிறார்.. 2000 கோடிகூட சம்பளம் பெற்று சினிமாவில் தாராளமாக நடிக்கட்டும்.. ஆனால், அரசியலை விட்டு போய்விட வேண்டும்.. இவர்கள் எல்லாம் அரசியலில் இருப்பது தமிழ்நாட்டுக்கு ஆபத்து..
வாக்கு வங்கி அரசியலில் இருப்பவர்கள் ஒரே நேரத்தில் 2 எதிரியை எக்காலத்திலும் தமிழகத்தில் எதிர்க்கமுடியாது.. திமுகவை வீழ்த்த வேண்டுமானால் அதிமுகவுடன்தான் போக வேண்டும் அல்லது அதிமுகவை வீழ்த்த வேண்டுமானால் திமுகவுடன்தான் போக வேண்டும்..
ஆனால் திமுக, அதிமுக இரண்டையும் எதிர்ப்பேன் என்கிறார் விஜய்.. எனவே இவர் நடத்துவது அரசியல் கட்சியே கிடையாது.. முதல்ல இவர் அரசியல்வாதியும் கிடையாது.. எந்த அரசியல்வாதியும் 7 மணி நேரம் தன்னுடைய மக்களை ரோட்டில் நிறுத்தி வைக்க மாட்டார்கள்.. எனவே விஜய்க்கு அரசியல் எதிர்காலம் இல்லாமல் போவது தமிழ்நாட்டுக்கு மிகவும் நல்லது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
கட்டுக்கட்டாக பணம்.. சென்னையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் நிறுவன காரில் ரூ.60 லட்சம் பறிமுதல் -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
திமுகவையும் விடாத பிரேமலதா.. 3 சிட்டிங் எம்எல்ஏக்களை கைவிட ஸ்டாலினுக்கு அழுத்தம்.. புது தலைவலி -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
234/234 DMK seat sharing: தொகுதி பங்கீடு ஓவர்! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்! லிஸ்ட்! -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications