அப்ப அது ஷாலினி குரல் இல்லையா? சுவலட்சுமிக்கு வந்த தடுமாற்றம்.. 3வது தலைமுறை டப்பிங்.. ஸ்ரீஜா ஹேப்பி
சென்னை: கோகுலத்தில் சீதை படம்தான், சுவலட்சுமிக்கு நான் டப்பிங் பேசிய முதல் படம்.. அந்த படத்தில் டப்பிங் பேச நான் மிகவும் கஷ்டப்பட்டேன். காரணம், சுவலட்சுமி பெங்காலி என்பதால், அதில் சரியாகவே பேசியிருக்க மாட்டார் என்று பிரபல டப்பிங் கலைஞர் ஸ்ரீஜா ரவி தெரிவித்துள்ளார்.
King 24x7 என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த டப்பிங் கலைஞர் ஸ்ரீஜா ரவி, "என் மகளும் என்னுடைய துறையில் வந்தது எனக்கு சந்தோஷம்.. என்னுடைய அம்மாவும் டப்பிங் ஆர்ட்டிஸ்தான்.. அந்தவகையில் 3வது தலைமுறையாக இந்த டப்பிங் துறையில் சக்சஸ் செய்துள்ளது மிகப்பெரிய விஷயம்.

எந்த துறையிலுமே நல்லது கெட்டது இருக்கத்தான் செய்யும்.. எனவே பெண்களுக்கு பாலியல் சீண்டல்கள் முழுமையாக இல்லை என்று சொல்லிவிட முடியாது.. ஆனால், இந்த காலத்து பெண்கள் பலரும் உஷாராகவும், துணிச்சலாகவும் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் இந்த சினிமா துறையில் 52 வருஷமாக இருக்கேன்.. எனக்கு இதுவரை எந்த சிக்கலும் வந்ததில்லை.. என் மகளுக்கும் எந்த தொல்லையும் வந்ததில்லை.
பாலியல் தொல்லைகள்
அப்படி பாலியல் தொல்லைகள் எனக்கு தரப்பட்டிருந்தால், என்னுடைய அம்மா இந்த சினிமாவில் என்னை பணிபுரிய விட்டிருக்க மாட்டார்கள். அதனால் சினிமா துறை என்றாலே மோசமான துறை கிடையாது.
அந்த காலத்தில் நாங்கள் டப்பிங் பேசியது வெளியில் யாருக்குமே தெரியாமல் போய்விட்டது.. அதற்கான அங்கீகாரமும் எங்களுக்கு அப்போது கிடைக்கவில்லை.. காதலுக்கு மரியாதை படத்தில் ஷாலினிக்கு நான்தான் டப்பிங் பேசியிருந்தேன். அப்போது ஷாலினி என்னிடம், சேச்சி, நான்தான் டப்பிங் பேசியிருக்கிறதா எல்லாரும் நினைச்சிட்டு இருக்காங்கன்னு சொன்னார்..
மலையாளத்தில் நான்தான் ஷாலினிக்கு எல்லா படங்களும் டப்பிங் பேசினேன்.. தமிழில் அலைபாயுதே தவிர மற்ற அனைத்து படமும் ஷாலினிக்கு நான்தான் டப்பிங் பேசியிருக்கிறேன்.. அந்தவகையில், அங்கீகாரம் என்பதே அப்போது கிடையாது. தேவயானிக்கு 80 சதவீத படங்கள் நான்தான் பேசியிருக்கேன்.
இளைய தலைமுறையினர்
யாராவது ஒரு நடிகைக்கு எமோஷனல் சீனில் பேசி நடித்துவிட்டு, அதே படத்தை தியேட்டரில் படம் பார்க்கும்போது, ஆடியன்ஸ் கைதட்டுவார்கள்.. நடிகையின் அந்த கண்ணீரில் பாதியளவாவது டப்பிங் கலைஞர்களுக்கும் பங்கு இருக்கும்... ஆனால், நாம்தான் அந்த வசனத்தை பேசினோம் என்பது யாருக்குமே தெரியலேயே என்ற வருத்தம் முன்பெல்லாம் எனக்கு இருந்தது.
ஆனால், இன்று எனக்கு பலருடைய ஆதரவும், பாராட்டும் கிடைத்திருப்பதற்கு காரணமே சோஷியல் மீடியாதான்.. சினிமாவில் பணிபுரியும் ஒவ்வொருவரின் உழைப்பு, பணிகள் அத்தனையும் சோஷியல் மீடியா மூலம் வெளிவருவது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும். அன்று நாங்கள் பேசிய டப்பிங் குறித்து, இன்றைய இளைய தலைமுறையினர்கூட, ரசித்து பாராட்டுவது அதைவிட மகிழ்ச்சியாக இருக்கிறது.
கஷ்டப்பட்டு பேசிய படம்
கோகுலத்தில் சீதை படம்தான், சுவலட்சுமிக்கு நான் டப்பிங் பேசிய முதல் படம்.. அந்த படத்தில் டப்பிங் பேச நான் மிகவும் கஷ்டப்பட்டேன். காரணம், சுவலட்சுமி பெங்காலி என்பதால், அதில் சரியாகவே பேசியிருக்க மாட்டார்.. அவங்களே தடுமாறி பேசியிருந்தாங்க.. அதனால் நானும் கஷ்டப்பட்டுதான் பேசினேன்.. ஆனாலும், எல்லாருமே என்னை அந்த படத்தின் டப்பிங்குக்காக பாராட்டினார்கள்.












Click it and Unblock the Notifications