Ilaiyaraja: என் கல்யாணத்திற்கு அப்பா வராதது ஏன்? இளையராஜா குறித்து யுவன் ஓபன் டாக்!
சென்னை: நான் மதம் மாற போவதாக அப்பாவிடம் சொன்ன போது அவர் சொன்னது என்ன தெரியுமா? அது போல் எனக்கு நாளை திருமணம் என்ற போதும் இன்று அப்பாவுக்கு போன் போட்டு அழைத்தேன். அதற்கு அவர் சொன்னது என்ன என்பது குறித்து இளையராஜா மகன் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து யுவன் சங்கர் ராஜா, பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: எனது திருமணம் திடீரென நடந்தது. ஊருக்கு போயிருந்தேன். அடுத்த நாள் கல்யாணம். அப்போது என் அப்பாவுக்கு போன் செய்து, "அப்பா எனக்கு நாளை திருமணம்" என்றேன்.

அதற்கு அப்பா, "நான் அங்கு வருவேன், ஒன்றும் பிரச்சினையில்லை. அப்படி நான் வந்தால் மத்தவர்களுக்கு awkward ஆ இருக்கும். நான் அதை விரும்பவில்லை. நீ திருமணம் செய்து கொண்டு என்னை வந்து பார்" என்றார். நாங்கள் திருமணம் முடித்துக் கொண்டு அப்பாவை பார்க்க சென்றோம்.
நான் வேறு மதத்திற்கு மாறுகிறேன் என என் தந்தையிடம் சொன்னேன். இதே மற்ற அப்பாக்கள் என்றால், மதம் மாறக் கூடாது என நமக்கு எதிராக பேசுவார்கள். ஆனால் என் அப்பா எதிர்க்கவில்லை. என்னை புரிந்து கொண்டார். இதை எதிர்த்தவர்களிடம் கூட, "அவன் (யுவன்) அஞ்சி வேளை தொழுகை செய்ய நினைக்கிறான். இதில் என்ன இருக்கு. அவனை அவன் இஷ்டத்திற்கு விடுங்க" என்றார்.
சிறிய வயதில் நான் நிறைய சேட்டை செய்வேன். கார்த்திக் மிகவும் அமைதியாக இருப்பார் என யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார். இளையராஜாவின் இரு மகன்களில் அதிக படங்களுக்கு இசையமைத்தவர் யுவன். இவருக்கு சிறிய வயதில் இசையமைப்பாளராக வர வேண்டும் என்ற ஆசையே வரவில்லையாம்.
அவருக்கு பைலட்டாக வேண்டும் என்பதுதான் ஆசையாக இருந்ததாம். ஆனால் ஏ.ஆர்.ரகுமானின் பாடல்கள் இளைஞர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இனி ஏ.ஆர்.ரகுமான்தான். இளையராஜா அவ்வளவுதான் என யுவனின் நண்பர்கள் நிறைய பேர் சொன்னார்களாம். அந்த கோபத்தில்தான் அவர் இசையமைக்க வேண்டும் என முடிவெடுத்தாராம்.
யுவன் சங்கர் ராஜா 5 வயதிலேயே டியூன் போட்டாராம். 5 வயதில் யுவன் போட்ட டியூனை காப்பி அடித்து ஆனந்த் படத்தில் போட்டதாக இளையராஜா சொல்லியிருக்கிறார். யுவன் சங்கர் இசையமைக்க நிறைய நேரம் எடுத்துக் கொள்வார். அவரை தொடர்பு கொள்வது சிரமம் என்பதால் இயக்குநர்கள் பலரும் யுவனை அணுகுவதில்லையாம்.












Click it and Unblock the Notifications