அரசியலுக்கு வருவீங்களா? தனுஷ் போல திரிஷா கொடுத்த ரியாக்ஷன்.. உள்குத்து இருக்கு போல!
சென்னை: தமிழகத்தில் இப்போது சினிமாவையும் அரசியலையும் தனித்தனியாக பார்க்க முடியாத சூழல் உருவாகி இருக்கிறது. நடிகர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு சினிமாவில் இருக்கும் மற்ற பிரபலங்களுக்கும் அரசியலுக்கு வருவார்களா? என்ற கேள்வி அடிக்கடி எழுகிறது. அந்த வரிசையில் இப்போது நடிகை திரிஷாவிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும், அதற்கு அவர் கொடுத்த ரியாக்ஷனும் பேசு பொருளாகி இருக்கிறது.
கோவையில் தனியார் மொபைல் கடை திறப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த திரிஷாவிடம், எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவீங்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். ஆனால் அதற்கு அவர் நேரடியாக எந்த பதிலும் சொல்லாமல் சிரித்தபடியே அங்கிருந்து சென்று விட்டார். அந்த சில நிமிட வீடியோ தான் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
திரிஷாவின் ரியாக்ஷன்
திரிஷாவின் இந்த ரியாக்ஷனை பார்க்கும்போது சமீபத்தில் நடிகர் தனுஷிடம் கேட்கப்பட்ட கேள்விதான் நினைவுக்கு வருகிறது. தேசிய விருது வாங்கிவிட்டு தனுஷ் வரும்போது அவரிடமும் செய்தியாளர்கள் அரசியல் கட்சி எப்போது தொடங்கப் போகிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு அவரும் எந்த பதிலையும் சொல்லாமல் சிரித்தபடி அங்கிருந்து சென்று விட்டார். இப்போது அதேபோல திரிஷாவும் பதில் சொல்லாமல் சென்றிருப்பது இருவரையும் ஒப்பிட்டு பேச வைத்திருக்கிறது.

தனுஷின் அரசியல் செயல்பாடு
தனுஷ் ஆரம்பத்தில் இருந்து நற்பணி மன்றம் நடத்தி வந்திருந்தாலும் சமீபகாலமாக அதன் செயல்பாடுகள் ரொம்பவே பேசப்படுகிறது. இதற்கு முன்பு அவர் செய்யும் உதவிகள் பெரிதாக வெளியே தெரியாமல் இருந்தாலும், இப்போது அவர் நலத்திட்ட உதவிகள் செய்வதை விளம்பரப்படுத்தி வருகிறார்கள். அதுபோல தனுஷ் செல்லும் இடமெல்லாம் ரசிகர்கள் ஆரவாரம் செய்வது, தனுஷின் ரசிகர் மன்றக்கொடி என பல விஷயங்களை வைத்து தான் அவரும் அடுத்ததாக கட்சி தொடங்கப் போகிறாரா என்ற கேள்வி ஓடிக்கொண்டிருக்கிறது.
பதிலே இல்லை
சமீப காலமாகவே திரிஷா பற்றி அதிகமாக பேசப்பட்டாலும் திரிஷா செய்தியாளர்களிடம் எந்த தகவல்களையும் பேசுவதில்லை. சோசியல் மீடியாவில் கூட குதர்க்கமான ஏதாவது போஸ்ட் போடுகிறார், இல்லை என்றால் தன்னுடைய போட்டோ சூட் பதிவுகளை மட்டுமே வெளியீட்டு வருகிறார். தன்னை பற்றி விமர்சனங்களுக்கு எந்த பதிலுமே கொடுக்காமல் இருக்கிறார். இதனாலேயே இவருடைய அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று கேள்விகள் இருக்கிறது. திரிஷா அமைதியாக இருந்தாலும் அவருக்காக ரசிகர்கள் தொடர்ந்து ஒட்டப்பட்டு வரும் போஸ்டர்களும் அடிக்கடி பேசப்பட்டு வருகிறது.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு
திரிஷாவை அரசியலுக்கு வரவேற்று ரசிகர்கள் போஸ்டர் ஓட்டி வருகிறார்கள். அதற்கு கூட திரிஷா எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல் இருக்கிறார். அதை பார்க்கும்போது யார் என்னை பற்றி என்ன பேசினாலும் பரவாயில்லை, நான் கண்டுகொள்ளவே மாட்டேன் என்று திரிஷா ஒரு முடிவோடு தான் இருக்கிறார் போல என்று ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் திரிஷாவை பற்றி எத்தனையோ விமர்சனம் வருகிறது அதற்கு முற்றுப்புள்ளி வைத்தால் நல்லது என்று அவருடைய ரசிகர்களும் உரிமையாக கோரிக்கை வைக்கிறார்கள். இதனால் திரிஷா விரைவில் பேசுவாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.



Click it and Unblock the Notifications
