Yuvan: மயில் போல பொண்ணு ஒன்னு.. தேவயானி மகள் பாடிய பாடல்! கலங்கிய யுவன்! உருக்கமாக சொன்ன விஷயம்
சென்னை: இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சமீபத்தில் ரசிகர்களை சந்திக்கும் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சிக்கு வந்த தேவயானியின் மகள் இனியா பாடிய பாடலை கேட்டு யுவன் சங்கர் ராஜா நொறுங்கி போய் இருக்கிறார்.
யுவன் சங்கர் ராஜா இளையராஜாவின் மகன் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இளையராஜா ஒருவிதமான பாடல்களை கொடுத்தால் யுவன் சங்கர் ராஜா தன்னுடைய ஸ்டைலில் வேறு விதமான பாடல்களை கொடுத்து இருக்கிறார். சோகமா, காதலோ, சந்தோஷமோ, வெற்றியோ எதுவாயிருந்தாலும் இளையராஜாவின் பாடல்கள் ஆறுதலாக இருக்கும். அதே போல யுவன் சங்கர் ராஜாவும் நானும் சலித்தவர் அல்ல என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

இளையராஜா 80ஸ் காலகட்டத்தில் இருந்து இப்ப வரைக்கும் தொடர்ந்து இசை அமைத்துக் கொண்டிருக்கும் நிலையில் யுவன் சங்கர் ராஜாவின் பாடல்களுக்கு 2 k கிட்ஸ்களும் அதிகமான ரசிகர்களாக இருக்கின்றனர். அவருடைய பாடல்கள் தங்களுடைய மனதிற்கு எந்த அளவிற்கு ஆறுதல் கொடுக்கிறது என சமீபத்தில் ஒரு ரசிகர்கள் சந்திப்பு விழாவில் பேசியிருந்தனர். அப்போது அந்த விழாவில் யுவன் சங்கர் ராஜாவிற்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் தேவயானியின் மகள் இனியாவும் கலந்து கொண்டார்.
இனியா சரிகமப நிகழ்ச்சியில் ஆரம்பத்திலேயே பவதாரணி பாடிய மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலை பாடி தான் மக்கள் மனதில் இடம் பிடித்திருந்தார். இப்போது யுவன் சங்கர் ராஜாவின் முன்பு அவருடைய சகோதரி பவதாரணி பாடிய மயில் போல பாடலை இனியா பாட அதைக் கேட்டு யுவன் சில நிமிடங்கள் எதுவும் பேசாமல் எமோஷனலாக இருந்தார். பிறகு பவதாரணி பற்றிய சில நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார்.
அக்காவை எப்போதும் எங்களால் மறக்க முடியாது. அவர் எப்போதும் எங்கு கூட தான் இருக்கிறார். அதிலும் எனக்கு அவங்க எப்போதுமே ஸ்பெஷல். நானும் பவதாரணியும் ஒரு முறை வெளிநாட்டில் தொலைந்து போய்விட்டோம். அப்போ கூட அக்கா அழுதுட்டு இருந்தாங்க. நான் சொன்னேன் நீ வருத்தப்படாத இனி நாம ஸ்கூலுக்கு எல்லாம் போக வேண்டாம் ஜாலியா இருக்கலாம் என்று சொன்னேன் அதை எல்லாம் மறக்க முடியாது என்று தன்னுடைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
அதுபோல தன்னுடைய முதல் ஆசானும் என்னுடைய அக்கா தான் என்று பல இடங்களில் யுவன் சங்கர் ராஜா பேசி இருக்கிறார். மேலும் அந்த நிகழ்வில் யுவன் சங்கர் ராஜாவுடன் இனியாவும் சில பாடல்களை சேர்ந்து பாடி இருந்தார். இந்த வீடியோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications