ஒவ்வொன்றும்ரு விதம்...ஆனாலும் பரவசம் தான்....ஜீ தமிழ் இளவரசிகளின் கொண்டாட்டம்
சென்னை : விதவிதமாக அசத்தி இருக்கும் ஜீ தமிழின் கதாநாயகிகளின் லேட்டஸ்ட் போட்டோஸ்கள் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.
ஓணம் பண்டிகையை வெகு சிறப்பாக கொண்டாடி தோழிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து போட்ட ஆட்டத்தை பார்த்து ரசிகர்களால் வாழ்த்துக்களை கூறாமல் இருக்க முடியவில்லையாம்
ஷபானா, ரேஷ்மா, சைத்ரா ரெட்டி மட்டும் நட்சத்திரா இவர்கள் எல்லாம் சேர்ந்து தன்னுடைய ரசிகர்களுக்கு ஓணம் பண்டிகை வாழ்த்துக்களை ஒய்யாரமாக பகிர்ந்து வருகிறார்கள்.

அழகு பட்டாம்பூச்சிகள் தான்
ஓணம் பண்டிகையை கேரள மக்கள் மட்டுமல்லாமல் அனைத்து மக்களுமே தற்போது கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் சீரியல் நடிகைகள் பலர் ஓணம் பண்டிகையை கொண்டாடி தங்களுடைய ரசிகர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதிலும் ஜீ தமிழின் செல்ல இளவரசிகளான செம்பருத்தி சீரியலில் ஷபானா, பூவே பூச்சூடவா சீரியலின் ரேஷ்மா, யாரடி நீ மோகினி சீரியலின் சைத்ரா ரெட்டி, மற்றும் நட்சத்திரா அனைவரும் சேர்ந்து அழகாக ஓணம் பண்டிகையை கொண்டாடி இருக்கின்றனர். இவர்கள் எப்போதுமே ஒன்றாக சுற்றித்திரியும் பட்டாம்பூச்சிகள் தான். நடிப்பையும் தாண்டி இவர்கள் நண்பர்களாக வலம் வந்து கொண்டிருப்பதை பார்த்து பலபேர் இவர்களை போல நாமும் ஜாலியாக இருக்க முடியவில்லையே என்று பீல் பண்ணியும் வருகின்றனர். பொதுவாக பெண்கள் ஸ்கூல், காலேஜ் படிக்கும்போது வரைக்கும் ஒன்றாக நண்பர்களாக இருக்கும் தோழிகளை எல்லாம் காலேஜ் முடித்து திருமணதிற்கு பிறகு தொடர முடியவில்லை என்றுதான் பலர் பீல் பண்ணி கொண்டு இருக்கின்றனர். ஆனால் இவர்கள் எப்போதுமே ஒன்றாக சுற்றித் திரிவதை பார்க்கும் போது பலருக்கு வருத்தமாகவும் சிலருக்கு ஆனந்தமாகவும் இருக்கிறது.

பார்க்கும் போது ஏக்கம் கூடுது
இவர்கள் நான்கு பேரும் ஒன்றாக இருந்தாலே அந்த இடத்தில் சந்தோஷத்திற்கும் கலவரத்திற்கும் பஞ்சமே இருக்காதாம். அந்த மாதிரிதான் இவர்கள் ஜாலியாக லூட்டி அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் இவர்கள் எப்போதுமே கலகலப்பாக இருந்து கொண்டு தங்களை சுற்றியிருப்பவர்களையும் கலகலப்பாக மாற்றி விடுவார்களாம். சூட்டிங் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் ப்ரீயாக கிடைக்கும் நேரத்தில் அடிக்கடி அவுட்டிங் சென்று காடு, மலை என பல இடங்களிலும் ஃபோட்டோஷட் எடுப்பது இவர்களுடைய பொழுதுபோக்கு. அப்படி தாங்கள் எடுக்கும் போட்டோக்களை தங்களுடைய இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளத்தில் அடிக்கடி பதிவிட்டு வருவார்கள். இவர்களுடைய போட்டோஸ்கள் தான் பல ஸ்கூல் காலேஜ் வாட்ஸ்அப் குரூப்களில் டிபி ஆக கூட இருக்கிறதாம். அதுமட்டுமல்லாமல் நண்பர்கள் தினம் போன்ற ஜாலியான நாட்கள் வந்துவிட்டாலே இவர்களுடைய போட்டோக்களை வைத்து ரசிகர்கள் வீடியோக்களை எடிட் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். அந்த வீடியோக்களும் கூட வைரலாக வலம் வந்துகொண்டுதான் இருக்கிறது.

ஜாலியான லூட்டி தான்
இவர்களின் குரூப்பில் சைத்ரா ரெட்டிக்கு மட்டும் தான் திருமணம் முடிந்து இருக்கிறது. தற்போது சஹானாவும் ரகசியமாக எங்கேஜ்மென்ட் முடிந்துவிட்டது என்று செய்திகள் பரவிக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ரேஷ்மாவும் விஜே மதனுடன் விரைவில் திருமணம் என்று கூறிவிட்டார். இன்னும் நட்சத்திரா மட்டும்தான சிங்கிளாக இருக்கிறார். ஆனாலும் இவர்கள் அனைவரும் எப்போதுமே ஜாலியாக லூட்டி அடித்துக் கொண்டு தான் இருக்கின்றனர். திருமணத்திற்குப் பிறகும் தங்களுடைய நட்பு எந்த ஒரு மாற்றமும்
ஏற்படாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர். இவர்களுடைய பல ரீல்ஸ் வீடியோகளிலும் பல காமெடி அட்ராசிட்டி தான் நடந்து கொண்டு இருக்கிறது. அதிலும் அதிகமாக நட்சத்திராவும், சைத்ரா ரெட்டியும் பலர் ரீல்ஸ் விடியோஸ்களை தங்களுடைய இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்கள். ஆனால் இவர்கள் இருவரும் யாரடி நீ மோகினி சீரியலில் கதாநாயகியும், வில்லியுமாக கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். தற்போது இந்த சீரியல் முடிவடைய போகும் நிலையில் மீண்டும் இவர்கள் ஒன்றாக நடிப்பார்களா? என்றுதான் ரசிகர்கள் ஆர்வமாக கேட்டு வருகின்றனர். இதில் சைத்ரா ரெட்டி சன் டிவியில் கயல் என்னும் சீரியல் கதாநாயகியாக நடிக்க இருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

குவியும் வாழ்த்துக்கள்
இவர்கள் நான்கு பேரும் ஒன்றாக இருப்பதை பார்க்கும்பது ஜீ தமிழில் ஏதேனும் மகா சங்கமம் போட்டு விட்டார்களா என்று நினைக்கத் தோன்றுகிறது. அந்த அளவிற்கு எல்லா சீரியல் கதாநாயகிகளும் ஒன்று கூடி கும்மி அடிக்கிறார்கள். தற்போது இன்ஸ்டாகிராமில் இவர்களுடைய லேட்டஸ்ட் போட்டோஸ்கள் வைரலாகப் பரவி வந்தாலும், இதை இவர்கள் யாருமே தங்களுடைய இன்ஸ்டாகிராம் ஐடியில் போஸ்ட் பண்ண வில்லை. ஆனால் ரசிகர்கள் பக்கங்களில் மட்டுமே இது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதிலிருந்தே இவர்கள் நான்கு பேருக்கும் எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும் இவர்களுக்கு வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்களின் மனது ரொம்பவே பெரியதுதான்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications