Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உச்சிக்கு போன அனிருத்தை.. ஓவர்நைட்டில் சாய்த்த சாய் அபயங்கர்.. இடிந்து விழுகிறதா கனவு கோட்டை: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல பாடகர் திப்பு மற்றும் ஹரிணியின் மகன் சாய் அபயங்கர் என்ற 20 வயது இளைஞர், அனிருத்தை ஓரங்கட்ட வந்துவிட்டார் என்ற பேச்சு எழுந்து வருகிறது.... அனிருத்தைவிட அதிக வாய்ப்புகளை தற்போது சாய் பெற்றுள்ளாராம். இந்நிலையில், எழுத்தாளர் ராஜ கம்பீரன், அனிருத் இசை குறித்து கருத்துக்களை கூறியிருக்கிறார். அத்துடன் புதிய இசையமைப்பாளர்களுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார்.

10 கோடிக்கும் அதிகமாக அனிருத் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.. எனினும், புதிதாக ஒப்பந்தமாக உள்ள படங்களுக்கு அனிருத் சம்பளத்தை உயர்த்தி கேட்கிறாராம்..

Television anirudh Sai Abhyankar

ஆனால், தமிழில் இன்னும் ஒரு படம் கூட வெளியாகாத சாய் அபயங்கர் 10 படங்கள் வரை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.. அதிக சம்பளத்தை அனிருத் கேட்பதாலும், ஏற்கனவே அனிருத் மீதான வெறுப்பு காரணத்தினாலும்தான், பலரும் சாயை நாடி செல்வதாக காரணங்கள் சொல்லப்படுகின்றன.

புத்துணர்ச்சி இசை

இந்நிலையில், Aagayam Tamil என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள எழுத்தாளர் ராஜ கம்பீரன், "அனிருத் மெலடியும் நன்றாக செய்யக்கூடியவர்தான்.. அத்துடன் அவருடைய இசையில் ஒரு புத்துணர்ச்சி இருப்பதை மறுக்க முடியாது. அதுக்காக ரஜினியின் உறவினர் என்பதாலேயே நீண்டகாலம் இங்கே காலம் தள்ள முடியாது..எனவே தனித்தன்மையுடன்தான் அனிருத் பயணித்து வருகிறார்.

ஆனால், பாடல் வரிகள் மீது அனிருத் கவனம் செலுத்தும்போதுதான், அது அனிருத்துக்கு மைனஸாகிறது.. பாடல் வரிகளுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லாமல், மொழிக்கு எந்த முக்கியத்துவமும் இல்லாமல், பாடல்களை முதலில் கெடுத்த பெருமை அனிருத்துக்குதான் போய் சேரும். ஒரு பாட்டுக்கு முகவரியே மொழிதானே?

தமிழை அழித்த அனிருத்

பிடிச்ச பாட்டு எது என்று கேட்டால், பாடல் வரிகளைதானே சொல்ல வேண்டியிருக்கிறது? எனவே, பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய இசையமைப்பாளராக அனிருத் இதுவரை இருந்ததில்லை.. அனிருத் வழியிலேயே பலரும் வரத்துவங்கியிருக்கிறார்கள்..

அனிருத் தமிழைத்தான் அழித்தார்.. இசையில் தமிழ்ப்படுகொலை செய்தவர்.. காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை தர வேண்டும் என்பதற்காகவே இதையெல்லாம் சொல்கிறேன்..

எல்லாருமே இளையராஜாவா?

தற்போது புதிய இசையமைப்பாளர்கள் என்பது குறைவு.. அப்படி வருபவர்கள் நிலைத்திருப்பது அதைவிட குறைவு.. இளையராஜா மாதிரியே இசையமைப்பவர்கள் எல்லாம் இளையராஜா ஆகிவிட முடியாது.. முதல்ல இசையை மக்களிடம் கொண்டு சேர்த்தவர்தான் இங்கே நிலையாக பேசப்படுவார்கள்.

தற்சமயம் அனிருத்தை ஓரங்கட்ட வந்த சாய் என்கிறார்கள்.. திறமையை நிரூபிக்கும்போது, மக்களிடம் நிலைத்து நின்றுவிடுவார்கள்" என்று கூறியிருந்தார்.

கால்ஷீட் பிரச்சனை

இந்நிலையில் மீண்டும் சேனலுக்கு பேட்டி தந்துள்ள எழுத்தாளர் ராஜகம்பீரன், ஒரு இசையமைப்பாளர் உச்சம் பெறும்போது, அவரிடம் நெருங்க முடியாதவர்கள், அவரது சம்பளத்தை தர முடியாதவர்கள், அவரது கால்ஷீட் கிடைக்காதவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிடும்.. இதனால் அடுத்த இசையமைப்பாளருக்கான தேவை பெருகி கொண்டே வரும்... அதனால்தான், ஒவ்வொரு காலகட்டத்திலும், புதுபுது இசையமைப்பாளர்கள் வந்துகொண்டிருப்பார்கள்..

இசையமைப்பாளர் தேவா

தேவா அன்று ஒரு ஸ்டுடியோவில் வாய்ப்பு கேட்டு போகும்போது, இளையராஜா என்பவர் அன்னக்கிளி படத்துக்கு இசையமைக்க போகிறார் என்று சொன்னதுமே, தேவாவுக்கு வாய்ப்பு போய்விட்டது.

அந்த காலத்திலேயே தேவாவுக்கு வாய்ப்பு கிடைக்கல.. ஒரே காலகட்டத்தில் வரவேண்டியவர்கள் தேவா, இளையராஜா.. பிறகு சந்திரபோஸூடன் சேர்ந்து வாய்ப்பு தேடினார் தேவா.. இதில் சந்திரபோஸுக்கு மட்டும் முதலில் வாய்ப்பு கிடைத்தது. சந்திரபோஸ் இசைக்காலம் முடிந்ததுமே, தேவாவின் இசை ஆரம்பமானது..

மரகதமணி, அம்சலேகா போன்றோரை பிரபலமாக்க பாலச்சந்தர் முயற்சித்தார்.. பிறகுதான், ஏஆர் ரஹ்மான் என்ற இசையமைப்பாளர் இங்கு வெற்றி பெற்றார்..

நிரூபிக்க வேண்டும்

இன்று சாய் பின்னாடி அனைவரும் திரண்டு செல்கிறார்கள்.. அவர் பெற வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். ஒருவேளை ஒன்றிரண்டு படங்கள் சோபித்து விட்டால், அவரை விட்டு வேறொருவரை தயாரிப்பாளர்கள் தேடி சென்றுவிடுவார்கள். எனவே, இனிவரும் நாட்களில் சாய் தன்னை நிரூபிக்க வேண்டும்.

ஆனால் பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.. தொன்மையும் , பெருமையும் வாய்ந்தது தமிழ் மொழி.. அதை பாடல்களில் பயன்படுத்த தயங்குகிறார்கள்.. பாடலாசிரியர் என்ற இனத்தையே அழிக்க பலரும் நினைக்கிறார்கள்.. இது தமிழ் மொழியை அழிப்பதற்கு சமமாகும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+