புது கார் வாங்கிய டிக் டாக் பிரபலம் “சுமதி”.. துணைக்கு வந்த நண்பர்கள்.. குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: யூடியூப்பில் உதயா சுமதி என்ற பெயரில் பிரபலமடைந்த சுமதி புதியதாக கார் வாங்கி இருக்கும் நிலையில் அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர அது அதிகமான லைக்குகள் மற்றும் வாழ்த்துக்களை பெற்று வருகிறது.
டிக் டாக் செயலி ஆக்டிவாக இருந்த காலகட்டத்தில் அதில் ஒரு சிலர் பொழுதுபோக்காக வெளியிட்ட வீடியோஸ் பெரிய அளவில் அவர்களை புகழின் உச்சத்திற்கே கொண்டு சென்றிருக்கிறது. ஒரு சிலர் தங்களுடைய வாழ்க்கையை இந்த டிக் டாக் செயலியால் இழந்து போனவர்களும் இருக்கிறார்கள். ஆனால் சிலர் இந்த டிக் டாக் செயலியில் தங்களுடைய நடிப்பு திறமையை வெளிக்காட்டி இப்போது வெள்ளி திரையிலும் அடி எடுத்து இருக்கிறார்கள்.

அதற்கு உதாரணமாக ஜிபி முத்து முதல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வெற்றி பெற்ற அர்ச்சனா வரை பலருடைய பெயரை சொல்லலாம். அந்த வகையில் டிக் டாக் உதயா சுமதிக்கு பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர். ஆரம்பத்தில் இதில் உதயா மற்றும் அவருடைய மனைவி சுமதி இருவரும் கப்பிள்ஸ் வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஜோடியாக வலம் வந்தனர்.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் உதயாவிற்கு பைக் ஆக்சிடென்ட் ஆகி சில மாதங்கள் அவர் கோமாவில் இருந்தார். அப்போதுஉதயா மருத்துவமனையில் இருக்கும்போது சுமதி தன்னிடம் இருந்த மொத்த பணத்தையும் தான் மருத்துவமனையில் செலவழித்து விட்டதாகவும் தனக்கு உதவி செய்ய ரசிகர்களிடம் வேண்டி வீடியோ வெளியிட்டு இருந்த நிலையில் அவருக்கு அதிகமான ரசிகர்கள் தங்களால் முடிந்த அளவிற்கு உதவிகளை செய்து வந்தனர்.

ஆனாலும் உதயா உயிர் பிழைக்காமல் காலமானார். அதற்கு பிறகு குடும்பத்தினரின் வற்புறுத்தலினால் சுமதி உதயாவின் நண்பரை திருமணம் செய்திருந்தார். ஆனால் அந்த திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என்று ஒரு சில நாட்களிலேயே தான் பிரிந்து விட்டதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். இப்படியான நிலையில் இப்போது அவர் தனியாக தன்னுடைய மகனோடு வசித்து வருகிறார்.

இந்த நிலையில் பல பொருள்களுக்கு ப்ரமோஷன் செய்தும் போட்டோ சூட் நடத்தியும் வரும் சுமதி புதியதாக மாருதி சுசுகி கம்பெனியின் breeza car வாங்கி இருக்கிறார். அது கிட்டத்தட்ட 8 லட்சத்தில் இருந்து 12 லட்சத்திற்குள் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதை இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அவருக்கு அவருடைய ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
அதே நேரத்தில் சுமதிக்கு புது கார் வாங்கும் போது அவருடைய டிக் டாக் நண்பர்கள் குடும்பத்தோடு துணையாக சென்று இருக்கின்றனர். சுமதியின் கணவர் உதயா இறந்த பிறகு உதயாவின் அம்மா சுமதி உடன் தான் இருந்தார். ஆனால் பிறகு இப்போது அவரும் சுமதியோடு இல்லை. இந்த நிலையில் தன்னுடைய மகனை தான் உதயா ஆசைப்பட்ட மாதிரி தான் வளர்ப்பேன். அதுதான் என்னுடைய லட்சியம் என்று பல பேட்டிகளிலும் சுமதி பேசிக் கொண்டிருக்கிறார்.
அதுபோல சுமதி இப்போது "ஆட்டி" என்ற படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். அது குறித்த புகைப்படங்களையும் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார். ஆட்டி என்ற திரைப்படத்தை இயக்குனர் கிட்டு தான் இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்க்கான சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் சுமதி புது கார் வாங்கி இருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications