Year Ender: 2025ல் குறைந்த பட்ஜெட்டில் அதிக வசூலை அள்ளிய டாப் 10 படங்கள்.. உங்க ஃபேவரைட் படம் இருக்கா பாருங்க
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்திய பாக்ஸ் ஆபிஸில் குறைவான பட்ஜெட்டில் உருவாகியும் யாரும் எதிர்பாக்காத அளவிற்கு வசூல் செய்த டாப் 10 திரைப்படங்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. மிகக் குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்பட்டாலும், கதை, தரம், ரசிகர்களின் வரவேற்பு போன்ற காரணங்களால் இந்தப் படங்கள் வசூல் வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது. 50 லட்சம் பட்ஜெட்டில் உருவான படம் கூட 100 கோடி கிளப்பை தொட்டிருப்பது இந்த பட்டியலின் பெரிய சிறப்பாகும்.
இங்கே 2025ஆம் ஆண்டின் டாப் 10 கம்மி பட்ஜெட் சூப்பர் ஹிட் படங்கள் ஒன்று முதல் பத்து வரை வரிசைப்படுத்தப்பட்ட பட்டியல்

1. லாலோ : கிருஷ்ணா சதா சகாயதே
லாலோ படத்தை இயக்கியது அங்கித் சகியா தான். இந்த படத்தில் ரீவா ரச், ஷ்ருஹத் கோஸ்வாமி, கரண் ஜோஷி, மிஷ்டி கதேச்சா போன்ற நடித்திருக்கிறார்கள். அதுபோல இந்த படத்தின் பட்ஜெட் 50 லட்சம்தான். ஆனால் உலக அளவில் 109.5 கோடி செய்திருக்கிறது. இந்தியா மட்டும் வசூல் 87 கோடியாம்.
50 லட்சத்தில் உருவான இந்த படம் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து, கம்மி பட்ஜெட் படங்களில் முதலிடத்தை பிடித்தது.
2. சூ ஃப்ரம் சோ (Kannada)
சூ ஃப்ரம் சோ படத்தை இயக்கியது ஜே.பி. துமினாட். அதுபோல இந்த படத்தில் ஷானீல் கௌதம், ஜே.பி. துமினாட், சந்தியா அரகேரே போன்ற பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் பட்ஜெட் 5 கோடி தான். ஆனால் இந்த படம் உலக அளவில் 122.83 கோடி வசூல் செய்திருக்கிறது. இந்தியாவில் மட்டும் 92.33 கோடி வசூல் செய்திருக்கிறதாம். கன்னடத்தில் வெளிவந்த இந்த படம் சிறிய பட்ஜெட்டில் பெரிய வெற்றியைப் பெற்ற படமாக இரண்டாம் இடத்தில் உள்ளது.
3. டூரிஸ்ட் ஃபேமிலி (Tamil)
அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் எம். சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய் சங்கர் நடித்த பேமிலி படத்தின் பட்ஜெட் 7 கோடி தான். ஆனால் இந்த படம் உலக அளவில் 87.23 கோடி வசூலையும் இந்தியாவில் மட்டும் 61.62 கோடி வசூலையும் பெற்றிருக்கிறது.
மிகவும் குறைந்த பட்ஜெட்டில் உருவான குடும்ப கதையாகும் இந்த படம் வியாபார ரீதியில் பெரிய வெற்றி பெற்று தமிழ் இயக்குனர் அவர்களுக்கு முன்மாதிரியாக அமைந்திருக்கிறது.
4. டைஸ் இரே (Malayalam)
ராகுல் சதாசிவன் இயக்கத்தில் பிரணவ் மோகன்லால் நடித்த டைவ் ஊரே படத்தின் பட்ஜெட் 24 கோடி நான்காம். ஆனால் இந்த படம் உலக அளவில் 82.12 கோடி வசூல் பெற்று இருக்கிறதாம். இந்தியாவில் மட்டும் 41.29 கோடி வசூலித்திருக்கிறது. பேய்படங்களின் வரவேற்பை புதிய உயரத்திற்கு எடுத்து சென்ற படம்.
5. தலைவன் தலைவி (Tamil)
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிப்பில் உருவான இந்த படத்தின் பட்ஜெட் 25 கோடி. இந்த படம் உலக அளவில் வசூல் 100+ கோடியும், இந்திய அளவில் 85 கோடியும் வசூல் பெற்றிருக்கிறதாம்.கம்மி பட்ஜெட்டிலேயே செம்ம குடும்ப - அரசியல் டிராமாவை வழங்கி ஹிட் ஆன படம்.
6. லோகா : அத்தியாயம் 1 - சந்திரா (Malayalam)
டொமினிக் அருண் இயக்கத்தில் துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியான இந்த படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷினி, நஸ்லென், சாண்டி உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் பட்ஜெட் 30 கோடி. ஆனால் உலக அளவில் 326.82 கோடி வசூல் செய்து இருக்கிறது. அதோடு இந்தியாவில் மட்டும் 251.3 கோடி வசூல் செய்திருக்கிறதாம். சர்வதேச தரத்தில் உருவான மலையாள படம். கம்மி பட்ஜெட்டில் மிக அதிக வசூல் செய்த படம்.
7. டியூட் (Tamil)
கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் உருவான டியூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார் உட்பட பலர் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியானது. 35 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் உலக அளவில்114.3 கோடி வசூல் செய்திருக்கிறதாம். இந்தியாவில் மட்டும் 73.13 கோடி வசூல் செய்திருக்கிறது. ரொமான்ஸ் - கொண்டாட்ட காமெடி கலந்த வணிக வெற்றி படம்.
8. டிராகன் (Tamil)
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான டிராகன் படத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன். 36 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் உலக அளவில் 151.83 கோடியும், இந்திய அளவில் 102.55 கோடியும் வசூல் செய்திருக்கிறதாம். இந்தியாவில் 100 கோடி கிளப்பை அடைந்த கம்மி பட்ஜெட் ஆக்ஷன் - ஃபேண்டசி.
9. மகாவதார் நரசிம்மா (Animation)
அஷ்வின் குமார் இயக்கத்தில், ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான அனிமேஷன் பக்தி படம் தான் மகாவதார் நரசிம்மா. இந்தப் படத்தில் பட்ஜெட் 40 கோடி. ஆனால் இந்த படம் உலக அளவில் 326.82 கோடி வசூலை வாரி பிடித்து இருக்கிறது. இந்தியாவில் மட்டும் 251.3 கோடி வசூல் செய்திருக்கிறது. இந்திய அனிமேஷன் உலகத்தில் மாபெரும் வரவேற்பு பெற்ற படமாக ஒன்பதாம் இடத்தில்.
10. சையாரா (Hindi)
இயக்குனர் மோஹித் சூரி இயக்கத்தில் அஹான் பாண்டே, அனீத் பட்டா போன்ற பலருடைய நடிப்பில் வெளியான சையாரா படம் வெறும் 45 கோடி பட்ஜெட்டில் உருவாகி உலக அளவில் 570.33 கோடி வசூலித்து இருக்கிறது இந்தியாவில் மட்டும் 329.73 கோடி வசூலித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்தி படங்களில் கம்மி பட்ஜெட்டில் மிக அதிக வசூல் செய்த படமாக இருக்கிறது. கம்மி பட்ஜெட்டில் இருந்தாலும், கதை - நடிப்பு - தொழில்நுட்பம் எல்லாம் சேர்ந்து பெரிய ஹிட் ஆக முடியும் என்பதற்கான சிறந்த சான்றாக இந்த 2025 டாப் 10 பட்டியல் விளங்குகிறது.












Click it and Unblock the Notifications