திடீரென எல்லாம் மாறிவிட்டது.. அதிசயம் கிடைத்தது.. குழந்தை பிறந்தவுடன் இர்பான் வெளியிட்ட பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல யூடியூபர் இர்பான் அறிவித்தபடியே அவருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இர்பானுக்கு கடந்த வருடத்தில் திருமணம் நடந்திருந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய மனைவியின் வயிற்றில் இருக்கும் கருவின் பாலினத்தை விழா எடுத்து அறிவித்திருந்தார்.

youtube பயன்படுத்தும் பலருக்கும் பரிட்சயமான ஒரு நபராக தான் இர்பான் இருந்து வருகிறார்.ரோட்டு கடை முதல் 5 ஸ்டார் ஹோட்டல் வரை அனைத்து இடங்களுக்கும் சென்று அங்குள்ள உணவுகளை ருசி பார்த்து மக்களுக்கு ரிவியூவாக கொடுத்து வருகிறார். இர்பான் ரிவியூ என்ற youtube சேனல் ஒன்றை நடத்தி வரும் நிலையில் இவருடைய ரிவ்யூ பலருக்கும் ஃபேவரைட் ஆக இருக்கிறது. அசைவ உணவுகளை சாப்பிட்டு ஆகா ஓஹோ என்று இவர் சொல்லுவதை பார்க்கும் போதே பலருக்கு வாயில் எச்சில் ஊறும் அளவிற்கு இவர் வர்ணித்து விடுகிறார்.

YouTuber Irrfan

அதுமட்டுமல்லாமல் பல நாடுகளுக்கும் சென்று அங்குள்ள உணவுகளையும் ருசி பார்த்து அதை ரிவ்யூ ஆக கொடுத்து வருகிறார். யூடியூபை தாண்டி பேஸ்புக்கிலும் பல லட்சம் ரூபாய் சம்பாதித்து வருகிறார். சமீபத்தில் இவருக்கு பல நல்ல விஷயங்கள் நடந்து வருகிறது. கடந்த வருடத்தில் இவர் ஆலியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட பிறகு அவருடைய மனைவி கர்ப்பமாக இருந்தார்.

பொதுவாக யூடியூபர்கள் தங்களுக்கு கிடைத்த மகிழ்ச்சி, துக்கம் எல்லாவற்றையும் வீடியோவில் பகிர்ந்து விடுவார்கள். அது போல தான் இர்பான் தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருந்த செய்தியை அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து சில மாதங்களில் தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருக்கும் போது வெளிநாட்டிற்கு சென்று குழந்தையின் பாலினம் பற்றி அறிந்து அந்த தகவல்களை வீட்டில் பெரிய பார்ட்டியாக வைத்து அறிவித்ததை பார்த்த சுகாதாரத் துறையினர் இவர் மீது புகார் கொடுத்திருந்தனர்.

மேலும் அந்த வீடியோ தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர். இதை எடுத்து இர்பான் தன்னுடைய youtube பக்கத்தில் அந்த வீடியோவை டெலிட் செய்து தான் செய்ததற்கு மன்னிப்பு கோரி வீடியோவும் வெளியிட்டு இருந்தார். அதுபோல குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கு பெற்றிருக்கும் இர்பான் மிகச் சிறப்பாக சமையல் செய்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் ஏற்கனவே இர்பான் அறிவித்தபடி அவருக்கு இன்று பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போஸ்ட் வெளியிட்டு இருக்கிறார். தனக்கு பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் இர்பான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய குழந்தையின் கைவிரல்கள் தன் கைகளை பிடித்தபடி ஒரு புகைப்படத்தை எடுத்து இருக்கிறார். அதில் "திடீரென்று என்னுடைய வாழ்க்கையில் எல்லாம் மாறிவிட்டது. என் இளவரசி இங்கே இருக்கிறார். எனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. நான் என்ன நல்லது பண்ணுனேன்னு தெரியல.. எனக்கு இப்படி ஒரு சந்தோஷம் கிடைத்திருக்கிறது.

Television Cook with comali Irfan

என்னுடைய மகிழ்ச்சியை எல்லாம் என்னுடைய மனைவிக்கே திருப்பிக் கொடுக்கப் போகிறேன்.. இந்த அதிசயம் எங்கள் வீட்டில் கிடைத்ததால் எங்கள் குடும்பம் வளர்ந்தது" என்று அந்த பதிவில் இர்பான் கூறி இருக்கும் நிலையில் இந்த பதிவு வெளியிட்டு சில நிமிடங்களிலேயே 5000 க்கும் மேற்பட்ட வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+