TTF வாசனோடு திருமணம்..!? உண்மையை உடைத்த சீரியல் நடிகை.. ட்ரெண்டாகும் இன்விடேஷன்
சென்னை: பிரபல youtuber மற்றும் பைக்கரான டிடிஎஃப் வாசன் மற்றும் சின்னத்திரை நடிகை சங்கீதா காதலித்து வருவதாக சமீபத்தில் அதிகமான செய்திகள் பரவி வருகிறது.
அதைத்தொடர்ந்து முதல் முறையாக சங்கீதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அதோடு சீரியல் நடிகை சங்கீதா தன்னுடைய திருமண இன்விடேசனையும் பகிர்ந்து இருக்கிறார். இந்த நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.

சின்னத்திரை நடிகை ஆன நடிகை சங்கீதா விஜய் டிவியில் சமீபத்தில் முடிவடைந்த ராஜா ராணி சீசன் 2 சீரியலில் நடித்து இருந்தார். அதுபோல தற்போது ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலிலும் அவர் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களும் போட்டோ சூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருவார்.

அதுபோல youtuber மற்றும் பைக்கர் டிடிஎஃப் வாசன் சமூக வலைத்தளத்தில் பலருக்கும் பரிட்சயமானவர்தான். அடிக்கடி இவர் பற்றிய சர்ச்சை செய்திகள் வைரலாகி வருவதும் வாடிக்கையாகிவிட்டது. அதுவும் இவர் முதல் முறையாக தான் சினிமாவில் நடிக்கப் போகிறேன் என்று சொன்ன நேரத்தில் மேலும் கூடுதலாக புது பிரச்சனைகள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கிறது. தான் நடிக்கும் திரைப்படத்தில் பூஜை புகைப்படங்களை வெளியிட்ட டிடிஎஃப் வாசன் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே அவருடைய கார் சமீபத்தில் ஆக்சிடெண்ட் ஆகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அந்தப் பிரச்சனை இப்போதுதான் கொஞ்சம் அடங்க தொடங்கி இருக்கிறது. அதே நேரத்தில் அவருக்கும் சின்னத்திரை நடிகையான சங்கீதாவிற்கும் காதல் இருவரும் விரைவில் திருமணம் செய்யப் போகிறார்கள் என்ற செய்திகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அதற்கு காரணம் சங்கீதா சீரியல் நடிகையாக இருந்தாலும் அடிக்கடி டிடிஎப் வாசன் ரீல்ஸ் வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களிலும் அடிக்கடி ஷேர் செய்து வருகிறார். அதோடு சங்கீதாவின் அண்ணன் வாசனின் நெருங்கிய நண்பர். அதனால் தான் இவர்கள் இருவருக்கும் காதல் என்றெல்லாம் பல்வேறு கிசுகிசுப்புகளும் சர்ச்சைகளும் வேகமாக பரவி வருகிறது. அதோடு சங்கீதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒரு இன்விடேஷன் ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் V என்ற பெயரில் மணமகன் பெயரும் கீழே சங்கீதா என்று இவருடைய பெயரும் இருந்தது.

V என்ற பெயரைத் தொடர்ந்து மீதம் இருக்கும் பெயரை மறைத்து வைத்திருந்தார். இதனால் அது வாசனாகத்தான் இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இன்று சங்கீதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். நான் கல்யாணம் செய்ய போகும் கணவரின் பெயர் விக்னேஷ் எங்களுக்கு ஆகஸ்ட் 20ஆம் தேதி 2023 அன்று திருமணம் நடக்கப்போகிறது. அதோடு வாசன் எனக்கு அண்ணன்தான். அதனால உண்மை எது என்று தெரியாமல் தவறாக செய்திகளை பரப்பாதீர்கள் என்று கூறியிருக்கிறார்.
-
Blast OTT release: ஓடிடியில் வரும் "பிளாஸ்ட்” படம்.. அதுவும் எதில், எப்போ? பார்க்கலாம்.. வெளியான தகவல் -
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
வாழ்க்கையை கெடுத்த "வதந்தி”.. இப்போ கஷ்டப்படுறேன்.. கண்ணீருடன் உதவி கேட்ட பாவா லட்சுமணன்! -
"தமிழர்கள் என்றாலே திருடர்களா? ரவுடிகளா? வெடித்த மலையாள சினிமா சர்ச்சை... 'Dridam' படத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள் -
மாஸ்டர் மகேந்திரனின் ஷாக்கடித்த கரண்ட் பேச்சு.. அசிங்கமா திட்டறாங்க.. விஜய் கிட்ட நல்ல பேர் வாங்கவா -
"பாரதிராஜாவை போலவே... கடைசி நாட்களில் அமைதியாக வலியை சுமந்த மணிவண்ணன்!" சோக கதை -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?"












Click it and Unblock the Notifications