Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மஞ்சள் நீராட்டு விழா மகளுக்கு நடக்கிற நேரத்துல, நடிகை ராஜேஸ்வரி எடுத்த முடிவு.. மறக்க முடியலியே

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுவாக சீரியல் நடிகர், நடிகைகளுக்கு வேலைப்பளு அதிகமாக உள்ளது.. ஒருநாளைக்கு ஏழெட்டு சீன்களை எடுக்க வேண்டியிருக்கும்.. ஒவ்வொரு நாளைக்கும் தேவையான ஃபுட்டேஜ்ஜை முன்கூட்டியே தந்துவிட வேண்டும் என்பதுதான் பலரது மன அழுத்தமாக உள்ளது " என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கருத்து தெரிவித்துள்ளார். அத்துடன் நேற்றைய தினம் உயிரிழந்த சீரியல் நடிகை ராஜேஸ்வரியின் மரணத்துக்கு தன்னுடைய வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த ராஜேஸ்வரி (39), சீரியலில் நடித்து கொண்டிருந்தவர்.. கணவருடன் முத்தியால்பேட்டையில் வசித்து வந்தார். ஆனால் தம்பதி இடையே நீண்ட காலமாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்புகூட தகராறு ஏற்பட்டுள்ளது.

சீரியல் நடிகை ராஜேஸ்வரி

ராஜேஸ்வரி கோபமடைந்து சைதாப்பேட்டையில் தன்னுடைய அம்மா வீட்டுக்குச் சென்றுள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக அவர் கடும் மன உளைச்சலில் இருந்துள்ள நிலையில்தான், அதிக அளவில் மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்நிலையில், சின்னத்திரையில் அதிகரித்து வரும் தற்கொலை குறித்து Aramnaadu என்ற யூடியூப் சேனலில் பேசியிருக்கும் பாலாஜி பிரபு, "நடிகை சித்ராவின் மரணமும் பலரை உலுக்கிவிட்டது.. பல பெண்கள் இந்த துக்கத்தில் ஒரு வாரத்துக்கும் மேலாக வீட்டில் சாப்பிடாமலேயே இருந்தனர்..

சித்ரா சின்னத்திரை

சித்ராவின் அப்பா, இது கொலைதான் என்றார்.. ஹேமந்த்தான் அவரை அடித்து கொன்றுவிட்டதாகவும் சொன்னார்கள்.. விசாரணை நடந்தது.. ஹேமந்த்தும் வெளியே வந்துவிட்டார்.. ஆனால், சித்ராவின் மரணத்துக்கு காரணம் தெரியவில்லை..சித்ராவிற்குப் பிறகு, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கேரக்டரில் வேறு யாரை நடிக்க வைத்தாலும், ரசிகர்களால் ஏற்றுக்கொண்டு பார்க்க முடியவில்லை..சின்னத்திரையில் தற்கொலைகள் அடிக்கடி நடந்து வரும் நிலையில், நடிகை ராஜேஸ்வரி இப்போது தற்கொலை செய்துள்ளார்.. 39 வயதுதான் ஆகிறது.. கணவர் பெயர் சதீஷ்.. 2 பிள்ளைகள் உள்ளனர்.. தம்பதிக்குள் நிறைய சண்டை வந்துபோயுள்ளது.. கடந்த ஞாயிறும் சண்டைவந்ததால், அம்மா வீட்டுக்கு வந்துள்ளார். மன அழுத்தம் அதிகரித்ததால், அம்மாவின் BP மாத்திரையை சாப்பிட்டுவிட்டார்.

.ஃபுட்டேஜ்கள் - வேலைப்பளு

சீரியல் துறையில் பணி அழுத்தம் (Work Pressure) மிக அதிகமாக உள்ளது. ஒரு நாளைக்கு 5 முதல் 7 காட்சிகள் முடிக்கப்பட வேண்டும், மேலும் இயக்குநர்கள் வேகமாக வேலை செய்யத் தவறினால் நடிகர்களைக் கடிந்துகொள்வது வழக்கமாக உள்ளது.பொதுவாக சீரியல் நடிகர், நடிகைகளுக்கு வேலைப்பளு அதிகமாக உள்ளது.. ஒருநாளைக்கு ஏழெட்டு சீன்களை எடுக்க வேண்டியிருக்கும்.. ஒவ்வொரு நாளைக்கும் தேவையான ஃபுட்டேஜ்ஜை முன்கூட்டியே தந்துவிட வேண்டும் என்பதுதான் பலரது மன அழுத்தமாக உள்ளது.

மஞ்சள் நீராட்டு விழா

ஆனால், ராஜேஸ்வரியின் தற்கொலை, குடும்ப தகராறு காரணமாகவே நடந்துள்ளது.. நாளை அதாவது ஞாயிற்றுக்கிழமை தன்னுடைய மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா வைத்துள்ளார்கள்.. இப்போது அந்த குழந்தையின் மனநிலை எப்படி இருக்கும்? இந்த நேரத்தில் ஒரு தாய், மகளின் அருகில் இருக்க வேண்டாமா? ஒரு நிமிடம் எடுக்கக்கூடிய முடிவுதான் எத்தனை பேரை துயரத்தில் ஆழ்த்துகிறது? கலைஞர்கள் பெரும்பாலும் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள்.... தற்கொலை முடிவை திடீரென எடுத்து விடுகிறார்கள்.. எதையுமே ஆலோசித்து உட்கார்ந்து சம்பந்தப்பட்டவர்களுடன் பேசுவது கிடையாது..

சித்ரா, ராஜேஸ்வரி

நடிகர் மாரிமுத்துவின் மரணத்துக்கு பிறகு பல பெண்கள் அந்த சீரியல் பார்ப்பதையே நிறுத்திவிட்டார்கள்.. சித்ராவின் மறைவுக்கு பிறகும், முல்லை கேரக்டரில் வேறு யாரை நடிக்க வைத்தாலும் ரசிகர்களால் அவரை அந்த இடத்தில் வைத்துப் பார்க்க முடியவில்லைகாரணம் சீரியல் கலைஞர்கள் தினமும் வீடுகளுக்குள் நுழைவதால், குறிப்பாக பெண்களுக்கு, சித்ரா, ராஜேஸ்வரி போன்றவர்களுடன் ஒரு சென்டிமெண்ட்டான கனெக்‌ஷன் ஏற்பட்டுவிடுகிறது.. அதனால் இதுபோன்ற கலைஞரை இழக்கும்போது அது பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+