எழுத்தாளர்களுக்கான வாய்ப்பு.. ஜீ நிறுவனம் தொடங்கிய புதிய முயற்சி.. 100 பேரின் வாழ்க்கை மாறப்போகுது
சென்னை: நாடு முழுவதும் உள்ள இளம் மற்றும் வளர்ந்து வரும் திரைக்கதை எழுத்தாளர்களைக் கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில், ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் (ZEEL) நிறுவனம் 'ஜீ ரைட்டர்ஸ் ரூம்' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்நிறுவனம் தொலைக்காட்சி, டிஜிட்டல் மற்றும் சினிமா போன்ற அதன் பல்வேறு தளங்களில் புதிய கதைகளை உருவாக்க வாய்ப்பளிக்கும் வகையில், திறமையான எழுத்தாளர்களுக்கு களம் அமைத்துத் தருகிறது. இந்த முயற்சியின் மூலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்கம் மற்றும் மராத்தி ஆகிய மொழிகளில் திறமையாளர்களைக் கண்டறிய ZEEL நிறுவனம் 80 நகரங்கள் மற்றும் 32 மையங்களில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளது.

தலைமை அதிகாரி
இது குறித்து ZEEL நிறுவனத்தின் தலைமை கிரியேட்டிவ் அதிகாரி ராகவேந்திரா ஹுன்சூர் கூறுகையில், "இது ஒரு போட்டி அல்ல, இது ஒரு அர்ப்பணிப்பு. புதிய குரல்கள், புதிய உணர்வுகள் மற்றும் இதுவரை சொல்லப்படாத கதைகள் நம்மை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கின்றன. எழுத்தாளர்களுக்கு தேவையான கருவிகள், ஊக்கம் மற்றும் வாய்ப்புகளை வழங்குவதே எங்கள் நோக்கம்" என்றார்.
எழுத்தாளர்களுக்கான வாய்ப்பு
ZEEL நிறுவனத்தின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி கார்த்திக் மகாதேவ் இதுகுறித்து கூறுகையில், "ஜீ ரைட்டர்ஸ் ரூம் மூலம், கதைகளை உருவாக்கும் ஒரு சமூகத்தை நாங்கள் கட்டமைக்க விரும்புகிறோம். கதைகள் சொல்ல விரும்பும் ஆர்வமுள்ள எழுத்தாளர்களுக்கான கதவுகளை நாங்கள் திறந்து வைக்கிறோம்" என்று தெரிவித்தார்.
கலாச்சாரம்
தென்னிந்திய கதை சொல்லும் கலாச்சாரம் மிகவும் வலிமையானது என்று குறிப்பிட்ட ZEEL நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை தொகுப்பு அதிகாரி சிஜு பிரபாகரன், இந்த முயற்சி அந்த ஆர்வத்தை ஒரு தொழில் வாய்ப்பாக மாற்றும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
புதிய தளம்
மேலும், வங்கம் குறித்து ZEEL நிறுவனத்தின் தலைமை தொகுப்பு அதிகாரி சாம்ராட் கோஷ் கூறுகையில், "வங்க எழுத்தாளர்களுக்கான ஒரு புதிய தளமாக ஜீ ரைட்டர்ஸ் ரூம் இருக்கும்" என்று குறிப்பிட்டார்.
இந்த திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் 100 நபர்களுக்கு, ஜீ நிறுவனத்தின் வழிகாட்டுதலின் கீழ் கதைகளை உருவாக்குவது, எழுதுவது மற்றும் திரைக்கதைகளாக மாற்றுவது குறித்த பயிற்சி அளிக்கப்படும்.
தேர்வு நடைமுறை:
எழுத்துத் தேர்வு
சமர்ப்பித்த படைப்புகள் மதிப்பீடு
நேர்காணல்
இறுதியில், 100 பேர் ஜீ ரைட்டர்ஸ் ரூமில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
👉 பதிவு செய்ய: www.zeewritersroom.com
Zee Writers' Room-ல் சேர்ந்து உங்கள் கதைகளை இந்தியாவுடன் பகிருங்கள்!
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications