கேவலத்தை தாங்க முடியல சிவக்குமாருக்கு.. அதைவிடுங்க, சிவகார்த்திகேயனுக்கு ஜெயம் ரவி வில்லனா? பிரபலம்
சென்னை: சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில், ஜெயம் ரவி வில்லனாக நடிக்க போவதாக தகவல்கள் வெளிவந்து, ரசிகர்களின் ஆர்வத்தை அதிகப்படுத்தி வருகின்றன. ஜெயம் ரவி ஏன் வில்லனாக நடிக்க வேண்டும் என்று, பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு சந்தேகம் வெளிப்படுத்தியிருக்கிறார்.
"ஜெயம் ரவி, தற்போது ரவி மோகன் என்று பெயர் மாற்றிக் கொண்டார்.. ஆனால், ஜெயம் ரவியாக இருந்தபோது, அவருக்கு தடுமாற்றங்கள் இல்லை, மனக்குழப்பங்கள் இல்லை.. பிரச்சனைகள் இல்லை.. சந்தோஷங்கள் தொடர்ந்து நீடித்தது..

அவரது குடும்ப விவகாரத்துக்குள் நாம் போக வேண்டாம். ஆனால், அதற்கு பிறகும் சின்ன சின்ன பிரச்சனைகள் அவருக்கு இருந்திருக்கலாம்.. சரியான முடிவுகளை எடுக்க முடியாமல் போயிருக்கலாம், எனவே, யாராவது, பெயர் மாற்றிக் கொள்ளும்படியும் சொல்லியிருக்கலாம். யாருக்குமே தடுமாற்றமான மனநிலை வந்துவிட்டால், ஜோதிடர்களை நாடி செல்வது இயல்பு.
பெயர் மாற்றம்: ஆனால், அவர், ஜெயம் ரவியாக இருந்தபோது சின்ன ஆளாக இருந்தாரா என்ன? அப்போதும்கூட அவர் பிரபலமான ஸ்டார்தான்.. பெயர் மாற்றம் செய்துள்ள அவரது நம்பிக்கை.
ஆனால், தற்போது, சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக ஜெயம் ரவி நடிப்பதாக தெரிகிறது.. நடிகர்கள் பலவிதமான கேரக்டர்களில் நடிப்பது நல்ல விஷயம்தான். ஆனால், ஜெயம்ரவி, இறங்கு முகத்தில் இருக்கும்போது, வில்லனாக நடிக்க வேண்டிய அவசியம் இல்லை.. அதிலும் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க வேண்டிய அவசியம் இல்லை.. எதற்காக இந்த முடிவை எடுத்தார்? இது சரியா? தப்பா என்று அவரிடம்தான் கேட்க வேண்டும்.
கிளைமேக்ஸ்: ஆனால், இருவருக்குமே சமமான ரோல் என்கிறார்கள்.. கிளைமேக்ஸில் எப்படியும் ஒரு சண்டை இருக்கும். இதில், சிவகார்த்திகேயனை ஜெயம் ரவி ஜெயிப்பாரா? ஜெயம் ரவியை சிவகார்த்திகேயன் வெல்வாரா? ஹீரோ தோற்றுப்போய், வில்லனை ஜெயிக்க வைத்து இதுவரை சினிமா எடுத்திருக்காங்களா? அப்படி எடுத்தால் கதையில் லாஜிக் இல்லை என்று சொல்லிவிடுவார்கள். சமமான கேரக்டர் என்று சொல்வதெல்லாம் சப்பைக்கட்டு கட்டுவதுதான்.
விஜய்சேதுபதியும் இப்படி வில்லனாக பல படங்களில் நடித்தார் என்கிறீர்கள்.. ஜெயம் ரவியுடன் விஜய்சேதுபதியை ஒப்பிடக்கூடாது.. ஜெயம் ரவி, இளம் ஆக்ஷன் ஹீரோ.. ஆனால் விஜயசேதுபதி ஹீரோ + கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்.. எந்த கேரக்டர் தந்தாலும், நடிக்கக்கூடியவர். திருநங்கை வேடம் உட்பட ஆரம்பத்திலிருந்தே நிறைய கேரக்டர்களை தேர்ந்தெடுத்து, வித்தியாசமாக நடிப்பவர்.. ஹீரோவாகவும் நடிப்பார், வில்லனாகவும் நடிப்பார்.. அவரை இந்த லிஸ்ட்டில் வைக்கக்கூடாது.
கதைத்தேர்வு: ஜெயம் ரவியை கமர்ஷியல் ஆர்ட்டிஸ்ட்டோடுதான் ஒப்பிடணும். எனினும், இந்த படத்தில் எதற்காக வில்லன் கேரக்டரை ஜெயம் ரவி தேர்ந்தெடுத்தார் தெரியவில்லை.. எப்படியோ நல்லபடியா வரட்டும். சக்ஸஸ் ஆகட்டும்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்த பேட்டியின்போது நடிகர் சூர்யா மற்றும் சிவக்குமார் பற்றி பேசிய பாலாஜி பிரபு, "ஆரம்பத்தில் சூர்யாவுக்கு கதைத்தேர்வில் சிவக்குமார் சார் உதவியிருப்பார்.. எப்போதுமே சிவக்குமார், தான் நடிக்கும் படங்களுக்கும் நல்ல நல்ல கதைகளையே தேர்ந்தெடுத்து நடிப்பார்.. மிகச்சிறந்த, சிறப்பு மிக்க நடிகர்..
கேவலங்கள்: எங்கள் நிறுவனத்தில், தயாரிக்கப்பட்ட தண்டிக்கப்பட்ட நியாயங்கள், தீர்ப்புகள் திருத்தப்படலாம், பௌர்ணமி அலைகள் போன்ற படங்களில் நடித்தார்.. அத்தனையும் நல்ல படங்கள்.. சிவக்குமார் சார் நடித்து, எத்தனையோ படங்கள் ஹிட்டாயின. ஆனால், இந்த சினிமாவின் கேவலங்களை பொறுக்க முடியாமல், சினிமாவிலிருந்தே ஒதுங்கிவிட்டார்..வேண்டாம் என்று முடிவு செய்யும் அளவுக்கு, இந்த சினிமா அவரை தள்ளிவிட்டது" என்றெல்லாம் பாலாஜி பிரபு பாராட்டி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பேசியிருந்த பாலாஜி பிரபு, "புறநானூறு படத்தில் ஏன் சூர்யா நடிக்கவில்லை என்று தெரியவில்லை.. தமிழகத்தில் 1965-ல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்திதான், அந்த படமும் எடுக்கப்படுகிறது. இந்தி பிரச்சனைக்கு எதிராக சிவகார்த்திகேயன் நடிக்கவந்துட்டாரு. ஆனால், அந்த தைரியம் ஏன் சூர்யாவுக்கு இல்லை. தனக்கு கலர் பூசிவிடுவார்கள் என்று பயப்படும்போது, மும்பையில் எதுக்கு சூர்யா செட்டில் ஆகணும்?" என்றெல்லாம் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications