குழந்தையின் போட்டோவை முதல் முறையாக வெளியிட்ட இர்ஃபான்.. அதோடு சொன்ன தகவல் சர்ப்ரைஸ்
சென்னை: யூடியூபராகவும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காகவும் பிரபலமடைந்த இர்ஃபான் தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை instagram பக்கத்தில் முதல் முறையாக வெளியிட்டு இருக்கிறார்.
தற்போதைய காலகட்டத்தில் பல திரைப்படங்களில் நடித்து நடிகர்கள் வாங்கும் பெயரை விடவும் யூடியூபர்கள் மற்றும் டிக் டாக், இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் எளிமையாக பிரபலமாகி விடுகிறார்கள். ஒரு சில ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிட்டு கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்று வருகிறார்கள். ஒரு சிலர் சில பொருள்களை பற்றி ரிவ்யூ செய்த பிரபலம் அடைந்து விடுகிறார்கள். அதில் ஒருவர் தான் யூடியுபர் இர்ஃபான்.

இர்ஃபான் பல நாடுகளுக்கு சுற்றி திரிந்து வித விதமான உணவுகளை சுவைத்து பார்த்து அதன் சுவையை ரிவ்யூ செய்து தன்னுடைய youtube சேனலில் பதிவிட்டு வருகிறார். இவர் வீடியோவை பார்ப்பதற்காக மில்லியன் கணக்கில் பாலோவர்ஸ் இருக்கிறார்கள். இவர் ஒரு உணவை சாப்பிடும் போது ரசித்து ருசித்து ரிவ்யூ சொல்லும் விதம் பலருக்கும் பிடித்திருக்கிறது. ஒரு சிலர் இதை விமர்சித்து வருபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனாலும் அதை எல்லாம் இர்ஃபான் கண்டு கொள்வது கிடையாது.
அதே நேரத்தில் அடிக்கடி சர்ச்சைகளிலும் இர்ஃபான் சிக்கிக் கொள்கிறார். சில மாதங்களுக்கு முன்பு கூட அவருடைய மனைவி கர்ப்பமாக இருக்கும் போது தன்னுடைய மனைவியின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை வெளிநாட்டில் ஸ்கேன் செய்து தெரிந்து கொண்டு அதை தமிழ்நாட்டில் பங்க்ஷன் வைத்து அறிவித்திருந்தார். பெண் குழந்தை பிறக்கப் போகுது என்ற மகிழ்ச்சியில் அவர் அதை செய்திருந்தாலும் அது இணையத்தில் பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது பிறகு அந்த வீடியோவை இர்ஃபான் டெலிட் செய்திருந்தார்.
அதற்குப் பிறகு இர்ஃபான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் பிரபலமடைந்திருந்தார். தனக்கு சாப்பிட மட்டுமல்ல சமைக்கவும் தெரியும் என்று நிரூபித்து அந்த நிகழ்ச்சியில் ரன்னராகவும் தேர்வாகி இருந்தார். அவர் ஆசைப்பட்டது போலவே அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த சந்தோஷத்தை ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார்.
இப்படியான நிலையில் குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் தற்போது முதல் முறையாக தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை தன் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் குழந்தையை வர்ணித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
அதே நேரத்தில் தன்னுடைய குழந்தையின் வீடியோ நாளை வெளியாகும் என்று இர்ஃபான் அப்டேட் கொடுத்திருக்கிறார். இதை ஒரு சிலர் பாராட்டி வந்தாலும் சிலர் வழக்கம் போல இவரும் தன்னுடைய குழந்தையை வைத்து வீடியோ போட தொடங்கிவிட்டார் என்று விமர்சித்தும் வருகிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications