அசீம் வெற்றி பெற்றது எப்படி? RTI மூலம் கேள்விகளை எழுப்பிய பிரபலம்... கடைசியில் இப்படி ஒரு சிக்கலா?
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் அசின் ஜெயித்தது குறித்து யூட்டியூப்பர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு தற்போது அந்த நிகழ்ச்சிக்கு எதிராக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கிறது.
ஆறாவது சீசனின் டைட்டில் வின்னராக அசீம் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து அந்த அறிக்கையில் பல கேள்விகள் எழுப்பப்பட்டு இருக்கிறது.
ஜோ மைக்கேல் என்ற யூட்டியூப்பர் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி ரிவ்யூ செய்து வந்த நிலையில் தற்போது அதற்கு எதிராக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பல்வேறு கேள்விகளை எழுப்பி அதை தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

முடிவடையாத கருத்து மோதல்கள்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவடைந்து சில மாதங்கள் கடந்துவிட்ட நிகழ்ச்சியில் இந்த சீசனில் டைட்டில் வின்னராக அசீம் தேர்ந்தெடுக்கப்பட்டது தவறு என்று இப்ப வரைக்கும் பலர் கருத்துக்கூறி வருகிறார்கள். ஆரம்பத்தில் இருந்தே இந்த சீசனின் டைட்டில் வின்னர் விக்ரமன் தான் என்று கூறி வந்த நிலையில் கடைசி நேரத்தில் ஏற்பட்ட மாற்றம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. அதனால் இப்போ வரைக்கும் பலர் இந்த நிகழ்ச்சியை பற்றியும் அசீம் பற்றியும் திட்டி தீர்த்து வருகிறார்கள். ஆனால் அசீமுடைய ரசிகர்கள் அசீம் ஜெயித்ததுதான் சரி என்றும் அசீம் அவருடைய உண்மையான கேரக்டரில் இருந்தார் அது ரசிகர்களை கவர்ந்து விட்டது. ரசிகர்களின் ஆதரவினால் தான் அசீம் ஜெயித்தார் என்று தொடர்ந்து அவருக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் இருதரப்பு ரசிகர்களின் கருத்து மோதல்கள் இப்ப வரைக்கும் நடந்து கொண்டிருக்கிறது.

எதிராக கொடுக்கப்பட்ட மனு
இந்த நிலையில் ரன்னர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட விக்ரமன் தொடர்ந்து விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அது போல அசீம் ஒரு பக்கம் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார். ஆனால் விக்ரமன் ஏற்கனவே அரசியல் பிரமுகராக பலருக்கும் பரிச்சயமான நிலையில் தன்னுடைய அரசியல் பயணத்தையும் தொடர்ந்து வருகிறார். இந்த நிலையில் அடிக்கடி ஃபேன்ஸ் மீட்டிங் வைத்து தன்னுடைய ரசிகர்களோடு தன்னுடைய கருத்தை கொண்டு சென்று கொண்டிருக்கும் பணியை விக்ரமன் பார்த்து வருகிறார். இந்த நிலையில் அசீம் மற்றும் பிக் பாஸுக்கு எதிராக பிரபல யூட்டியூப்பர் ஜோ மைக்கேல் என்பவர் தற்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு அளித்து இருக்கிறார்.

பிக் பாஸ் ரிவ்யூவர்
ஏற்கனவே ஜோ மைக்கேல் பிரபலமானது மீரா மிதுன் விஷயத்தில் தான். இவர் சூப்பர் மாடல் என்று கூறி வந்த மீரா மிதுன் பற்றி பல்வேறு ரகசியங்களை மக்களுக்கு காட்டியது இவர்தான். அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரிவியூவராக இருந்து வரும் இவர் ஆறாவது சீசனில் தனலட்சுமி இருக்கும்போது அவரைப் பற்றியும் அவருடைய அம்மாவின் பிசினஸ் பற்றியும் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார். குறிப்பாக தனலட்சுமி கதை சொல்லும் டாஸ்க்கில் சொன்ன கதையும் அவருடைய சொந்த கதையையும் வைத்து சில வீடியோக்களையும் வெளியிட்டு இருந்தார்.

மனுவில் இருக்கும் கேள்வி
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக இவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சில கேள்விகளை கேட்டிருக்கிறார். அதில் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்ப பிசிசிசி (பிராண்ட் காஸ்ட் கண்டன்ட் கம்பளைண்ட் கவுன்சிலிங்) சான்றிதழ் வாங்கியுள்ளதா? பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தடைக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் வழக்கு உள்ளதா? பிக் பாஸ் சீசன் 1 முதல் 6 வரையிலும் நிகழ்ச்சிக்கு எதிராக ஏதாவது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டுள்ளதா? பிக் பாஸ் நிகழ்ச்சியில் விதிமுறைகள் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா? ஒவ்வொரு வார இறுதியிலும் எதன் அடிப்படையில் எலிமினேஷன் நடந்தது? சீசன் 6 வெற்றியாளர் எதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்? அசீம் பெற்ற வாக்குகள் எத்தனை? எதன் அடிப்படையில் விக்ரமன் ரன்னராக அறிவிக்கப்பட்டார்? அசிமிற்க்கும், விக்ரமனுக்கும் இடையே எத்தனை வாக்குகள் வித்தியாசம் என பல அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி அந்த பேப்பரை தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications