பாப்பா நெஞ்சுல மைனா.. மகிழ்ந்து நெகிழ்ந்து கொஞ்சிய நந்தினி!
சென்னை : தன்னுடைய காதல் கணவனின் அன்பை பார்த்து கண் கலங்கி போயுள்ளார் மைனா நந்தினி. வாவ்.. இதை எதிர்பார்க்கவே இல்லை என் அன்பே என்று பாசத்தை புருஷனின் நெஞ்சில் கொட்டி மகிழ்ந்துள்ளார் மைனா.
பார் என் பாசத்தை என்று தனது சட்டை பட்டனை திறந்து காட்டி காதல் கணவர் யோகேஷ்வரனும் நந்தினியை அசர வைத்து விட்டார்.
என் நெஞ்சுக்குள்ள நீ தான் புள்ள வேற ஒன்னும் இல்ல...என்று நந்தினிக்கு மட்டுமல்ல அவருடைய ரசிகர்களுக்கும் ஸ்வீட் ஷாக் கொடுத்துள்ளார். மனைவி பெயரை அல்ல முகத்தையே தனது மார்பில் பச்சை குத்தியுள்ளார் யோகேஸ்வரன்.

குழந்தையும் பிறந்தாச்சி
காதல் என்று சொன்னால் அங்கு எதிர்பார்ப்புகளே இல்லாமல் இருப்பதுதான். அதை தற்போது நந்தினியும் அவருடைய கணவரும் ஆன யோகேஸ்வரனும் நிரூபித்து இருக்கின்றனர். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டாலும், இப்பவும் காதல் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இவர்களின் காதலுக்கு அடையாளமாக ஒரு ஆண்குழந்தை பிறந்து இருந்தாலும் தற்போது மீண்டும் காதல் பறவைகள் ரெக்கை கட்டி பறந்து வருகின்றனர். அதில் தற்போது யோகேஸ்வரன் தன் மீது வைத்திருக்கும் காதலை பார்த்து கண் கலங்கிய படி மைனா நந்தினி தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட்டிருக்கிறார். அதுதான் வைரலாக பரவி வருகிறது.

மீண்டும் துளிர்த்த காதல்
தொகுப்பாளராக அறிமுகமாகி சீரியலிலும் காமெடியில் கலக்கி கொண்டிருக்கும் மைனா நந்தினிக்கு யோகேஸ்வரன் என்பவருடன் திருமணம் முடிந்தது. இவர்கள் இருவரின் திருமணமும் காதல் திருமணம் என்றாலும் அனைவரும் இப்ப வரைக்கும் ஆச்சரியத்தோடு பார்க்கும்படி தான் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில் நந்தினிக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது. அவருடைய முதல் கணவர் தற்கொலை செய்துகொண்ட பிறகு வாழ்க்கையின் விரக்தியில் இருந்த இவர் மீண்டும் சீரியலில் காலடி எடுத்து வைத்த போது அவருடைய ரசிகர்கள் அவருக்கு பெரும் ஆதரவும் ஆறுதல் கொடுத்து வந்தனர்.

டிக் டாக் வீடியோக்களில் பிஸியோ பிஸி
இந்த நிலையில்தான் நாயகி சீரியலில் நடித்துக் கொண்டிருந்த யோகேஸ்வரனுக்கு இவருக்கும் காதல் என்று கிசுகிசுக்கள் வெளியானது. ஆனால் செய்திகள் வெளியாகி ஒரு சில நாட்களுக்குள்ளேயே இவர்களுக்குள் திருமணமும் நடைபெற்று விட்டது. இவருடைய திருமணத்திற்கு ரசிகர்கள் பலர் இவருக்கு வாழ்த்துக்களை கூறிவந்தனர். திருமணத்திற்கு பிறகு அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களையும் டிக்டாக்வீடியோ களிலும் பிஸியாக இருந்துவந்தனர். தங்களுடைய அன்பை பல டிக் டாக் வீடியோக்களில் வெளிக்காட்டி வந்தனர்.

டாம் அண்ட் ஜெர்ரி காதலர்கள்
காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் இவர்கள் இருவருமே நண்பர்கள் போலவும் ஜாலியாகத்தான் பழகி கொண்டிருக்கின்றனர். திருமணத்திற்குப் பிறகும் இருவரும் சீரியல்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். தற்போது விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டு வருகின்றனர். அதிலும் தங்களுடைய காதலையும் குறும்புத்தனத்தோடு வெளிக் காட்டி வருகின்றனர். இவர்கள் வெளியில் எலியும் பூனையும் போல அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டு இருந்தாலும் ஒருவருக்கு ஒருவர் பாசத்தில் சளைத்தவர்கள் இல்லை என்று தற்போது நிரூபித்து வந்து கொண்டிருக்கின்றனர்.

நெஞ்சுக்குள்ளேயும் வெளியேயும் நந்தினி
நந்தினியின் கணவர் நந்தினியின் உருவத்தை அப்படியே தன்னுடைய நெஞ்சில் பச்சை குத்தி இருக்கிறார். இவருடைய இந்த போட்டோஸ்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு கண்கலங்கியபடி நந்தினி கேப்ஷனை போட்டிருக்கிறார். அதில் நான் கொஞ்சம்கட கூட எதிர்பார்க்காத ஆச்சரியம் உன்கிட்ட.....லவ் யூ பாப்பா..கண்டிஷனல் அன்பு, எப்போதும் உன்னுடன் நன்றி சொல்ல கூடாது, ஆனால் சொல்லனும்னு தோணுது நன்றி பாப்பா..நமக்கு ஒரு பொண்ணு இருந்தா உன்ன மாதிரி கணவர் இருக்கணும்னு கடவுள் கிட்ட வேண்டுகிறேன். என்று உணர்ச்சிப் பெருக்கெடுத்து தன்னுடைய உணர்வுகளை இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருக்கிறார். அதை பார்த்ததும் இவர்களுடைய ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் அள்ளித் தெளிக்கிறார்கள்.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications