ஜீ தமிழில் அயலி சீரியலில் கதாநாயகியாகும் நடிகை கஸ்தூரி.. ஆரம்பமே அசத்தல் தான்! ஆனாலும் டுவிஸ்ட் இருக்கு!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக விளங்கி வருகிறது ZEE தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களும் ரியாலிட்டி ஷோக்களும் தொடர்ந்து மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் வரும் ஜூன் -ம் தேதி முதல் அயலி என்ற பெயரில் புத்தம் புதிய சீரியல் ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது, மேலும் இந்த சீரியல் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தொலைக்காட்சி சேனலும் மக்களை கவரும் வகையில் தொடர்ந்து புதிய நிகழ்ச்சிகளையும் சீரியல்களையும் ஒளிபரப்ப தொடங்கி வருகிறது. அயலி சீரியலில் நாயகியாக "வித்யா நம்பர் 1" சீரியல் புகழ் தேஜஸ்வினி நடிக்க அவருக்கு ஜோடியாக நினைத்தாலே இனிக்கும் சீரியல் புகழ் ஆனந்த் செல்வன் நடிக்கிறார். மேலும் பல முக்கிய பிரபலங்கள் இணைந்து நடிக்க உள்ளனர்.

அயலி சீரியல் ப்ரோமோ
அம்மாவை இழந்த அயலி தனது சித்தியால் வீட்டில் வேலைக்காரி போல் நடத்தப்படுகிறாள். இருப்பினும் அம்மா சொன்ன வார்த்தைக்காக தனது குடும்பத்தை பெரிதாக மதிக்கிறார். மேலும் அயலிக்கு குடும்பத்துக்கு தெரியாத இன்னொரு முகமும் உண்டு. அதாவது Undercover COP- ஆகவும் வேலை செய்கிறாள்.
அயலி சீரியலின் கதை
இவளது உண்மை முகம் வீட்டிற்கு தெரிய வருமா? இவளது குடும்பம் அயலியின் அன்பை புரிந்து கொள்ளுமா? அயலி தன் அம்மா மீது விழுந்த பழியை போக்குவாளா? என்பது தான் பல கோணங்களை கொண்ட இந்த சீரியலின் கதை.
போலீசாக நடிகை கஸ்தூரி
வரும் ஜூன் 2-ம் தேதி முதல் இரவு 8:30 மணிக்கு புத்தம் புதிய அயலி மெகாத்தொடரை ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது. அதுபோல இந்த சீரியலில் கதாநாயகியின் அம்மாவாக நடிகை கஸ்தூரி நடிக்கிறார். கஸ்தூரி போலீஸ் கேரக்டரில் இந்த சீரியலில் நடிக்கிறார். நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருக்கும் கஸ்தூரியின் மகள்தான் கதாநாயகி. ஆனால் கஸ்தூரி இறந்து போய்விடுவது போன்று காட்சிகள் இருக்கிறது.

சஸ்பென்ஸ் கதை
தன்னுடைய அம்மா ஆசைப்படி கதாநாயகி போலீசாக மாறுகிறார். ஆனால் குடும்பத்தினர் கதாநாயகியை எவ்வளவு அசிங்கப்படுத்தினாலும் அதை எல்லாம் பொறுத்துக் கொள்வதற்கு என்ன காரணம் என்பது சஸ்பென்சாக வைக்கப்பட்டிருக்கிறது. தற்போது பல சீரியல்களில் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலின் கதை வித்தியாசமாக இருக்கிறது. ஆனாலும் கதை மக்களை கவர போகிறதா? அல்லது சொதப்ப போகிறதா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications