தூக்கு துரைன்னா அடாவடி...தூக்குத் துரைன்னா அலப்பற.. வருது பாரு ஜீ சினி அவார்ட்!
சென்னை:ஜீ தமிழ் டிவி திரையின் திருவிழா என்று சினி அவார்ட்ஸ் 2020 வருடத்துக்கான விருதை வழங்க உள்ளது. அதற்கான நாமினிகளை அறிவித்து வோட்களை வழங்குமாறு அறிவுறுத்தி வருகிறது.
முதலில் கதாநாயகர்களுக்கான நாமினிகளை டான்ஸ் ஜோடி டான்ஸ் மேடையில் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் தீபக், பெர்லி அறிவித்தார்கள்
முன்னதாக அகர வரிசையின் படி நடிகை சிநேகா, பூஜா, பிரியா ராமன் முன்னிலையில்அஜித் குமார் ஏகப்பட்ட அளப்பறைகளுடன் அறிவிக்கப்பட்டார்.

அடாவடி அலப்பற
தூக்குத் துரைன்னா அடாவடி... தூக்குத் தொரன்னா அலப்பற என்கிற அந்த வசனம் காட்சிகளுடன் விஸ்வாசம் காட்சிகள் ஒளிபரப்பாக அஜீத் கதாநாயகன் முதல் நாமினியாக அறிவிக்கப்பட்டார். அஜித் 2020 கதாநாயகனாக தேர்தெடுக்கப் பட்டால் விழாவுக்கு வருவாரா என்கிற எதிர்ப்பார்ப்பும் ஆவலும்தான் எழுகிறது. அஜித் இதை உதாசீனப் படுத்தாமல் வர வேண்டும்.

நடிகர் தனுஷ்
அடுத்த கதாநாயக நாமினியாக அறிவிக்கப்பட்டார் நடிகர் தனுஷ். தனுஷ் பற்றி நடிகை சிநேகா கூறுகையில் நடிப்பின் பரிமாணத்தை வேற ஃபிளேவருக்கு கொண்டு சென்றவர் நடிகர் தனுஷ் என்று சொன்னார். படம் இப்படித்தான் இருக்கும், தனுஷ் இப்படித்தான் நடிப்பார் என்கிற எதிர்பார்ப்பில் படத்தை பார்க்காமல் பிளெயிண்டாக தைரியமாக படம் பார்க்கலாம் என்று சார்ட்டிஃபிகேட் கொடுத்தார் சிநேகா.

உள்ள இருந்தது
பத்து வருஷம் உள்ள இருந்தது மட்டும்தான் சார் தெரியும் எதுக்கு இருந்தேன்னு தெரியாது சார்னு சொல்லிகிட்டே லாரியில் இருந்து குதிக்கும் கைதி பட நடிகர் கார்த்தி அடுத்த நாமினி. இவர் ஆல் டைம் பிடித்த நடிகர் என்று சிநேகா கூறினார். ஒரு ராத்திரியில் கதையாக எடுத்த கைதி அண்மையில் தீபாவளி வெற்றி படம்

என்ன கேட்டகிரி
அடுத்து சூப்பர் ஸ்டார் படம் பேட்ட வந்தபோது, நடிகை பிரியா ராமன் சொன்னார் அவரை போயி இந்த கேட்டகிரியில் போட்டு வச்சு இருக்கீங்க.. அவரே ஒரு தனி கேட்டகிரி என்று சொன்னார். அவரே ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் சூப்பர் ஸ்டார் என்று சொன்னார்.
சிவ கார்த்திகேயன், காப்பான் சூர்யா என்று இன்னும் சில நடிகர்களையும் ஜீ தமிழ் டிவி தனது ட்வீட்டர் வலைத் தளத்தில் நாமினிஸாக அறிவித்து பதிவிட்டு உள்ளது.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications