புஸ்ஸூனு உப்பிய உடம்பு.. நடிகை சுஹாசினிக்கு காசநோய்? சமூகத்துக்கு சொல்லணும் என ஓபன் டாக்: பிரபலம்
சென்னை: நடிகர் கமல்ஹாசன் குடும்பத்தை சேர்ந்தவர் பிரபல நடிகை சுஹாசினி... இவர் 1980 மற்றும் 90களில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர். தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இப்போதும் கேரக்டர் ரோலில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனக்கு காசநோய் பாதிப்பு ஏற்பட்டதாக கூறியிருந்தார். இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றிலும் தெரிவித்துள்ளார்.
Gem Cinemas என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பயில்வான் ரங்கநாதன், "நடிகை சுஹாசினி, டைரக்டர் மணிரத்னத்தை திருமணம் செய்து கொண்டார்.. இந்த தம்பதிக்கு நந்தன் என்ற ஒரு மகன் இருக்கிறார். ஒரு கம்யூனிஸ்ட் கொள்கையில் தீவிரமானவர்..

நெஞ்சத்தை கிள்ளாதே
இந்திரா என்ற படத்தை இயக்கியதற்காக சுஹாசினிக்கு தேசிய விருது கிடைத்தது.. நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் மகேந்திரன் இயக்கத்தில் ஹீரோயினாக அறிமுகமாகியிருந்தார் சுஹாசினி..
பாலச்சந்தர் எழுதிய இயக்கிய சிந்துபைரவி படத்தில், சுஹாசினியின் நடிப்பு அனைவராலும் புகழப்பட்டது. இப்போது மணிரத்னத்துடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி பல வெற்றி படங்களை தயாரித்து வருகிறார்.
சமூகத்துக்கு தெரிவிக்கிறேன்
சில தினங்களுக்கு முன்பு, சுஹாசினி தந்திருந்த பேட்டியில், "எனக்கு 10 வயதாக இருக்கும்போது காசநோய் வந்தது.. உடனே தீவிர சிகிச்சை எடுத்துக் கொண்டதன் காரணமாக, காசநோய் அப்போது போய்விட்டது... இப்போது சமீபத்தில் மீண்டும் காசநோய் பாதிப்பு ஏற்பட்டு நான் மிகுந்த சிரமப்பட்டேன். பிறகு அதிலிருந்து மீண்டுவிட்டேன்.. அப்போது என்னுடைய உடம்பு உப்ப தொடங்கியது.. சரியான நேரத்தில சிகிச்சை எடுத்து கொண்டால், பாதிப்பு நீங்கிவிட்டது.
இதை அப்போது யாருக்கும் தெரியாமல் மறைத்து விட்டேன். வெளியே சொல்வதை கவுரவ குறைச்சலாக நினைத்து 6 மாதங்கள் ரகசியமாகவே சிகிச்சை எடுத்துக் கொண்டேன். அதை இப்போது சமூகத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே வெளியே சொல்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.
கேட்கும் திறனும் பாதிப்பு?
முன்னதாக சுஹாசினி இந்த தகவலை பொதுவெளியில் சொல்லும்போது, 6 வயதில் ஏற்பட்ட காசநோய் வியாதி, 36 வயதில் மீண்டும் வந்து விட்டது. இதன் காரணமாக எனக்கு திடீரென்று எடை கூடி விட்டது. அதுமட்டுமன்றி கேட்கும் திறனிலும் பிரச்சினை ஆரம்பித்து விட்டது. மீண்டும் சிகிச்சை எடுத்துக் கொண்டேன். மெல்ல மெல்ல காச நோய் பாதிப்பு குறைந்து குணமாகி விட்டேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications