நெப்போலியன் மகன் கல்யாணத்தில் இர்பான் கொடுத்த காஸ்ட்லி கிப்ட்.. மாப்பிள்ளை சொன்ன வார்த்தை
சென்னை: நடிகர் நெப்போலியனின் மகன் திருமணத்தில் யூடியூபர் இர்ஃபான் கொடுத்த விலை உயர்ந்த பரிசை தன்னுடைய youtube சேனலில் பகிர்ந்து இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
நடிகர் நெப்போலியன் தன்னுடைய மகன் கல்யாணத்தை ஜப்பானில் பிரம்மாண்டமாக செய்திருந்தார். இதில் ஒரு சில பிரபலங்கள் மட்டும் கலந்து கொண்டனர். அதிலும் குறிப்பாக நடிகர் சரத்குமார், ராதிகா, மீனா, சுகாசினி, கலா மாஸ்டர், குஷ்பூ, கார்த்தி, பாண்டியராஜன் போன்றோர் சினிமா துறையில் இருந்து கலந்து கொண்டனர்.

அது போல பிரபல யூடியூபர் இர்பான் முக்கிய நபராக கலந்து கொண்டார். நெப்போலியன் மகன் தனுஷ் அமெரிக்காவில் வளர்ந்து வந்தாலும் அவர் சமூக வலைத்தளத்தை அதிகமாக பயன்படுத்துகிறார். அதுபோல தனுஷுக்கு வித விதமான சாப்பாடு சாப்பிடுவது ரொம்பவும் பிடிக்குமாம். அதனாலையே சாப்பாடை ரிவ்யூ செய்யும் இர்பானின் தீவிரமான ரசிகரா இருந்திருக்கிறார்.
தன்னுடைய மகனுக்காக நெப்போலியன் இர்பானை அமெரிக்காவிற்கே அழைத்து சென்றிருந்தார். சில வருடங்களுக்கு முன்பு இர்பான் வெளியிட்ட வீடியோவால்தான் அமெரிக்காவில் நெப்போலியன் குடும்பம் செட்டில் ஆனதே பலருக்கும் தெரிய வந்தது. அதுபோல தன்னுடைய மகன் மீது நெப்போலியன் வைத்திருக்கும் பாசத்தையும், அந்த வீடியோவில் நெப்போலியன் பகிர்ந்து இருந்தார்.

இந்த நிலையில் தனுஷின் திருமணத்திற்காக முதலமைச்சருக்கு பத்திரிக்கை வைக்க வந்த நெப்போலியன் இர்பான் வீட்டிற்கு சென்று பத்திரிக்கை வைத்து இருந்தார். அப்போது எடுத்த புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் இர்பான் பகிர்ந்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது ஜப்பானில் தனுஷ் திருமணம் நடைபெற்ற போது அங்கு சென்ற இர்ஃபான் தனுஷ் மற்றும் அக்ஷயா தம்பதிக்கு விலை உயர்ந்த வாட்ச் கிப்ட் கொடுத்திருக்கிறார். இந்த திருமணத்தில் பலர் வாட்ச் கிப்ட் செய்வார்கள். ஆனாலும் எனக்கு வாட்ச் பிடிக்கும் என்பதால் நான் அதையே தனுஷுக்கு கிப்ட் கொடுத்தேன்.

கணவன் மற்றும் மனைவி இருவரும் ஒன்றாக போடுவது போல ஜோடி வாட்ச் தான் நான் வாங்கிக் கொடுத்தேன் என்று அந்த வீடியோவில் இர்பான் பகிர்ந்து இருக்கிறார். அப்போது மாப்பிள்ளையானா தனுஷ் எனக்கு வாட்ச் ரொம்பவும் பிடிக்கும். ஆனால் கல்யாணத்திற்கு எனக்கு இரண்டு வாட்ச் மட்டும்தான் வந்தது அதில் உங்க வாட்ச் எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது என்று பேசி இருக்கிறார்.
சமீப காலமாக இர்பான் அதிகமான சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறார். ஆனாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் நெப்போலியன் வீட்டு திருமண பங்க்ஷனில் ஒரு அண்ணனாக இருந்து கல்யாண வேலைகளை செய்து இர்பான் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications