நாம ஜெயிச்சிட்டோம் மாறா... நண்பர்களோடு தனது வெற்றியை கொண்டாடிய இர்பான்..வாழ்த்தும் ரசிகர்கள்
சென்னை: பிரபல யூடியூப் பிரபலமான இர்பான் தன்னுடைய மகிழ்ச்சியை நண்பர்களோடு கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்.
பல நாட்களாக தான் எதிர்பார்த்து இருந்த செயல் தற்போது நடந்து விட்டதை எண்ணி நண்பர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் இர்பான் நன்றி கூறியிருக்கிறார்.

யூடியூப் பிரபலம்
பிரபல யூடியூப் பிரபலமான இர்பான் உணவு விமர்சகராக பலருக்கும் பரிச்சயமானவர். இவர் பல்வேறு நாடுகளுக்கும் புதுப்புது இடங்களுக்கும் சுற்றி திரிந்து அங்கே உள்ள ஸ்பெஷல் உணவுகளை பற்றிய நிறை குறைகளை எடுத்துரைத்து பலருக்கும் பரிச்சயமானவர். இவருடைய சாப்பாடு ஆர்வத்தை பார்த்து பலர் ஆரம்பத்தில் இவரை திட்டி தீர்த்து இருந்தாலும், அதிகமானோர் இவருக்கு ஆதரவு கொடுத்து வந்தனர். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர்.

மீம்ஸ்களில் வைரல்
பலருடைய வாழ்க்கையில் இன்றியமையாததாக இருந்துவரும் சமூக வலைத்தளத்தில் யூடியூப் ஒன்றாக இருந்துவருகிறது. பலருக்கும் தெரியாததை தெரிந்து கொள்வதற்கு முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது. அதில் சாப்பாடு பற்றி புதிது புதிதாக தெரிந்து கொள்வதற்கு பலரும் இர்பானை பின்தொடர்ந்து வருகின்றனர். இவருடைய பல வீடியோக்கள் ரசிகர்களால் வைரல் ஆக்கப்பட்டு வருகின்றன. அதிகமான வீடியோக்களில் இவருடைய பர்பாமன்ஸ் ரசிகர்களால் கலாய்க்கப்பட்டு மீம்ஸ்களில் வலம் வந்து இருந்தாலும் இவருக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.

நின்றுபோன திருமணம்
சமீபத்தில் இவருடைய திருமண செய்தி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்து இருந்தது. இவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்து ஒரு சில மாதங்கள் முடிவடைந்த நிலையில் தொடர்ந்து பலரும் திருமணத்தைப் பற்றி தான் இவரிடம் கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தனர். இவர் அப்போது திருமணத்தை தான் நிறுத்தி விட்டேன். அதனால் தொடர்ந்து அதைப் பற்றி என்னிடம் கேள்வி கேட்க வேண்டாம் வேற ஏதாவது பேசலாம் என்று கூறியிருந்தார். இருந்தாலும் இவருடைய திடீர் முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து. எதனால் திருமணத்தை நிறுத்தி விட்டார் என்று அதிகமாக கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தது.

மகிழ்ச்சியான செய்தி
இர்பான் தற்போது பல்வேறு நாடுகளுக்கு மீண்டும் சுத்த தொடங்கியிருக்கிறார். தன்னுடைய வேலையில் இனி கவனத்தை செலுத்தி அதில் தன்னுடைய திறமையை வெளிக்காட்டலாம் என்பதே இவருடைய ஆசையாக இருந்தது. தற்போது இவருடைய ஆசைப்படி மகிழ்ச்சியான நிகழ்வு நடந்திருக்கிறது. இவருக்கு மேலும் மகிழ்ச்சி கொடுக்கும் விதமாக 3 மில்லியன் பாலோவர்ஸ் கிடைத்திருக்கின்றனர். இந்த வெற்றியை தன்னுடைய நண்பர்களுடன் ரசிகர்களுக்கும் நன்றி கூறி இருக்கிறார். இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் பலர் லைக் அளித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications