கோவாவில் பீட்டர் பால் அட்டகாசம்! வனிதா வெறுக்க காரணம்.. முன்னாள் கணவர் உடலுக்கு அஞ்சலி செலுத்துவாரா?
சென்னை: தனது மூன்றாவது கணவர் பீட்டர் பாலுடன் உறவை முறித்துக் கொண்டாலும் தற்போது அவர் உயிரிழந்த நிலையில் அவரது உடலுக்கு வனிதா விஜயகுமார் அஞ்சலி செலுத்த செல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. குறைந்தபட்சம் டிவிட்டரிலாவது இரங்கல் தெரிவிப்பாரா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பீட்டர் பால் விசுவல் எஃபெக்ட் எடிட்டர். இவர் சில திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். லாக்டவுன் நேரத்தில் வனிதா விஜயகுமார் குக்கரி யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கினார். அப்போது அவருக்கு வீடியோ எடிட்டிங்கிற்கு ஆளை தேடிய போது பீட்டர் பால் தான் செய்து கொடுப்பதாக கூறியிருந்தார்.

இதையடுத்து கொரோனா காலத்தில் சில நேரங்களில் வனிதாவின் வீட்டிலேயே தங்கியிருந்து கூட பீட்டர் பால் எடிட்டிங் பணிகளை செய்திருந்தாராம். இந்த நிலையில் ஒரு நாள் பீட்டர் பால், வேறு வேலை விஷயமாக வெளியே சென்றவர் வனிதாவை பார்க்க வரவில்லையாம்.
Recommended Video
அப்போது வனிதாவுக்கு பீட்டர் பால் மீது காதல் இருந்தது தெரியவந்தது. ஏற்கெனவே இரு திருமணங்கள் தோல்வியில் முடிந்த நிலையில் குழந்தைகளிடம் பீட்டர் பால் குறித்து வனிதா கருத்து கேட்ட நிலையில் அவர்களும் நல்லவிதமாகவே சொல்லியிருந்தனர். இதையடுத்து வனிதா, பீட்டர் பாலை திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா லாக்டவுனின் போது பீட்டர் பாலை கிறிஸ்தவ முறைப்படி வனிதா திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் பீட்டர் பால் திருமணமானவர் என்றும் அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும், பள்ளியில் படிக்கும் மகளும் இருப்பதாக எலிசபெத் ஹெலன் என்பவர் டிவியில் பேட்டி அளித்தார்.
இதையடுத்து அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாகவும் அதற்கு அப்ளை செய்துள்ளதாகவும் பீட்டர் பால் தெரிவித்திருந்தார். ஆனால் பீட்டர் பாலுக்கு திருமணமானதே தனக்கு தெரியாது என வனிதா விஜயகுமார் தெரிவித்தார். எனினும் அவர் எலிசபெத்தையே குற்றம்சாட்டினாரே தவிர பீட்டர் பாலுடன் ஹனிமூன் எல்லாம் சென்றார் வனிதா. அடுத்தவர் கணவரை பறிப்பது சரியா என நெட்டிசன்களும் நடிகை கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.

பீட்டர் பால் பணியாற்றும் ஸ்டூடியோவிற்கு சமைத்து நேரிலேயே சாப்பாடு கொண்டு வந்து கொடுத்து சர்பிரைஸ் செய்தார் வனிதா. தனது குழந்தைகளுக்கு நல்ல பாதுகாவலனாக இருப்பதாகவும் வனிதா பூரித்து போய் தெரிவித்திருந்தார். இருவரும் மேட்சிங் மேட்சிங் கலரில் உடை அணிந்து கொண்டு ஒருவரை ஒருவர் பேட்டி எடுத்து கொண்டனர்.
இப்படி பலரை எதிர்த்து செய்த இந்த திருமணம் வனிதாவுக்கு ஓராண்டு கூட நிலைக்கவில்லை. பீட்டர் பாலுடன் கோவாவுக்கு வனிதா தனது மகள்களை அழைத்து சென்றார். ஆனால் அங்கு பீட்டர் பால் நிறைய மது குடித்துவிட்டு எந்த நேரமும் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்ததால் வனிதாவுக்கு வெறுப்பு ஏற்பட்டது. நடுவில் ஒரு முறை உடல்நலம் பாதித்தது. சாலிகிராமத்தில் ஒரு மருத்துவமனையில் அவரை அனுமதித்து நிறைய லட்சங்களை செலவு செய்து உயிரை காப்பாற்றியதாக தெரிவித்திருந்தார்.
அப்படி இருக்கும் போது இவர் மீண்டும் குடிப்பதும் சிகரெட் பிடிப்பதும் என இருந்ததால் அவருடன் சண்டையிட்டு கொண்டு சென்னைக்கு வந்த வனிதா அவரை வீட்டிலிருந்து வெளியேற்றினார். அதன்பிறகு பச்சை குத்தியிருந்த பீட்டர் பாலின் பெயரை நீக்கினார். இதையடுத்து வனிதாவுக்கு பலத்த அடியாக இருந்தாலும் அவர் விரைந்து அவற்றை எல்லாம் கடந்து நல்லதொரு நிலைக்கு வந்துவிட்டார்.
துணி பிசினஸ், ரியாலிட்டி ஷோக்கள், சீரியல்கள், படங்கள் என பிசியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் பீட்டர் பால் கடந்த சில மாதங்களாகவே உடல்நலமின்றி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் தற்போது உயிரிழந்துவிட்டார். இதையடுத்து பலரும் பீட்டர் பாலின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். முன்னாள் கணவர் என்ற முறையில் பீட்டர் பாலின் உடலுக்கு வனிதா விஜயகுமார் அஞ்சலி செலுத்துவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. குறைந்தபட்சம் அவரது இறப்புக்கு சமூகவலைதளங்களிலாவது இரங்கல் தெரிவிப்பாரா என்றும் நெட்டிசன்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications