இல்லீகலா மணமுடித்த மாதம்பட்டி ரங்கராஜ்? நடிகை நயன்தாரா வீட்டில் சமையல்! ஃபேமஸ் குக்கின் சறுக்கல்கள்
சென்னை: "தான் பிரபலங்கள் வீட்டில் சமைப்பதை, விஐபி நிகழ்வுகளில் சமைப்பதை, நயன்தாரா வீட்டுக்கு சமைப்பதை, பிரபலங்களுடன் பேசுவதையெல்லாம் வீடியோவாக எடுத்து, புரமோட் செய்தார்.. இதன்விளைவு, சாப்பாடு நல்லா இருக்கா, இல்லையோ, அது தானாகவே கோபுரத்துக்கு சென்றுவிட்டது" என்று பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து, மூத்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன் பேட்டியொன்றில் தன்னுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
voice of TamilNadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள வழக்கறிஞர் தமிழ்வேந்தன், "ஹெலிகாப்டரில் இறங்கி சென்று சமைக்கும் சமையல் கலைஞர்தான் மாதம்பட்டி ரங்கராஜன்..

தனி கேரவன் வைத்துள்ள சமையல்கலைஞர், தனி காஸ்ட்யூம் டிசைனர் வைத்திருக்கும் சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜன்.. படங்களிலும் ஹீரோவாக நடித்துள்ளார்.. குக் விக் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார்.. அதுக்காக அந்நிகழ்ச்சியின் ஜட்ஜ் என்று சொல்லக்கூடாது. காரணம் ஜட்ஜ் என்பது மிகப்பெரிய வார்த்தை.
காஸ்ட்லி சமையல்காரர்
ஸ்ருதி என்ற வழக்கறிஞருடன் திருமணமாகி , நல்ல முறையில் குடும்பம் நடந்துள்ளது.. ஒரு கார் புதிதாக வந்தால், அதை உடனே வாங்குபவர் மாதம்பட்டி ரங்கராஜன்தான்.. அவ்வளவு பெரிய பணக்காரர்.. சாதாரண உழைப்பு இல்லை, சாதாரண பயணம் இல்லை.. கிரிக்கெட் பிசிசி-க்கே மாதம்பட்டி ரங்கராஜன்தான் சமையல். நயன்தாரா வீட்டுக்கும் இவர்தான் சமையல்.
சமையல் கலைக்கு 5, 10 லட்சம் சம்பளம் கேள்விப்பட்டிருப்போம்.. ஆனால், 5 கோடி 10 கோடி சம்பளம் கேள்விப்பட்டுள்ளீர்களா? இதுபோன்றவர்களின் சம்பளம் அப்படிப்பட்டதுதான்.
தான் பிரபலங்கள் வீட்டில் சமைப்பதை, விஐபி நிகழ்வுகளில் சமைப்பதை, நயன்தாரா வீட்டுக்கு சமைப்பதை, பிரபலங்களுடன்பேசுவதையெல்லாம் வீடியோவாக எடுத்து, புரமோட் செய்தார்.. இதன்விளைவு, சாப்பாடு நல்லா இருக்கா, இல்லையோ, அது தானாகவே கோபுரத்துக்கு சென்றுவிட்டது.
முதல்மனைவி இருக்கும்போதே, காஸ்ட்யூம் டிசைனர் ஜாய் என்பவருடன் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.. ஜாய் இப்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார்..
இருவரும் பிரம்மாண்டமான மாலையை அணிந்து, பொதுவெளியில் அறிவித்துவிட்டார்.. இதுகுறித்து மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து இதுவரை மறுப்பு சொல்லவில்லை..
ஐ ஆம் ஆல்சோ மாதம்பட்டி ரங்கராஜ் மனைவி என்று ஸ்ருதி போஸ்ட் ஒன்றை பதிவிட்டார். இதற்கு பிறகு இந்த விவகாரத்தில் பூகம்பம் கிளம்பிவிட்டது. முதல்மனைவி இருக்கும்போது, 2வது மனைவியை திருமணம் செய்யக்கூடாது.. குறிப்பாக, முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல், மறுமணம் செய்யக்கூடாது. முறைப்படி நீதிமன்றம் சென்று விவாகரத்து பெற வேண்டும். அல்லது 12B பதிவு செய்து, இரு தரப்பிலுமே மனம் ஒன்றி பிரியலாம்.
விக்ரமராஜா மகன் - நடிகை ரேகா நாயர்
எனவே, இதனை ஸ்ருதி சட்டரீதியாக எதிர்கொள்ள முடிவு செய்துள்ளார் என்றே தெரிகிறது.. அவர் புகார் தந்தால், மாதம்பட்டி ரங்கராஜ் கைதாகலாம்.. ஆனால், அந்தளவுக்கு செல்லாமல், தற்போது இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடப்பதாக தெரிகிறது.
வழக்கறிஞராக இருந்தும், இந்த விவகாரத்தில் ஸ்ருதி தாமதப்படுத்த காரணம், பேச்சுவார்த்தையாக கூட இருக்கலாம். ஆனால், முறைப்படி இன்னும் விவாகரத்து நடக்கவில்லை.
தமிழ்நாடு வணிக சங்க பேரவை தலைவர் விக்ரமராஜா மகன், விருகம்பாக்கம் எம்எல்ஏவாக இருந்தும், நடிகை ரேகா நாயரை திருமணம செய்துள்ளார்.. அது தொடர்பான போட்டோக்கள் இணையத்திலும் உள்ளன.. எனவே பணம் இருந்தால், எதுவுமே இங்கு பெரிய விஷயம் இல்லை.
இரண்டாவது மனைவி கர்ப்பம்
ஆனால், இரண்டாவது மனைவிகள் இப்படி வழக்கு தொடுக்க முடியாது.. தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி தன்னுடன் உடலுறவு கொண்டுவிட்டார், முதல் மனைவியை விவாகரத்து செய்வதாக சொல்லி இதுவரை செய்யவில்லை என்றெல்லாம் வேண்டுமானால் 2வது மனைவிகள் வழக்கு தொடுக்கலாம்.
ஆனால் மாதம்பட்டி ரங்கராஜ் 2வது மனைவிக்கு அந்த வாய்ப்பு இல்லை. காரணம், மாதம்பட்டி ரங்கராஜூடன் மாலையுடன் போட்டோவை பதிவிட்டு, 6 மாத கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்துள்ளார். தானும் மனைவி என்பதை சொல்ல முற்படுகிறார்.. இதுதான் சிக்கலாகும்.
டேமேஜ் ஆகும் பெயர்
மாதம்பட்டி ரங்கராஜ் அளவுக்கு புகழ்வாய்ந்த சமையல் கலைஞர் இந்தியாவில் யாருமில்லை.. ஒரு சாதாரண சமையல் கலைஞராக, ஒரு குக்கிராமத்திலிருந்து கிளம்பி இன்று உலகம் முழுவதும் புகழ்பெற்று, பேசுபொருளாகியிருப்பவர் மாதம்பட்டி ரங்கராஜ்தான்..
ஆனால், அவரது தனிமனித வாழ்க்கையில், இதுபோன்ற சறுக்கலால் அவரது பெயர் கண்டிப்பாக டேமேஜ் ஆகும். அவரது தனிமனித வாழ்க்கையை பலரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து" என்று தெரிவித்துள்ளார்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications