Parithabangal கோபி, சுதாகருக்கு மிரட்டல்? சோஷியல் வீடியோவின் தாக்கம்! சாதி தீவிரம் குறையுமா? பிரபலம்
சென்னை: நெல்லை கவின் படுகொலை சம்பவத்துக்கு பிறகு, ஆணவப் படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. ஜாதி ஆணவ கொலையை தூண்டிவிடும் சக்திகளுக்கு எதிராக நடவடிக்கைகளும் கடுமையாக்கப்பட வேண்டும் என்றும் பலரும் கொந்தளித்து கூறிவருகிறார்கள். இந்நிலையில் கவின் ஆணவப் படுகொலை குறித்து பிரபல யூடியூபர்களான 'பரிதாபங்கள்' கோபி- சுதாகர் தற்போது வெளியிட்டிருக்கும் கிண்டல் வீடியோவானது, பெரும்பாலானோரின் வரவேற்பை பெற்று வருகிறது. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி தன்னுடைய கருத்தை சொல்லி உள்ளார்.
AramNaadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் உமாபதி, "கோபி, சுதாகர் இருவருமே தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.. எனவே, கிராமங்களில் நடக்கும் விஷயங்களை நன்றாக அறிந்தவர்கள்.. மதுரையை எடுத்துக்கொண்டாலும் நகர்ப்புறத்தில் பெரிய அளவிலான சாதீய தாக்கங்கள் இருக்காது..

கலவர பூமிகள் குறைந்துள்ளன
மதுரையில் மேலூர், சிட்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகள், திருமங்கலம் தாண்டிய பகுதிகள், ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர் போன்ற ஏரியாக்கள் கலவர பூமியாகும்.. திருநெல்வேலியில் சில பகுதிகள், ராமநாதபுரத்தில் கமுதி போன்ற இடங்கள், திருப்பாச்சி போன்ற ஏரியாக்களில் ஜாதி கலவரம் வரக்கூடிய பகுதிகளாகும்..
திருச்சியை தாண்டினால் சாதிக் கலவரம் வராது.. திருவாரூர், தஞ்சையிலும் இருக்காது.. விருதாச்சலம் சில இடங்களில் கலவரம் வரும்.. ஆனால், வேலூரில் அனைத்து தரப்பிலுமே வசித்து வருவதால், பெரிய அளவில் ஜாதி கலவரம் வராது.. தர்மபுரியில் பெரிய அளவுக்கு இருக்காது.. கோவை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, திருப்பூர் வரை வன்முறை இருக்காது.. ஈரோடு பார்டர், சேலம் பார்டரில் ஜாதி கலவரம் வரலாம்..
கட்டுக்குள் வந்த வன்முறைகள்
இதற்கெல்லாம் காரணம் Migration தான்.. வெளியூர்க்காரர்கள் மேற்கண்ட இடங்களுக்கு வருவது, அல்லது அங்குள்ளவர்கள் வெளியூர்களுக்கு செல்வது போன்றவையே காரணமாக உள்ளது.. அந்தவகையில், 90களின் இறுதிவரை சாதி பிரச்சனைகள் அதிகமாகவே காணப்பட்டது,.
ஆனால், படிப்புறிவு சற்று அதிகமானதாலும், அதனை சார்ந்து வெளியூர்களுக்கு மக்கள் செல்ல நேர்ந்ததாலும், அரசின் கட்டுப்பாடுகள், கடுமையான நடவடிக்கைகளாலும்தான், அவை ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.
அதிலும், 80களில் கொலைக்கு கொலை தாறுமாறாக நடந்தது.. அன்றைய காலம் அளவுக்கு இன்று சாதி தீவிரம் எப்போதுமே நிலவுவதில்லை.. அப்படியொரு நிலைமை இருந்ததெல்லாம், சென்னைக்கு பலரும் குடிபெயர்ந்து, வந்தபிறகு மாறிவிட்டது..
ஆசிட் ஊற்றி அழிக்கணும்
பொதுவாக ஆண்கள், பெண்கள் யாராக இருந்தாலும் 16,15 வயதில்தான் அவர்களது மனம் ஒரு முடிவை எடுக்கும்.. குறிப்பாக, படிப்பில் கவனம் செலுத்துவதா, விளையாட்டில் ஈடுபட போகிறார்களா, ரவுடியாக மாற போகிறார்களா? என்பதெல்லாம் அந்த குறிப்பிட்ட வயதில்தான் முடிவாகும்.. அப்படி முடிவாகும் ஒரு சதவீதம்தான் இந்த ஜாதி.
இன்று பெருமளவு சாதி பிரச்சனை ஒழிக்கப்பட்டுவிட்டாலும், ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறது.. சிறிது காலம் அமைதியாக இருந்துவிட்டு, பிறகு திடீரென கிளம்பி மேலே வந்துவிடும்.. எனவே, சாதியை ஆசிட்டை ஊற்றி முற்றிலுமாக அழிக்காவிட்டால், அது மேலெழும்பவே செய்யும்.. ஆனால், இங்கே ஓட்டுக்காக ஜாதிக்காரர்களிடம்தான் போய் நிற்கிறார்கள்..
ஜாதிக்கயிறு - கலர்கள்
கையில் ஜாதிக்கயிறு கட்டினால், அவர்களை விசாரணைக்குட்படுத்த வேண்டும்.. அப்படி கட்ட சொன்னது யார் என்பதை கேட்டு, அவர்களையும் தண்டிக்க வேண்டும். அப்போதுதான் இதைபார்த்து மற்றவர்கள் பயப்படுவார்கள்.. எந்த சாதியாக இருந்தாலும்சரி, தங்களது ஜாதி பெருமையை பேசுபவர்களை கட்டுப்படுத்தினால்தான், ஜாதி பிரச்சனைகள் கட்டுக்குள் வரும்..
ஒவ்வொரு சாதிக்கும் அவரவர்களே கயிறு தேர்ந்தெடுத்து கொள்கிறார்கள்.. அந்த கயிற்றின் நிறத்திக்கான அர்த்தமும் தெரியாது.. நெல்லையில்தான் இது பெருமளவு இருக்கிறது..
கோபி சுதாகருக்கு மிரட்டல்?
இங்கு மன்னர்கள் காலத்திலிருந்தே சாதிக்காக செய்யப்பட்ட கொலைகள் அதிகம்.... ஆவேசத்தில் கொலை செய்துவிட்டு, வாழ்க்கையையும் முழுமையாக தொலைத்துவிட்டு, ஜெயிலுக்கு சென்று வருத்தப்பட்டவர்கள் ஏராளம் பேர் உண்டு..
தற்போது சோஷியல் பரிதாபங்கள் வீடியோ வெளியிட்ட கோபி, சுதாகருக்கு மிரட்டல்கள் வர வாய்ப்பில்லை.. ஏனென்றால், இது சமூக பொறுப்பான வீடியோவாகும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications