ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட "டிடிஎஃப் வாசன்”.. நான் செய்த "அது” தப்புதான்.. பிறந்த நாளில் இப்படியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிவேகமாக ரோட்டில் வண்டி ஓட்டி அதை யூடியூப் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு பிரபலமானவர் தான் யூடியூபர் டிடிஎஃப் வாசன்.

இவர் ட்வின்த்ரோட்லர்ஸ் (Twinthrottlers) என்ற யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் இன்று இவருக்கு பிறந்தநாள். அதே நேரத்தில் தன்னுடைய தன்னுடைய ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

YouTube celebrity bike rider TTF Vasan has apologized to fans on his birthday

டிடிஎஃப் வாசன் 2கே கிட்ஸ்களின் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறார். இவர் பைக் ஓட்டும் அழகைப் பார்த்து இவருடைய ரசிகர்களாக மாறி இருக்கும் 2கே கிட்ஸ்கள் பலர் இவரை சந்திக்க வேண்டும் என்று அதிகமாக ஆர்வத்தோடு இருக்கின்றனர். அதனால் தான் சில மாதங்களுக்கு முன்பு டிடிஎஃப் வாசான் வைத்த மீட் அப்க்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் பல பைக் ரைடர்ஸ் மற்றும் டிடிஎஃப் வாசனின் தீவிர ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

இதனால் அந்த இடத்தில் பெரிய அளவில் நெரிசல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அங்கு போலீஸ் வந்து அங்கிருந்தவர்களை அப்புறப்படுத்தி இருந்தனர். அதுபோல அடிக்கடி டிடிஎஃப் வாசன் நெடுஞ்சாலைகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட மிகவும் வேகமாக பைக்குகளை இயக்குகிறார் என்று இவர் மீது புகார்களும் எழுந்து கொண்டிருக்கும் நிலையில் அபராதம் விதித்ததை தாண்டி கைது நடவடிக்கைகளுக்கும் ஆளாகி இருக்கிறார்.

தனக்கு பல பிரச்சனைகள் வந்து கொண்டு இருந்தாலும் அந்த இடத்திலும் தன்னுடைய ரசிகர்களிடம் கெத்தாக பேசி வீடியோ வெளியிட்டுக் கொண்டிருக்கும் டிடிஎஃப் வாசன் பிரச்சனை நடந்தால் உடனே மன்னிப்பு கேட்டு விடுவதற்கும் தயங்குவதே இல்லை. இது ஒரு முறை அல்ல பலமுறை நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இன்று அவருடைய பிறந்தநாள் இதற்கு முன்பு அவருடைய பிறந்தநாளில் ஃபேன்ஸ் மீட் வைத்து தன்னுடைய ரசிகர்களை அடிக்கடி சந்திக்கும் இவர் தற்போதைய பிறந்த நாளில் தன்னுடைய ரசிகர்களை சந்திக்க முடியாது என்று தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்.

மேலும் அதில் அவர் பேசுகையில், சிலருக்கு ஏன் என்னை பிடிக்கலைன்னு தெரியல. அப்படி ஏதாவது நான் தப்பு பண்ணி இருந்தா ரொம்பவே சாரி. உண்மையாவே வேகமா போறது தப்பு தான். அதை நான் எப்போதும் சரின்னு சொல்ல மாட்டேன். என்னை உங்க வீட்டு பிள்ளையா நினைச்சு நான் பண்ணுன தப்பை எல்லாம் மறந்துருங்க. என்னுடைய புது படத்துக்கு சப்போர்ட் தாங்க. நான் வேகமா வண்டி ஓட்டுறது புடிக்கலான அட்வைஸ் பண்ணுங்க ஆனா அதை விட்டுட்டு வேற வேற மாதிரி திட்டாதீங்க. அதுதான் என் மனச ரொம்ப கஷ்டபடுத்துச்சு.

முன்னாடி நடந்ததை எல்லாம் மறந்துருவோம். இப்போ நடக்கிறதை பத்தி மட்டும் பேசுவோம். இப்போ நான் நடிச்சுக்கிட்டு இருக்க படத்தோட பூஜை ஆரம்பிச்சாச்சு. அதனாலதான் இந்த வருஷம் மீட்டப் என்னால வைக்க முடியாது. நம்ம பட்டாளம் சிறுசு கிடையாது. ரொம்ப ரொம்ப பெருசு. சின்ன இடத்துல நம்ம கூட்டம் கூட்டி நம்ம பசங்க நின்னுகிட்டு, போலீஸ் எல்லாம் வந்து துரத்தி விட்டுட்டு இருக்க கூடாது என்று தான் நான் இப்போ வைக்கல.

YouTube celebrity bike rider TTF Vasan has apologized to fans on his birthday

நம்ம பசங்க வந்தாங்கன்னா அவங்க ராஜ மரியாதையோடு உட்காரனும். அப்படி உட்கார வைக்கிற மாதிரி இருந்தா தான் நான் கூப்பிடுவேன். இன்னைக்கு பட பூஜை நடக்கிறது. ஒரு சாதாரண பையன் படம் நடிக்கிறது அதுவும் ஹீரோவா நடிக்கிறது லேசுப்பட்ட காரியம் கிடையாது. என்ன அந்த அளவுக்கு கூட்டிட்டு வந்து இருக்கீங்க. அதனால இவங்க எல்லாருக்கும் நன்றி என்று கூறி இருக்கிறார்.

அதோடு தன்னுடைய பிறந்த நாளில் கேக் வெட்டி கொண்டாடிய சில வீடியோக்களையும் பகிர்ந்து இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தான் நடிக்கும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டு இருக்கிறார். தான் நடிக்கும் திரைப்படத்திற்கு "மஞ்சள் வீரன்" என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அதோடு அந்த திரைப்படத்தை "செல்வம்" என்பவர் இயக்கி வருகிறார். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கையில் சூலாயுதத்தோடு புல்லட்டில் வீலிங் செய்தவாறு டிடிஎஃப் வாசன் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+