பாலியல் சர்ச்சையை கிளப்பிய யூடியூபர்.. ஆதாரம் இன்றி அவதூறு என போலீசில் உதயா சுமதி கம்பளைண்ட்
சென்னை: மக்கள் சேவை என்ற youtube யை நடத்தி வரும் சித்ரா என்பவர் தன்னை பற்றி ஆதாரம் இன்றி அவதூறு பரப்பினார் என்று அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என யூடியூபர் உதயா சுமதி இன்று ஜனவரி 28 மதுரை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்திருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்பு யூடியூபர் சித்ரா சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது பல யூடியூபர்கள் பற்றி பல்வேறு பாலியல் சர்ச்சையான விஷயங்களை பேசி இருந்தார். அதில் யூடியூபர் உதயா சுமதி பற்றி பேசி இருந்தார். இந்நிலையில் ஆதாரம் இன்றி சித்ரா தன்னை பற்றி அவதூறாக பேசியதாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உதயா சுமதி இன்று புகார் கொடுத்திருக்கிறார். மேலும் நான் தவறு செய்ததற்கான ஆதாரத்தை அவர் காட்டுவாரா? எனவும் கேள்வி எழுப்பினார்.

என்னுடைய கணவர் youtuber உதயா பலருக்கும் தெரிந்திருக்கும். அவர் இறந்து 5 வருடம் ஆகிவிட்டது. அதற்குப் பிறகு சிங்கிள் பேரண்டா என்னுடைய மகனை நான் கஷ்டப்பட்டு வளர்த்துக் கொண்டு இருக்கிறேன். சமுதாயத்தில் கணவர் இல்லாமல் குழந்தையை வளர்ப்பது எவ்வளவு கஷ்டம் என்று எனக்கு தெரியும்.
நான் உதயா சுமதி என்ற youtube சேனலை நடத்தி வருகிறேன். அந்த சேனலில் எந்த ஆபாசமான வீடியோக்களும் நான் போட்டது கிடையாது. யாரைப் பற்றியும் நான் தரகுறைவாக பேசியது கிடையாது. ஆனால் youtuber சித்ரா என்பவர் என்னை பற்றி பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்திருக்கிறார். நான் பணத்திற்காக போகிறேன் என்று அவர் குற்றச்சாட்டு சொல்லி இருக்கிறார். அது உண்மை என்றால் ஆதாரத்தை என்னிடம் காட்ட சொல்லுங்கள்.
இதுவரைக்கும் என் மீது ஒரு டாட் விழாமல் தான் நான் வாழ்ந்து இருக்கிறேன். நான் எந்த பெயர் எடுத்து விடக்கூடாது என்று நினைத்திருந்தேனோ அதே பழியை என் மீது அந்த சித்ரா போட்டு இருக்கிறார். அவருக்கும் எனக்கும் எந்த முன் விரோதமும் கிடையாது. ஆனால் எதற்காக அவர் என்னை தவறாக பேசினார் என்று எனக்கு தெரியாது. நான் தப்பு செய்தால் அவரிடம் ஆதாரம் இருந்தால் அந்த ஆதாரத்தை காட்ட வேண்டும் இல்லை என்றால் என்னை அசிங்கப்படுத்திய இதே பொதுமக்கள் முன்பு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
அதோடு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் காவல்துறையிடம் புகார் கொடுத்து இருக்கிறேன். எனக்கு என்னுடைய மகனை வளர்ப்பதற்கும், குடும்பத்தை கவனிப்பதற்குமே நேரம் சரியாக இருக்கிறது. நான் என்னுடைய வேலையை தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் தவிர அந்த youtuber சித்ரா யார் என்று கூட எனக்கு தெரியாது. அவருடைய வீடியோக்களையும் நான் பார்த்தது கிடையாது.
என்னுடைய கணவர் இருந்திருந்தால் இவர் இப்படி பேசியிருக்க முடியாது. என்னுடைய கணவர் இல்லை நான் தனியாக இருக்கிறேன் என்று தான் அந்தப் பெண் என் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்திருக்கிறார். இதற்கு எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று செய்தியாளர்கள் முன்பு யூடியூபர் உதயா சுமதி பேசியிருக்கிறார்.

அதுபோல சில நாட்களுக்கும் முன்பு யூடியூபர் சித்ரா செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது பல யூடியூபர்களின் சம்பளத்தை சில யூடியூபர்கள் ஹேக் செய்து தங்களுடைய அக்கவுண்டுக்கு வருவது போல செய்து விடுகிறார்கள். என்னுடைய சம்பளம் யூடியூபர் திவ்யா கள்ளச்சி அக்கவுண்டுக்கு மாறி இருந்தது அது பற்றி நான் அவரிடம் கேட்டேன்.
திவ்யா கள்ளச்சி எனக்கு சரியாக பதில் சொல்லவில்லை. அதனால் அவரை சந்தித்து என்னுடைய பணத்தை வாங்குவதற்காக நான் போயிருந்தேன். அங்கு சில குழந்தைகளை திவ்யா கள்ளச்சி அடைத்து வைத்திருந்தார். அந்த குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கு உள்ளாவதாக என்னிடம் சொல்லி இருந்தார்கள்.
அதுபோல நான் திவ்யா கள்ளச்சியின் செல்போனில் சில வீடியோக்களையும் ஆடியோக்களையும் பார்த்தேன். அதில் பல யூடியூபர்கள் பணத்திற்காக பாலியல் தொழில் செய்வது தெரிந்தது. அதற்கான ஆதாரத்தை என் கண்ணால் நானே பார்த்தேன். youtuber உதயா சுமதியின் வீடியோவையும் நான் பார்த்தேன். அவருக்கு ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பணம் வாங்குகிறார் என்றும் சித்ரா பேசியிருக்கிறார். இது குறித்து தான் இப்போது உதயா சுமதி யூடியூபர் சித்ரா மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கிறார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications