நடிகரால் விஷம் குடித்த நடிகை.. அதவிடுங்க, ஜென்டில்மேன் கார்த்திக்.. A/C கூட இல்லை: பிரபலம் பாராட்டு
சென்னை: உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தில் நடிப்பதற்கு தயங்கிய கார்த்திக், அந்த படத்தில் எப்படி நடிக்க ஒப்புக் கொண்டார், படப்பிடிப்பிற்கு கார்த்திக் தந்த ஒத்துழைப்பு, இதை பற்றியெல்லாம் பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார் பிரபல டைரக்டர் விக்ரமன்.
நவரச நாயகன் நடிகர் கார்த்திக், தமிழ் சினிமாவில் மிகவும் துருதுருவென அனைவருக்கும் பிடித்தமான நடிகராக வலம் வந்தவர். குறிப்பாக 80கள் காலகட்டத்தில் பெரும்பாலான நடிகைகளின் கனவு நாயகனாக திகழ்ந்தவர்.

ஆனால், பெரும்பாலும் படப்பிடிப்பிற்கு ஒழுங்காக வரமாட்டார் என்ற விமர்சனம் கார்த்திக் மீது பல டைரக்டர்கள் சொல்லி உள்ளார்கள். அதேசமயம், ஒரு முறை படப்பிடிப்பிற்கு வந்துவிட்டால் எல்லாமே பெர்ஃபெக்ட்டாக நடித்து முடித்துக் கொடுத்துவிடுவார் என்றும் அவரை அதே டைரக்டர்கள் பாராட்டியும் சொல்வார்கள்.
குழந்தை மனசுக்காரர்
சில நாட்களுக்கு முன்புகூட, பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு சேனல் ஒன்றுக்கு தந்திருந்த பேட்டியில், "கார்த்திக் எப்போதுமே குழந்தைத்தனமாகத்தான் பேசுவார்.. அவர் உண்மையிலேயே குழந்தை மனசுக்காரர்.. கான்வென்டில் படித்தவர்.. நியூ காலேஜில் டிகிரி முடித்தார்.. செல்லப்பிள்ளையாகவே வளர்ந்தவர்.. வசதியாக அவரை வளர்த்தார்கள்.. அவரால் வெயிலில் கொஞ்ச நேரம்கூட நிற்க முடியாது..
சில தவறான பழக்கவழக்கங்களுக்கு கார்த்திக் சார் அடிமையானதால், அந்த நல்ல நடிகரை இன்று திரையில் நம்மால் பார்க்க முடியவில்லை. இதனால் சினிமாவில் ஷூட்டிங்கிலும் சரியான நேரத்துக்கு வராமல் போக இதுவே காரணம்.. சில நடிகர்கள், தயாரிப்பாளர்கள், டைரக்டர்களுக்கு ஒத்துழைப்பு தராமல், திட்டமிட்டே காலி செய்வார்கள்.. ஆனால், கார்த்திக் அப்படியில்லை.. கார்த்திக்கால் பாதிக்கப்பட்டவர்கள் கூட, அவரை திட்ட மாட்டார்கள்..
நடிகை தற்கொலை முயற்சி
எனினும், சொந்த பிரச்சனையில் நிறைய பஞ்சாயத்துகளை சந்தித்தார்.. இவர் திருமணம் செய்தபோது, ஒரு நடிகை விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. இப்படி பல பஞ்சாயத்துகள் அன்று நடந்தது.. ஆனாலும், தன்னுடைய செயல்பாடுகளினாலேயே, சினிமா, அரசியலில் சரிந்துவிட்டார் கார்த்திக்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், சித்ரா லட்சுமணனின் டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு டைரக்டர் விக்கிரமன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில், "உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தில் கார்த்திக் நடித்தபோது, முதல் 3 நாள் படம் ஷூட் எடுத்தோம்.. 4வது நாள் வாகினியில் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது, என்னிடம் கார்த்திக் சார் தனியாக பேச வேண்டும் என்று சொன்னதாக தயாரிப்பாளர் வந்து சொன்னார். உடனே நான் கார்த்திக்கிடம் சென்றேன். அவர் என்னிடம், "இந்த படம் நந்தவனத்தேரு படம் போலவே இருக்கே?" என்று கேட்டார்.
வாழ்க்கையில் நன்றி மறந்தவர்கள்
அதற்கு நான், "நானும் நந்தவனத்தேரு படம் பார்த்திருக்கிறேன், ஹீரோயினை பாடகியாக்குவது மட்டுமே இந்த படம் இல்லை. நன்றி என்ற விஷயத்தை ஹைலைட் செய்கிறேன். வாழ்க்கையில் நன்றி மறந்தவர்களுக்கெல்லாம் இந்த படம் நிச்சயம் உணர்த்தும்.. பெரிய ஹிட்டாகும் இந்த படம்.. ஒருவேளை உங்களுக்கு இந்த படம் பிடிக்காவிட்டால், இதே தயாரிப்பாளருடன் நீங்கள் வேறு படம் செய்யுங்கள், நான் வேறு ஹீரோவுடன் இந்த படம் எடுத்து கொள்கிறேன்" என்றேன்.
உடனே கார்த்திக், "உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கை இருந்தால் நிச்சயம் நான் நடிக்கிறேன். இந்த படம் சக்ஸஸ் ஆகிவிட்டால், விழா மேடையில் உங்களுடைய தன்னம்பிக்கையால மட்டுமே இது சாத்தியம் என்று சொல்வேன்" என்றார்.
ஜென்டில்மென் கார்த்திக்
உடனே நான், "நீங்கள் ஷூட்டிங்குக்கு மட்டும் சரியான நேரத்தில் வந்தால் நல்லா இருக்கும் என்றேன். அதற்கு கார்த்திக், "காலைல என்னால 7 மணிக்கெல்லாம் வர முடியாது. அதனாலதான் சிவாஜி சார்கூடயே என்னால நடிக்க முடியாமல் போய்விட்டது. சென்னையில் ஷூட்டிங் என்றால் 9,10 மணிக்கு வருகிறேன். சென்னையை தாண்டி என்றால் 11 மணிக்கு வந்துவிடுகிறேன் என்றார். அதன்படியே சொன்னபடியே செய்தார் ஜென்டில்மேன் கார்த்திக்.
வரும்போதே மேக்கப்புடன் வருவார்.. நைட் 2 மணி வரைக்கும் நடிப்பார்.. அப்போது உத்தண்டியில் ஷூட்டிங் நடக்கும்போது அவருக்கு ஏசி ரூம் கூட இல்லை. இத்தனைக்கும் ஏப்ரல் மே மாதங்களில்தான் அந்த படம் ஷூட் எடுத்து கொண்டிருந்தேன்.. கிரேட் பெர்ஃபார்மர்.. எனக்கு தெரிந்து சிவாஜி சார், கமல் சார், கார்த்திக் சார் என்றுதான் சொல்வேன்" என்று பாராட்டியிருக்கிறார் விக்ரமன்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications